நான் பெங்களுரு போயி பல வருடங்கள் ஆகின்றன, இருந்தாலும் எப்படி அந்த பஸ்ஸிலிருந்து சரியாக அந்த இடத்தில் இறங்கினேன் என்று தெரியவில்லை.
நான் இறங்கிய பொழுது சூரியன் சுள்ளென்று சுட ஆரம்பித்துவிட்டான். நான் இறங்கிய இடத்திலிருந்து சிறை வளாகத்தை கண்டுபிடிப்பது ஊரே தெரியாத எனக்கு ஒன்றும் கடினமாகத் தெரியவில்லை. எனக்கு முன்பு வெள்ளை வேட்டி கருப்பு சட்டையில் தலையை மழுங்க மொட்டையடித்துக் கொண்டு சில கரை வேட்டிகள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பின் தொடர்ந்தேன். அவர்கள் பின்னால் ஒரு இருபதடி தள்ளிதான் நடந்து கொண்டிருந்தேன். இருந்தாலும் அந்தப் பழக்கப்பட்ட வாசம் என் நாசியைத் தாக்கியது. காற்று எதிர் திசையில் வந்துகொண்டிருந்தாலும் காலையிலேயே இந்த நாற்றத்தை எதிர் பார்க்கவில்லை.
சிறை வளாகத்திற்கு முன்பு உள்ள செக் போஸ்டில் அவர்களை விசாரித்து உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார் காவலர், பின்னாலயே நான் சென்றதால் காவலர் என்னை ஒன்றும் விசாரிக்கவில்லை. புல்வெளி எங்கும் ஒரே மொட்டை தலைகள் தென்பட்டன. இதில் வட்ட மொட்டை, மாவட்ட மொட்டை, கௌன்சிலர் மொட்டை என்பதை பாகுபடுத்துவதில் இயல்பாகவே எனக்கு ஒரு குழப்பம் இருந்தது. மொட்டைகளுக்கு சற்றே தள்ளி சில பெண்கள் இருந்தனர். அதில் ஒருத்தர் "சொர்ணாக்கா" போலவும், மற்றுமொருவர் மேக்கப் இல்லாத "ஓடத்தின் மேல் இருந்த பலானது" போல் தோன்றியது. சில சினிமா நூறு விழாவில் வந்து "அடிபோன ஆண்டிக்கோப்பை" பெற்ற முகங்களும் தெரிந்தன.
சற்றே தள்ளி மரத்தடியில் பிளாஸ்டிக் நாற்காலியில் சில தாடிகள் தென்பட்டன, சில காபி நிற தாடிகளும் சில சோன்பப்டி தாடிகளும் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்து பின்னர் தன்னிலை உணர்ந்து சோக முகத்தை மாட்டிக்கொண்டனர். பழைய அமைச்சர்கள் போலும்.
சிறைச்சாலையை நெருங்கும் முன் இருக்கும் மரத்தடியில் ஒரே கூட்டம். அங்கு சிலர் நான் வருவதைக் கண்டு "சார் மொட்டை முன்னூறு ரூபா, மொட்டை முன்னூறு ரூபா" என்று சொல்லிக்கொண்டிருந்தார். "சார் அலகு ஆயிரம், பால் காவடி பத்தாயிரம்" என்று மற்றுமொருவர் கூவிக்கொண்டிருந்தார். இதையெல்லாம் எனக்கு ஆராய நேரமில்லை. விறுவிறு என்று கட்டிடத்தின் முன் உள்ள கம்பிக்கிராதியைக் கடந்து கட்டிடத்தின் உள்ளே நுழைந்துவிட்டேன்.
"மக்கள் முதல்வரை" எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தேடிக்கொண்டு சென்றேன், 7402 என்று தேடினேன். தாழ்வாரத்தில் நாலைந்து எலிகள் நான் வருவதைக்கண்டு தமக்குள்ள ஏதோ "கீக் கீக்" என்று சொல்லி சிரித்தது போல் தோன்றியது. எது எப்படியோ "ஆத்தா" அறைக்குள் நுழைந்து ஏ. சி. இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று அறையைத்தேடினேன். அந்த இடதுபுற அறையில் "ஆத்தா போல்" தோன்றியது.
ஹேய் ஹூ ஆர் யு? "ஆத்தா குரல் தான்.
வாட் டூ யூ வான்ட்?
எனக்கு என்னுடன் தான் பேசுகிறார் என்பதே உரைக்க சில நேரம் ஆகிவிட்டது.
"மேடம் நீங்க உருட்டுற ஊதுபத்தில ஒரு பாக்கெட் கொடுங்க"
வாட்?
"இல்ல மேடம் நீங்க ஊதுபத்தி" என்று ஆரம்பிக்கும் முன்னே.
"வாட் நான்சென்ஸ்" என்று ஒரு விரலை உயர்த்தி "பிச்சு புடுவேன் பிச்சி" என்று சட்டசபையில் கேப்டனை மிரட்டுவது போல் கையை உயர்த்தினார்.
அதற்குள் இரண்டு மூன்று பெண் கான்ஸ்டபிள்கள் கன்னடத்தில் ஏதோ சொல்லிக்கொண்டு என்னை பிடிக்க வந்தார்கள்.
ஐயோ இவர்களிடம் மாட்டினால் நமக்கு "ஜாமீன் என்ன நெத்திலி மீன்" கூட கிடைக்காது என்று வேர்க்க விறுவிறுக்க கம்பிக்கிராதியை நோக்கி ஓடினேன், வழியில் இரண்டு மூன்று எலிகள் என் காலில் மிதிபட்டு தக்காளி சட்னி போல் ஆனதெல்லாம் எனக்கு தெரியவில்லை.
இவர்கள் கையில் மாட்டக்கூடாது என்று "ஓடினேன் ஓடினேன் சிறையின் ஓரத்திற்கே ஓடினேன்". அப்படியும் ஒரு பெண் போலிஸ் வந்து என் கழுத்தில் கை வைத்தார்கள்.
"என்னை விடுங்க என்னை விடுங்க.............ஐயோ விட்ருங்க" என்று கத்தினேன்.
"எழுந்திருங்க என்ன கனவு ஆபிஸ் போகவேண்டாம், நைட்ல கண்டத்த குடிக்க வேண்டியது, அப்புறம் ஐயோ, அம்மா, அப்பா என்று காலையில் கத்த வேண்டியது எழுந்திருங்க, பாத்திரத்த கழுவிட்டு, துணிய துவைச்சிட்டு ஆபிஸ் போக வேண்டிய வேலையைப் பாருங்க" என்று குரல் வரவே அடுத்த பாத்திரம் தலையில் விழும் முன்பு எழுந்து பாத் ரூமில் அடைக்கலமானேன்.

7 comments:
ஹாஹாஹா! செம காமெடி!
சுரேஷ் வருகைக்கு நன்றி.
ஐயா வருகைக்கு நன்றி.
அஹா ஒரே கவுச்சி வாடை.
அசோக்ராஜ் இன்னும் ஐந்துமாதம் கவுச்சி வாடை இருக்கும், பின்னர் மறுபடியும் விரதம்தான்.
அது என்ன 5 மாதம்?
பொறுத்திருந்து பாருங்கள்.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.