கூத்தாடிகளை கொண்டாடாதீர்...........
சமீபத்தில் ஊழல் வழக்கில் சிக்கி பிணையில் வெளி வந்திருக்கும் ஒரு கட்சி தலைமைக்கு நடந்த வரவேற்பு கூத்தும் அதை ஒளிபரப்பிய அந்த கட்சி சார்ந்த ஒரு தொலைக்காட்சியும் மற்றும் அந்த கட்சி தலைமைக்கு அடிவருடும் மற்றுமொரு கூட்டமும் "வானம் வரவேற்றது" "பூமி புடுங்கிடிச்சு", "நாடி நட்டுக்கிச்சு" என்று வாழ்த்துப்பா பாடி மக்களை வதைத்தார்கள்.
கூத்தாடிகள் தங்களது சுயநலத்திற்காக அரியணையில் எவர் இருக்கிறாரோ அவர்களை நாலு காலில் மண்டியிட்டு நாக்கு தள்ள லாவணி பாடுவது ஒன்றும் இந்த கேடுகெட்ட தமிழகத்திற்கு புதியதல்ல.
அதன் உச்சகட்டமாக உச்ச நடிகரின் வாழ்த்து இப்பொழுது வலைதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.
யூ டூ......................உச்சம்.
ஒரு மலேசியா கூட்டத்தில் நடிகவேள் பேசியது நியாபகத்திற்கு வருகிறது.
"நாங்களெல்லாம் கூத்தாடி பசங்க, ஏதோ நாங்க நடிக்கும் நடிப்பை பார்த்து கைதட்டுங்க. உங்க கிட்ட காசு வாங்கிக்கிட்டுதான் நடிக்கிறோம். அதால் ஏதோ கைத்தட்டிட்டுப் போங்க. அத விட்டு விட்டுட்டு மன்றம் ஆரபிக்கிறேன், கட்சி ஆரம்பிக்கிறேன்னு வராதீங்க. நடிகன் எல்லாம் நாட்ட ஆண்டா நாடு உருப்படாது".
ராதா ஒரு தீர்க்கதரிசி.
இன்னும் கூத்தாடிகளையே நம்பி, அவர்கள் பின்னே சென்றுகொண்டிருக்கும் இந்த தமிழ் கூறும் கேடுகெட்ட சமுதாயத்தை என்ன சொல்வது.
"கஞ்சி குடிப்பதற்கில்லார்
அதன் காரணங்கள் எவை என்று
அறியுமில்லார்"
மோடி சுனாமி
நடந்து முடிந்த மகாராஷ்டிரம், ஹரியான சட்டமன்றத் தேர்தல்களில் பி.ஜே.பி வெற்றிவாகை சூடி இருக்கிறது. மகாராஷ்டிரத்தில் தனிபெருங்கட்சியாக இருந்தாலும் ஆட்சி அமைக்க இன்னும் இருபது முப்பது சீட்டுகளை பெற வேண்டிய நிர்பந்தம். ஆதலால் இங்கு அமீத்ஷா சொல்வதுபோல் சுனாமி அடிக்கவில்லை.
ஹரியானாவில் வேணுமென்றால் சொல்லிக்கொள்ளலாம்.
இருந்தாலும் பி.ஜே.பி தென்னகத்தில் கால்பதிப்பது சந்தேகமே. அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை.
எந்த நடிகரை நம்பி களம் இறங்கினாலும், பின்னர் சேற்றை பூசிக்கொள்வது நிச்சயம்.
ரசித்த கவிதை
ராமவாணம் ஒளிரும் கணம்
நன்றி: ஜான் சுந்தர்.
ஜொள்ளு

சிவப்பு விளக்கொளியில் நின்று
குதிரைகள் உறும
நின்று நடுங்கும் தேர்களின்
பின்னெழும்பும் புகை நடுவே
திடுமெனக் காட்சியளிக்கும்
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி
முனைமுறியா பாணங்களை
லாகவமாய் உருவி
சரஞ்சரமாய்த் தொடுக்கிறார்
குதிரைகள் உறும
நின்று நடுங்கும் தேர்களின்
பின்னெழும்பும் புகை நடுவே
திடுமெனக் காட்சியளிக்கும்
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி
முனைமுறியா பாணங்களை
லாகவமாய் உருவி
சரஞ்சரமாய்த் தொடுக்கிறார்
சுவாசம் முட்டி வரும்
கோபியருக்கு மாத்திரம்
சைக்கிளில் தொங்கும்
அம்பறாத்தூணியிலிருந்து
நறுமணத்தையள்ளி அவர் வழங்க
கோபியருக்கு மாத்திரம்
சைக்கிளில் தொங்கும்
அம்பறாத்தூணியிலிருந்து
நறுமணத்தையள்ளி அவர் வழங்க
மன்மதக் கணைகளை
முழக்கணக்கில்
பெற்றுக்கொண்டிருந்தவர்களில் ஒருத்தி
'மூர்த்தியண்ணா எனக்கு ஜாதிப் பூ’ என்ற கணத்தில்
சுங்கம் சிக்னலின் அத்தனை அம்புகளும்
ஒளிர்கிறது ராமர் பச்சையில்!
முழக்கணக்கில்
பெற்றுக்கொண்டிருந்தவர்களில் ஒருத்தி
'மூர்த்தியண்ணா எனக்கு ஜாதிப் பூ’ என்ற கணத்தில்
சுங்கம் சிக்னலின் அத்தனை அம்புகளும்
ஒளிர்கிறது ராமர் பச்சையில்!
நன்றி: ஜான் சுந்தர்.
ஜொள்ளு
Super... You have told correctly about the convicted person... and the actor....
ReplyDeletePlease change the name of your post as "Jollu Cocktail" instead of kalakkal Cocktail....!
ReplyDeleteஅனானி வருகைக்கு நன்றி.
ReplyDeleteசிறப்பான கருத்துக்கள்! நடிகர்களை இன்னும் எத்தனை காலத்திற்குதான் ரோல்மாடலாக நினைக்க போகின்றதோ தமிழகம் புரியவில்லை!
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சுரேஷ் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
ReplyDeleteரூபன் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
ReplyDelete