Monday, 8 December 2014

கலக்கல் காக்டெயில்-161

தேவாரமே, திருவாசகமே, தேறாதவளே.........

சட்டசபையைக் கூட்டுங்கள் என்று திரும்ப திரும்ப சொல்லி ஒ.பன்னீர்செல்வம் ஒரு வழியாக சட்டசபையைக் கூட்டி ஒரு மூன்று நாட்கள் அம்மா புகழ் பாடி மக்கள் பிரச்சினைகளை? அலசி ஆராய்ந்து தீர்ப்பும் கண்டு பல நல்ல திட்டங்களை? அறிவித்துவிட்டார். இருங்க இருங்க அவசரப்படாதீங்க. அம்மா புகழ் பாடினால் நாட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் தானகவே தீர்ந்து விடாதா? அம்மாக்கு லாவணி பாடினாலே திட்டங்கள் அறிவித்ததாகத் தானே அர்த்தம்.

இந்த கூத்தை ஜெயா டி.வியில் வேறு போட்டுக்காட்டி மக்கள் முதல்வர் புகழ் பாடினார்கள்.

ஆறு கோடி மக்கள் அம்மா என்றழைக்கும் தேவாரமே
பூமித்தாயை குளிர்விக்க மழை நீர் சேமிப்பு திட்டம் தந்த மங்கையர்க்கரசியே
இன்னும் மடிக்கணினி தந்த மகாராணியே...........என்று ஒரு பத்துப்பக்கத்திற்கு எழுதி வாசித்தார். அம்மாவின் அல்லக்கைகள் விடாது பெஞ்ச் தட்டிக்கொண்டிருந்தனர்.

இன்னும் கூட கொஞ்சம் லாவணியை சுருதி சுத்தமாகப் பாடியிருக்கலாம்.

அறுபத்தியாறு கோடி ஆட்டையைப் போட்ட அங்காள  பரமேஸ்வரியே
குன்ஹாவிடம் குட்டு வாங்கிய குணசுந்தரியே
ஜாமீனில் வந்திருக்கும் ஜான்சிரானியே
வருமான வரி வழக்கில் வெளிவந்த விடிவெள்ளியே...........ஏன்யா இதையெல்லாம் விட்டீங்க.

கேப்டன் வந்துவிட்டார்.......... அவர் வந்துவிட்டார்
மவன் சம்முகம் படத்துக்கு லொகேஷன் பார்த்துவிட்டு தாய் நாடு திரும்பிவிட்டார் கேப்டன். சட்டசபைக்கு சென்று மக்கள் பிரச்சினையை விவாதிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, நான் ஒரு மாதமாக பேப்பர் படிக்கவில்லை ஆதலால் தமிழக நடப்பு என்னவென்று தெரியாது என்று மிகவும் நிதானத்துடன் பதிலளித்திருக்கிறார். பிறகு தொண்டர்களுக்கு அறிவுரை வேறு, என்னை கிண்டலடிப்பார்கள் அமைதியாக இருங்க என்று.

ஆமாம் கேப்டன் கிண்டலடிப்பாக, அடிச்சுக்கூட கேப்பாக ஒன்றும் சொல்லிடாதீங்க................கேப்டன் நீங்க இல்லாத ஒரு மாதத்தில் சரக்கு விலை கூடிப்போச்சு. பேப்பர்ல பார்த்துட்டு சட்டசபை பக்கம் போனா கேளுங்க இது இன்னா நியாயம்.

ரசித்த கவிதை 

நீ வேறு நான் வேறு கவிதை 

ப்போதெல்லாம்
நீ கொலைகளைச் செய்ய அஞ்சுவதில்லை.
நம் சமையல் அறைக்குள்
ஜன்னல் வழியே ஊர்ந்துவரும் எறும்புகளை
பழுப்பில் சிக்கிய பருக்கைகளைத் தேடும்
மூஞ்சுறுகளை
நம் குளியல் அறையின்
மூலையில் படுத்துக்கிடக்கும் கரப்பான்களை
வேலிச் சுவரைத் தாண்டி
தலை நீட்டிக்கொண்டிருக்கும்
முருங்கைக் கிளைகளை
பழுத்துவிட்டால் புழு தின்றுவிடும் என
பிஞ்சு கொய்யாக்களை
இன்னும் நிறைய்ய்யவற்றை
நீ கொலை செய்ய அஞ்சுவதில்லை.
பூ பூத்ததும்
தென்னை வயசுக்கு வந்துடுச்சுனு
ஊருக்கே புட்டு அவிச்சிக் குடுத்தாங்க
எங்க அம்மா
உன் அழிப்பின் ரகசியங்களோ
என் பண்பாட்டை
ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன!

நன்றி: கு. உமாதேவி 


ஜொள்ளு 






Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

”தளிர் சுரேஷ்” said...

உண்மையிலேயே கலக்கீட்டீங்க! லாவணி பாட்டுல!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கலக்கல் அருமை.

கும்மாச்சி said...

எஸ்.ரா. வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

தேவாரமே, திருவாசகமே, தேறாதவளே......

என்னா பின்பாட்டு....
பேப்பர் படிச்சிட்டாரா.... கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

ஸூப்பர் கலக்கல் கவிதை அருமை ஜொள்ளு ஜில்லு நண்பா எனது நகைச்சுவை பதிவு பாருங்க....

திண்டுக்கல் தனபாலன் said...

கேப்டன் கண்டிப்பாக கேட்பார்...!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.