Thursday, 11 December 2014

பாரதியை நினைவுகொள்வோம்

டிசம்பர் 11, பாரதியின் பிறந்தநாள். இந்த நாளில் அவரது கவிகளில் சிலவற்றை மீண்டும் நினைவுகொள்வோம்.


 அன்பு செய்தல் 


இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?

வேறு


மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;

ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!




 சென்றது மீளாது 


சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதைகள்! பாரதி பிறந்தநாள் பகிர்வு சிறப்பு! நன்றி!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
செப்பிய வரிகள் கண்டு
சிந்தை குளிர்ந்தது...
மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
த.ம 1

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

மகிழ்நிறை said...

தேர்ந்தெடுத்த வரிகள் அருமை சகோ!

திண்டுக்கல் தனபாலன் said...

என்றும் நினைவில் நிறுத்த வேண்டியவை...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.