Saturday, 29 November 2014

எங்கு சென்று கொண்டிருக்கிறோம்?

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் எட்டாவது படித்துக்கொண்டிருக்கும் பள்ளி மாணவனை அதே பள்ளியில் +2 படித்த மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்த செய்தி  அதிர்ச்சி அளிக்கிறது.

பாஸ்கரன் என்ற மாணவனை கொலை செய்த மாணவன் மாரீஸ்வரனை (ஏற்கனவே மாணவிகள் கடத்தல் பலாத்காரம் முதலிய வழக்குகள் இவன் மீது இருப்பதாக சொல்லப்படுகிறது) இன்று போலீசார் கோவையில் வைத்து கைது செய்துள்ளனர். மாரீஸ்வரன் ஓரின சேர்க்கையாளன், அவன் பாஸ்கரனை உறவுக்கு அழைத்ததால் பாஸ்கரனின் பெற்றோர் காவல் துறையில் புகார் செய்யப்போக அதனால் கோபம் கொண்ட மாரீஸ்வரன் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்த மாணவ சமுதாயம்? படிக்கும் வயதில் இந்த வக்கிர என்னங்கள் வரக்காரணம் என்ன? நீதி நெறியை போதிக்க வேண்டிய கல்வி இப்பொழுது என்ன சொல்லிக்கொடுத்து கொண்டிருக்கிறது?  ஊடகங்கள் வியாபார நோக்கில் பிஞ்சுகளின் மனதில் தங்கள் பங்கிற்கு நஞ்சை விதைத்துக் கொண்டிருக்கின்றன. எங்கோ நடக்கும் ஓரிரு சம்பவங்களால் ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தைக் குறை கூற முடியாது. இருந்தாலும் இது போன்ற சம்பவங்களை கேட்கும் பொழுது இயல்பாகவே நாளைய சமுதாயத்தை பற்றியக் கவலை வராமல் இருக்க முடியாது.

ஊடகங்களுக்கும் இது போன்ற செய்திகள் தான் தேவைப்படுகிறது. எத்தனையோ பள்ளிகளில் எத்தனையோ மாணவர்கள் ஒழுங்காகப் பள்ளி வந்து  படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அதை செய்தியாகக் கொடுத்தால் யார் படிப்பார்கள் இல்லை பார்ப்பார்கள்? இதைப் போன்ற ஓரிரு செய்திகள்தான் அவர்களுக்கும் ஸ்கூப் நியூஸ்.

இருந்தாலும் இது போன்ற செய்திகள் மாணவ சமுதாயத்தின் மேல் உள்ள கவலையை அதிகரிக்க செய்கிறது. நீதி நெறியை போதிக்க வேண்டிய பெற்றோர்களும், ஆசிரியர்களுக்கும் இப்பொழுது நேரம் இல்லை. பெற்றோர்கள் பணத்தை துரத்திக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தங்களது பிள்ளைகளின் மதிப்பெண்கள்தான் முக்கியம். ஆசிரியர்களுக்கோ பள்ளிக்கூடத்தின் பெயரும் சம்பளமும் முக்கியம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்துகொண்டிருக்கிறார்கள். சிலர் அதையும் செய்யவில்லை எனபது வேறு விஷயம்.

நல்ல பழக்க வழக்கங்களையும் ஒழுக்கத்தையும் போதிக்கப் போவது யார்? குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொருவரும் தங்களை கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

Thulasidharan V Thillaiakathu said...

வேதனை தரும் நிகழ்வு. நம் மாணவர் சமுதாயம், ஆசிரியர்கள், கல்வி குறித்து நாங்களும் பதிவுகள் எழுதி வருகின்றோம் நண்பரே! இப்போதெல்லாம் நல்லொழுக்க வகுப்புகள் என்பதே இல்லாமல் போய்விட்டது...வீட்டிலும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேசுவது, நேரம் செலவழிப்பது எல்லாம் அற்றுப் போய், அவர்கள் என்ன செய்கின்றார்கள் யார் நண்பர்கள் என்பதையும் அறியாமல் ஆராயாமல் எதை நோக்கியோ வாழ்க்கைப் பயண,ம்.....அவலங்களும் வேதனைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனைக் குறித்து, முத்து நிலவன் ஐயா அவர்கள் புத்தகம் எழுதியிருக்கின்றார்கள். நண்பர் மது அவர்கள் உங்கள் குழந்தைகளின் நண்பர்கள் யார் என்ற தலைப்பில் பதிவு, தென்றல் கீதா அவர்களும் இந்தத் தற்கொலைகள் பற்றி பதிவு என்று சொல்லி வருகின்றார்கள்....ம்ம்ம்

நல்ல பதிவு ஆனால் வேதனையான ஒன்று...

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

மாணவர்கள் கைகளில் தவழும் செல்போன்கள்! இணைய இணைப்பு! பெற்றோர்களின் கவனமின்மை போன்றவை இப்போதைய மாணவர்களை பாழாக்கிக் கொண்டிருக்கிறது! நல்லபதிவு! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.