சென்னை அனுபவம்
கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் வாசம், அவசர வேலையாக விடுமுறையில் சென்று வந்தேன். இந்த மூன்று வாரங்களில் ஒரு இரண்டு நாட்கள் மழை பெய்தது, அப்படி ஒன்றும் பேய் மழையில்லை. இருந்தாலும் சென்னையின் சாலைகளின் நிலைமை படுமோசம். கோட்டூர்புரத்திலிருந்து செனடாப் சாலைக்கு மூப்பனார் பாலத்தின் மேல் ஏறாமல் சைடாக வந்தால் பாலத்திற்கு பீச்சாங்கைப் பக்கம் ஒரு பெரிய பள்ளம், கண்ட குப்பைகளைப் போட்டு தற்காலிகமாக மூடி வைத்திருக்கிறார்கள். அதை கவனிக்காமல் இருட்டில் வண்டியை விட்டால் சில்லறை கிடைப்பது நிச்சயம்.
சமீபத்தில் ரிப்பேர் செய்யப்பட்ட தெருக்கள் மறுபடியும் பல்லிளிக்க ஆரம்பித்து விட்டன. இந்த பேச் வொர்க் எல்லாம் வேலைக்கு ஆவாது. ஒவ்வொரு தெருவையும் அடியோடு நோண்டி எடுத்து புதிதாக கான்க்ரீட் போட்டு மெடல் வைத்தால்தான் அடுத்த மழை வரையாவது தாங்கும்.
இதெல்லாம் நடக்கிற கதையா?
எப்படியெல்லாம் அரசியல் செய்யுறாங்கப்பா?
சமீபத்தில் விடுவிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் திருச்சி விமான நிலையத்தில் காத்திருக்க அவர்களை சத்தம் போடாமல் டில்லிக்கு திருப்பிவிட்டது மத்தியில் ஆளுங்கட்சி. அங்கே சென்று கட்டிய லுங்கியுடன் மேடையில் அமரவைத்து அரசியல் நாடகம் ஆடி ஒரு வழியாக திருச்சி கொண்டு வந்து இறக்கினால் அங்கு மத்தியில் ஆளும் கூட்டமும் மாநிலத்தில் ஆளும் கூட்டமும் போட்டி போட்டுக்கொண்டு அவர்களை வரவேற்று அரசியல் நாடகமாடி அவர்கள் வீட்டாண்ட அம்போ என்று விட்டுவிட்டார்கள். இனி அவர்கள் தேவையில்லை. அடுத்த நாடகத்திற்கு காத்திருப்பார்கள்.
அந்த மீனவர்கள் இதற்கு மரணதண்டனையே மேல் என்று நினைத்திருக்கக்கூடும்.
ரசித்த கவிதை
வணக்கம்
"கோவை முகப்பில் உங்களை வரவேற்கும்
வாலாங்குளக் கோட்டைமேட்டுப்
பாலத்தின் முனையின்
கள்ளுக்கடைக்கு வணக்கம்.
அதன் வாசல் புழுதியில் கருப்பன்
காசு கொண்டுவரக் காத்திருக்கும்
நகரசுத்திப் பெண்ணுக்கும்
கள்ளுக்கடை சாராயக்கடை
வைன்ஷாப் முதலாளிகளுக்கும்
கொடைக்கானலில் படிக்கும் அவர் புதல்வருக்கும்
அவரின் புதிய கண்டேஸ்ஸா கார்களுக்கும்
வணக்கம்"
நன்றி: உமாமஹேஸ்வரி
ஜொள்ளு

5 comments:
சமூக அவலத்தை நன்றாக உறித்தீர்கள்
கில்லர்ஜி வருகைக்கு நன்றி.
மழைக்கு காலாவதியாகி விடுகின்றன எப்போதுமே சென்னை சாலைகள்! கவிதை அருமை! மீனவர்கள் விஷயத்திலும் விளம்பரம் தேடியது கொடுமை! நன்றி!
சுரேஷ் வருகைக்கு நன்றி.
TN & India will never change! Nor our politicians will allow ! 😑
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.