சொத்து குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைவாசம் என்று தீர்ப்பு வழங்கி இருபத்தியொரு நாட்கள் பரப்பான அக்ராஹார சிறையில் ஊதுபத்தி உருட்டிய பின் ஒரு வழியாக உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானது, சட்டசபையைக் கூட்டி "மம்மி" புகழ் பாடியது என்பதெல்லாம் செய்திகள், இதற்கெல்லாம் உச்சகட்டமாக "மம்மி" தலைமை மற்றும் அறிவுரை பேரில்தான் இந்த ஆட்சி நடக்கிறது என்று கூறி அதை அவைக்குறிப்பிலும் ஏற்றிவிட்டார்கள். ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி எப்படி ஆட்சிக்கு தலைமை தாங்கலாம்? மேலும் இது இந்திய ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் கேலிகூத்தாக்கும் செயல் என்று அரசியல் வல்லுனர்கள் சொல்வதெல்லாம் ஒரு பொருட்டாக யாருக்கும் தெரியவில்லை. மதுவில் மயங்கிக்கிடக்கும் தமிழக மக்களுக்கும் இது புரியப்போவதும் இல்லை.
வருமான வரி வழக்கில் பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு அபராதத்தொகையை செலுத்தி வழக்கிலிருந்து விடுபட்டு விட்டார்கள்!!!!!!!!!!!!!!
சொத்துக்குவிப்பு வழக்கில் டிசம்பர் 18 தேதிக்குள் மேல்முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கூறி ஜாமீன் வழங்கிய பின் இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல் போன்றிருந்தது. தற்பொழுது கொடுத்த கெடுவின் ஒரு வாரத்திற்கு முன்பாகவே மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கையேடு உச்ச நீதிமன்றத்தை அணுகி வழக்கை விரைவில் தொடங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்கள். அதை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது வேறு விஷயம்.
பதினெட்டு ஆண்டுகளாக வாய்தா மேல் வாய்தா வாங்கி, வழக்கு ஆவணங்கள் தமிழில் மொழி பெயர்த்து தரவேண்டும் என்றெல்லாம் சாக்கு போக்கு சொல்லி வழக்கை இழுத்தடித்தவர்கள் இப்பொழுது மேல்முறையீட்டை விரைவாக முடிக்க வேண்டும் என்று கோருவது சில சந்தேகங்களை எழுப்புகிறது.
யாரை பார்த்து என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்துவிட்டுதான் இந்த அவசரம் காட்டுகிறார்களோ என்று தோன்றுகிறது.
மொத்தத்தில் எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்து விட்டது...............என்னமோ போடா மாதவா.............
8 comments:
வணக்கம்
தன் வினை தன்னைச் சுடும் என்பது போல செய்த பலனை அறுவடை செய்தாக வேண்டும்.ஐயா
நன்றி
அன்புடன்
ரூபன்
இதுவும் நடக்கனும் நம்மலும் பார்க்கணுங்கிறதும் நம்ம தலையெழுத்துதான் நண்பரே...
நெஞ்சு பொறுக்குதிலையே..
\\ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி எப்படி ஆட்சிக்கு தலைமை தாங்கலாம்? \\
Good Question.
\\யாரை பார்த்து என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்துவிட்டுதான் இந்த அவசரம் காட்டுகிறார்களோ என்று தோன்றுகிறது.\\
I too got the same doubt.
\\தற்பொழுது கொடுத்த கேதுவின் ஒரு வாரத்திற்கு முன்பாகவே \\
இதில் "கேதுவின்" என்பதை "கெடுவின்" என்று மாற்றவேண்டும் என நினைக்கிறேன்.
ஜெயதேவ் தவறு திருத்தப்பட்டுவிட்டது, நன்றி.
ம் ....
ஆட்டு மந்தைக்கு எது நடந்தால் என்ன?
யார் தலைவனாக இருந்தால் என்ன?
புல் கிடைத்தால் போதும் இல்லையா கும்மாச்சி அண்ணா?
என்னமோ போங்க...!
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.