Monday, 26 January 2015

டீ வித் முனியம்மா-பார்ட் 29

இன்னா முனிம்மா கடையாண்ட மீசைய காணோம் நீ கடிய கண்டுகினு கீற, இன்னா மேட்டரு.

அடே செல்வம் சொம்மா நக்கலு உடாத, மீச எதிர் கண்டியாண்ட டீ தூளு வாங்க போய்கிறான்............உனுக்கு இன்னா வேணும் சொல்லு.

ஒன்நியம் வேணா.............பாய்ய....... லோகு கடியாண்ட பாத்தேன்............நீ போ செல்வம் தொ வரேன்னுகிராறு.

வந்துருவாருடா.............நாடரும் லிங்கம் சாரும் வராங்க பாரு...

இன்னா முனிமா இன்னா மேட்டரு...............ஜெட்லி வந்து அம்மாவ கண்டுகினு போறாரு.

இன்னா மேட்டரு......... நாடாரு....., சொம்மான்னு சொல்லிகிறாங்க. தேர்தல் வரப்போகுது. அப்பால ராஜ்யசபாவுல அம்மா சப்போர்ட்டு வேணும்.........கேசு வேற நடக்குது..............கூட்டி கயிச்சி பாரு அல்லாம் புரியும்.

அத்தான் கலீனறு பூனகுட்டி வெளிய ஓடியாந்திடிச்சின்னு.............கூவுறாரு.

ஆமா..............லிங்கம் சாரு..............ஜனத்துக்கும் அந்த சந்தேகம் கீது இல்ல. ஆனா அந்தம்மா தமியிசை பூனை குட்டியும் வரலே ஆனா குட்டியும் வர்லேங்குது.

ஐயே இன்ன சொல்ற முனிமா.............

ஆமாடா லோகு, வருமான வரி வயக்கு கோர்ட்டு பக்கம் போவாம பதினெட்டு வருஷம் இஸ்தாங்க..............இப்போ பைனு கட்டி பஞ்சாயத்த பைசல் பண்ணிகினாங்க. அதுக்கு இன்னா சொல்ற.

கரீட்டு முனிம்மா.........

செல்வம்.................அத்தே டவுட்டு பெங்களூரு கேசுமேலேயும் கீதுடா............இன்னொரு தபா ஸ்ரீரங்கத்துல இடைத்தேர்தல் வரும் பாரு...........மச்சம் வெச்சவனுங்கடா அவனுக........... அந்த ஊரு காரனுன்ங்க

இன்னா சொல்ற.......

டேய் லோகு ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரமாம்...........அடிக்கடிக்கு தேர்தல் வந்தா அவுங்களுக்கு மஜா தானே...........கணக்கு பாரு நீயி

சரி டெல்லி தேர்தல் மேட்டரு இன்னா?

கேஜ்ரிவாலுக்கும்...............அந்த போலீஸ்காரம்மா..............கிரண் பேடிக்கும் போட்டிடா..........

யாரு கெலிப்பாங்க...............முனிமா............

பாப்போம் நாடாரு....................எவோ வந்தா நமக்கென்னா?

ஒபாமா டில்லி வந்துகிறாரே...............இன்னா?

டேய் அல்லாம் வியாவாரம்டா..................சொம்மா நம்மாளுங்க அணு மின்சாரத்துக்கு.............ரஷ்யாவாண்ட  காட்ண்டிராய்ட்டு போட்டுகிரானுங்க.........அல்லாத்தையும் அவனுக்கே அல்லிவுடாத..........நம்ள கொஞ்சம் கவுணி நைனான்னு..........மோடியாண்ட சொல்லிகினு வியாவாரம் செய்ராங்கடா.........

இன்னா கச்சா எண்ணெய் வெலை எறங்கிக்கினே போவுது.....

டேய் லோகு அதெல்லாம் பெரிய இடத்து மேட்டருடா............ரஷ்யாவையும் சீனாவையும் எண்ணெய் வியாவாரத்துல அம்பேலாக்கனும்னு அமெரிக்கா காரன் செய்யுற டகில் பாச்சா வேலடா......

அவனுக ஷெல்லு ஆயில் சொல்லி மார்க்கெட்டுல அள்ளி வுட்டுக்கின்னு வெலை இறக்கு வுட்டுகிரானுங்கா........அப்பால வெலை ஏறிடும்.

சரி முனிம்மா அதால நமக்கு இன்னா லாவம்..........

லாவமா நமக்கா................போடா பொயப்ப பாரு.

சரி முனிமா ஸ்ரீரங்கத்துல யாரு கெலிப்பாங்க..............

டேய் செல்வம் இன்னா கேள்விடா...............ஆளுங்கட்சிதான் கெலிக்கும்............

சரி முனிம்மா சினிமா மேட்டரு இன்னா?

ஷமிதாப் ன்னு ஒரு இந்திப்படம் வரப்போகுதாம்..........அமிதாப், நம்ம தனுசு, கமல் பொண்ணு அக்ஷரா நடிச்சிகிறாங்க.................தனுசு கூட அக்ஷரா டிக்கில முத்தம் கொடுத்துகிறானாம்.............ஒரே தமாசுதான் போல........அப்பா அல்லா பொண்ணுங்களுக்கும் வாயில முத்தம் கொடுத்தாரு........அவரு பொண்ணுக்கு.........போடா செல்வம் அத்த சொல்ல பேஜாரா கீது............

சரி முனிம்மா பேப்பர கொடு இன்னா படம்னு பாக்கலாம்.........





  



Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 22 January 2015

கொபாமா தலைமேல கக்கா போவாங்களா?

வலை கீச்சுதே .....................இந்த வாரம் ரசித்த கீச்சுகள்


கோபக்காட்சியில் கன்னத்தை துடிக்க விட்டு சதையை நடிக்க வைக்க முடியுமா உங்க கமல் தனுஷால்?# கேப்டண்டா--------------ஆல்தோட்டபூபதி

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கிறார் எமி ஜாக்சன்!# வருங்கால முதல்வர்னு சொல்லியிருப்பாங்களே----------கோ. செந்தில்குமார்

புது டில்லியில் விமானங்கள் பறக்க ஒரு வார கால தடை #கொபாமா தலையில யார்ன்னா கக்கா போய்டுவாங்களா?----------சிறுத்தை 

நியாயப்படி TASMAC ல் இருந்து வர்ர பைக்குல on govt. duty னு ஸ்டிக்கர் ஓட்டனும். இவங்க என்னடான்னா ஊதச் சொல்லி வழியில பிடிக்கிறாங்க நியாயமா?----------திருமுருகன்.

உனக்காக எங்க ஊர்ல எவ்வளோ பொண்ணு பார்த்து வச்சிருக்கேன், உங்களுக்கு OK nnaa சொல்லுங்க அந்த பொண்ணுங்களோட லவ்வர் கிட்ட பேசி பார்க்குறன்----------------பட்டிக்காட்டான் 

எதுக்கும் நாமளும் ஒரு துண்டு போட்டு வைப்போம்னு விஜயகாந்த் யாரையாவது ஸ்ரீரங்கத்துல நிப்பாட்டுவாரு ஆனா பேரு கேக்கக்கூடாது ஏன்னா அவருக்கே தெரியாது----------------இந்திரன்*சந்திரன்.

கேஜ்ரி அண்ணே உங்கள் அரசியல் குரு பெயர் விஜய் ஹசாரேவா? அண்ணா ஹசாரேவா? # பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு-----------உளறுவாயன் 

காட்டுக்குள் ஷூட்டிங்கில் விஜயையை தவறுதலாக புலி என்று நினைத்து ஜல்சா பண்ண ஆசைப்பட்ட நாய், பதற்றத்தில் யூனிட்---------திருச்சி மன்னாரு.

கும்ப ராசி அன்பர்களே இன்னைக்கு உங்களுக்கு குதூகலமான நாள் # இவனுங்க ரைமிங்க அடிச்சிக்க முடியாது போ------------குண்டுக் குழந்தை 

தமிழ்நாட்டில் ஹேர் கட்டிங், சேவிங் கட்டணம் உயர்ந்தது. எர்வமேட்டின் வியாபாரம் குறைந்தது!!!!!!!!!------------செங்காந்தள்

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 21 January 2015

வருது வருது இடைத்தேர்தல் வருது

வருது வருது இடைத்தேர்தல் வருது
ஸ்ரீரங்கத்திலே இடைத்தேர்தல் வருது
ஆத்தா போட்ட ஆட்டத்தினால் தேர்தல் வருது 
குன்ஹா எழுதிய தீர்ப்பினால் தேர்தல் வருது 

அரசியல் கட்சிகளெல்லாம் சேர்ந்து வருது
ஆத்தா கூட்ட அடிமையெல்லாம் ஆடி வருது 
எதிர் கட்சிகளெல்லாம் எதிர்த்து வருது 
ஏமாறும் மக்களையே ஏமாற்ற வருது 

தூங்கிக்கிடந்த திட்டமெல்லாம் ஓங்கி வருது 
தேங்கிக்கிடக்கும் வாக்குகளை வாங்க வருது 
வாங்கி வச்ச பணமெல்லாம்  தேடி வருது 
வாக்காளர்களின் வாக்குகளை வாங்க வருது 

மத்தியரசு அமைச்சரெல்லாம் மயக்க வருது
கூட்டணிக்கு அச்சாரம் போட தோட்டம் வருது 
வழக்குகளின் போக்கை எல்லாம் மாற்ற வருது
மத்தியிலே மாற்றம் செய்யவேண்டி வருது 

மேல்முறையீட்டின்  தீர்ப்பு விரைவில் வருது 
குமாரசாமியின் குறிப்பினிலே நீதி குனிந்து  வருது 
ஆத்தாவிற்கு விடுதலை விரைந்து வருது   
மூன்றாம் முறை ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் வருது  







Follow kummachi on Twitter

Post Comment

Monday, 19 January 2015

கலக்கல் காக்டெயில்-164


ஸ்ரீ ரங்கம் "இடை" த்தேர்தல் 

ஸ்ரீ ரங்கத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஆளுங்கட்சி தங்களது வேட்பாளரை அறிவித்து அவர் இன்று வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டார். காங்கிரசோ தனது வேட்பாளராக "குஷ்பூ" வை நிற்கவைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. பி.ஜே.பி. நெப்போலியன் என்று பேசிக்கொண்டிருக்கிறது.  தி.மு.க.வும் வேட்பாளரை அறிவித்துவிட்டது.

தே.மு.தி.க தனித்துப்போட்டி என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. இந்த ஜோதியில் ஐக்கியமாகி டெபொசிட்  வேணுமென்றால் கிரிஜா ஸ்ரீ தான் நல்ல போட்டி கொடுப்பார்.

பலே சரியான "இடை" தேர்தல் போட்டி.

அனானி அணில் குஞ்சு

என்னுடைய போன பதிவில் தமிழ் சினிமாக்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை விக்கிபீடியா தகவல்களுடன் எழுதியிருந்தேன். அதைக் கண்டு தாங்க முடியாத அணில் குஞ்சு ஒன்று அனானியாக வந்து "டியர் மண்டை ஃபேன்" என்று ஆரம்பித்து புழுத்த நாய் கூட குறுக்கே போக முடியாத படி தமிழ் அகராதி காணாத அருஞ்சொற்பொருட்களுடன் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தது. அதில் தப்பில்லை, அவருடைய கருத்தை அவர் தெரிவிக்கிறார். என்னுடைய பதிவை எத்துணையோ பேர் படிக்கிறார்கள், அவர்கள் இந்த அருஞ்சொற்பொருட்களை கற்றுக்கொள்ள வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில் பிரசுரிக்கவில்லை. மேலும் அவர் சொல்லுவது போல் நான் யாருடைய கடினசாவு விசிறியும் அல்ல.

அணில் அன்னானிகளே உங்களது கருத்தை நாகரீகமான முறையில் தெரிவியுங்கள், உங்களது தனி மனித துதியை நான் குறை சொல்ல வில்லை. கொண்டாடுங்கள்,  அடுத்தவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு போகலாமே.  நீங்கள் உங்களது நடிகரின் கடினசாவு விசிறி என்ற பெயரில் அவருக்கு சொறிந்து விடவேண்டும் என்றால் தனியாக நீங்கள் பதிவு போட்டு சொறிந்து கொள்ளுங்கள். ஆனால் அதற்காக உங்களது தலைவன் ஒன்றும் கொடுத்துவிடமாட்டான். அதை புரிந்து கொண்டால் நீங்களெல்லாம் எங்கேயோ போய் விடுவீர்கள். அது வேறு விஷயம். என்னுடைய கருத்தை நான் எழுதுவேன் அது உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை நண்பர்களே.

மீறி நீங்கள் கருத்து தெரிவிக்க வேண்டுமென்றால் உங்களது சங்காத்துடன் வாருங்கள், அனானியாக வரவேண்டாம். அனானிக்கு அகராதியில் வேறு அர்த்தம்.

ரசித்த கவிதை 
பறக்கமுடியா நாளொன்றில் 

திண்மை அடைத்து 
காற்றுவெளி மேவி
பொன்வண்டொத்த 
சிறகையும் ஒட்டிவிட்டு
அடையாளத்திற்காய்
ஒற்றைக்கல் வைத்து 
கால் மடித்து காத்திருக்கிறது 
அந்த விநோதக் காற்று.

புதுப்பித்தல் பற்றிய 
மரணித்த வாசகங்கள்
கொண்டு வந்த கானத்தில்
உப்பின் அடர்த்தி குறைத்து
பறக்க முயற்சிக்கிறது 
ஒரு மோனரிதப் பூ.

என்றோ உதிர்த்துவிட்ட 
சருகின் சப்தம் 
விழிக்குள் நடுங்க 
ஒடிந்த காம்பில் 
அமைதியின் அடையாளம்.

பொன் வண்டொத்த அச்சிறகிற்கு
பூவுடன் பயிற்சியும் தரலாமென
அறிவிக்கிறது அவ்விநோதக் காற்று!!!


நன்றி: ஹேமா 


ஜொள்ளு



Follow kummachi on Twitter

Post Comment

Saturday, 17 January 2015

"ஐ" யும் அதுக்கும்மேல அம்சமான "வடைகளும்"

ஷங்கரின் "ஐ" படம் மொக்கையா? சுமாரா? அதுக்கும் மேலேயா? என்பதற்கு நிறைய பதிவர்கள் முதல் நாள் முதல் காட்சி பார்த்து ஏராளத்திற்கு எழுதிவிட்டார்கள். இந்த பதிவு அந்த படத்தைப் பற்றிய விமர்சனம் அல்ல. பொதுவாக படத்தைப் பற்றிய என்னுடைய கருத்துக்களே.

படத்தில் மிரள வைத்தது விக்ரமின் நடிப்பு. முகத்தில் வீக்கங்களுடன் கொஞ்சமே தெரியும் கண்களுடனும், உதடுகளிலும் அத்தனை உணர்ச்சியை காட்டியிருக்கிறார். அவருடைய கடினமான உழைப்பு படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. எமி ஜாக்சன் அழகோ அழகு.

அடுத்தது பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவு. சீனாவில் நாம் இதுவரை தமிழ் படத்தில் பார்த்திராத இடங்கள், மற்றும் விக்ரம், எமி காதல் காட்சிகள், ஒரு பிரம்மாண்ட சைக்கிள் சண்டை என்று ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகு. முக்கியமாக எமி, விக்ரமிற்கு நடிப்பு வருவதற்காக காதலித்ததாக சொல்லும் காட்சியில் அவர்கள் முகத்தில் பிரதிபலிக்கும் எண்ணங்களுக்கு மிதமான லைட்டிங் கொடுத்து மெருகூட்டுகிறார்.இந்தக் காட்சியில் ரஹ்மானின் பின்னணி அபாரம். "மொத  தபாவை" இன்னொரு தபா வேறு பரிமாணத்தில் வயலினில் வழிய விடுகிறார்.

ரஹ்மான் பின்னணியில் வேறு வித பரிமாணம் காட்டியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. "பூக்களே சற்று ஓய்வெடுங்கள்" பாட்டில் ஹரிசரண், ஸ்ரேயா கோஷால் குரல்கள்  மனதை வருடுகின்றன. மற்றபடி "என்னோடு நீ இருந்தால்" சித் நன்றாக பாடினாலும் படத்தில் தேவையில்லாமல் ஷங்கரின் கிராபிக்ஸ் திறமையை நாம் பார்த்தே தீர வேண்டும் என்று வைத்திருக்கிறார். படத்தின் நீளம் ரொம்பவே அதிகம். மூன்று மணி நேரம் படங்களை பார்ப்பது என்பது இந்த காலகட்டத்தில் வேலைக்கு ஆவாது. இரண்டு மணி நேரத்தில் கதையை முடித்திருக்கலாம். மேலும் ஷங்கர் அந்நியனில் பொது நலனிற்காக பழிவாங்கும் விக்ரமை தன நலத்திற்காக "புருடா புராணம்" வைத்து வதைக்கிறார். மேலும் அந்த திருநங்கை கேரக்டரை வைத்து நக்கலடித்திற்பதற்கு தன் வீட்டு வாசலில் கூடியிருக்கும் திருநங்கைகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஷங்கர் ரொம்ப காலத்திற்கு பிரம்மாண்டத்தையும் தொழில் நுட்பத்தையும் நம்பி படம் எடுத்துக்கொண்டிருக்க முடியாது. இன்னும் ஒரு சுஜாதா வேண்டும். கற்பனை வறட்சியும், வசனங்களின் தாக்கமின்மையும் நன்றாகவே படத்தில் தெரிகிறது.

சந்தானம் பழி வாங்கிய வில்லன்களை பேட்டி காணுவதெல்லாம் டூ டூ மச். முதல் பாதியில் சந்தானம் ஒன் லைன் காமெடி வழக்கம் போல் கிச்சு கிச்சு ரகம்.

மற்ற படி படம் மொக்கைக்கு சற்று மேலே சுமாருக்கு சற்றே கீழே. ஆனால் ரவிசந்திரனுக்கு போட்ட முதலுக்கு மோசம் இருக்காது என்று தோன்றுகிறது. அதற்கான காரணங்கள் வேறு விஷயம்.

வாயால் சுட்ட வடைகள்

சமீபத்தில் வந்த "நிரந்தர" படத்தை எராளத்திற்கு நக்கல் செய்த "தற்காலிக" குஞ்சுகள் படத்தின் வசூலை குறி வைத்து வாயால் சுட்ட வடைகள் தீய்ந்து போய் இப்பொழுது நாறிக்கொண்டிருக்கிறது.

"ஆயுதம்" படத்தின் வசூல்  "மெசின்" படத்தை  மிஞ்சி விட்டது ஆஹா ஓஹோ என்று சமூக வலைதளத்தில் வடை சுட்டார்கள். ஆனால் இந்த வருட ஆரம்பத்தில் வந்த "ஃபோப்ஸ்" இதழில் 2014ம் வருட இந்தியன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை புட்டு புட்டு வைத்து "தற்காலிக" சூப்பர் ஸ்டார் மார்க்கெட் நிலவரம் என்ன என்பதை அலசி அம்மணமாக்கி அரங்கத்தில் ஏற்றி விட்டது.

போத குறைக்கு தமிழ் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை விக்கிபீடியா புள்ளி விவரங்களுடன் கொடுத்திருக்கிறது.

 இது வரை வந்த தமிழ் படங்களில் அதிக வசூலைப் பெற்றது.

எந்திரன்-------------------------------INR 256 கோடி
விஸ்வரூபம்-----------------------INR 220 கோடி
தசாவதாரம்-------------------------INR 200 கோடி

மற்றையவை யாவும் நூறு கோடி அளவில் உள்ளன.

இது வரை வந்த தமிழ் படங்களில் முதல் நாள் வசூல் நிலவரம்

லிங்கா-------------------------------INR 37 கோடி
ஐ---------------------------------------INR 34.74 கோடி

மற்றைய புள்ளி விவரங்களைக் காண.
இங்கே கிளிக்கவும் 

இந்த விவரங்கள் நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் மக்களே. அடுத்த TNPSC வினாத்தாளில் இதை பற்றிய கேள்விகள் வர வாய்ப்புள்ளது.


Follow kummachi on Twitter

Post Comment

Friday, 16 January 2015

குஷ்பூ- பயோடேட்டா

இயற்பெயர்:------------------------நகாத் கான்
இன்றைய பெயர்-----------------குஷ்பூ
வயது----------------------------------சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் வயது
தகுதி-----------------------------------எராளமா இருக்கு
அரசியல்-----------------------------தெரிய வேண்டிய அவசியமில்லை
நண்பர்கள்---------------------------காங்கிரசில் தேட வேண்டும்
எதிரிகள்------------------------------தளபதிக்கு தெரியும்
சமீபத்திய சாதனை-------------கட்சி தாவியது
நிரந்தர சாதனை------------------சுந்தர் மாமா
ஆசை----------------------------------அரசியல் பதவி
நிராசை--------------------------------பிரபு
சமீபத்திய எரிச்சல்--------------இடுப்பில கிள்ளறாங்க தலைவரே
நிரந்தர எரிச்சல்-------------------அம்மா
அடையாளம்------------------------ஜாக்பாட் ஜாக்கெட்

Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 15 January 2015

டீ வித் முனியம்மா பார்ட்- 28

டேய் மீச பொங்கலுக்கு இன்னாடா கடில போட்டுக்கிற, புச்சா இன்னா கீது, உனுக்கு இன்னா தெரியும், அதே தண்ணி டீ, பொறை, இட்லி, வட, வடகறி உட்டா இன்னா புச்சா போடப்போற..........

இந்தா மினிமா நிங்களுக்கு இன்னா வேணம், பற.

அடேய் இன்னிக்கு தமிழர் திருநாள் டா தமியில பேசு இல்ல கம்முன்னு கெட.

வாடா லோகு, செல்வம் இன்னா பொங்கலுக்கு புது துணி மாட்டிகினு சொம்மா ஸோக்காகீறிங்க.

பாய் வூட்டாண்ட வா பாய் உனுக்கு பொங்கலும், வடையும் தரேன், நீ பக்ரீத்துக்கு பிரியாணி போடுற நாங்க உனுக்கு பொங்கலு தாரோம்.

சரி முனிமா நாட்டுல இன்னா நடக்குது, கொஞ்ச நாளா எங்க தாராந்துகின, எங்கே போயிருந்த,

அட எங்க  லிங்கம் சாரு நான் போவேன், கடையாண்ட ஒரே வேல, மார்கழி மாசம் பாரு கோயிலாண்ட கூட்டம் அள்ளுது, இப்போ காசு பாத்தாதான் உண்டு.

சரி முனிமா சொத்து குவிப்பு வயக்கு எப்படி போவுது.

பெங்களுரு ஹைகோர்ட்டுல வாதத்த தொடங்கிட்டானுங்க, குன்ஹா தீர்ப்ப தப்பா எய்திகிராறு, எங்க அம்மாவ பத்தி அவருக்கு ஒன்நியம் தெரியாதுன்னு அம்மா வக்கீலுங்க கொரலு உடுரானுங்க.

அப்பால........

அப்பால நாடாரு அன்பயகன் வக்கீலுங்க உள்ளார வரசொல்ல, அன்பயகன் யாரு? அவருக்கும் இந்த வயக்குக்கும் இன்னா கணிக்சனு, கம்முன்னு போங்கன்னு கடுப்பாய் கிறாரு.

அத்த வுடு முனிமா அம்மா வெளிய வருவாங்களா?

வந்துருவாங்கன்னு தான் ரத்தத்தின் ரத்தம் சொல்லிகிரானுங்க. அதுல ஒரு ரத்தம் சொல்லுது புது ஜட்ஜுக்கு நூறு சியாம் அல்லாம் மேட்டரும் ஓவராம், அப்பால பாரு ன்னு சொல்லிட்டுப் போறான்.

இவன்தான் தூக்கி போய் குடுத்தான் போல. அல்லாம் துட்டு பேசும் முனிமா.

அத்த விடுடா லோகு.

நம்ம ஓ.பி. இன்னா சொல்றாரு?.

அவரு இன்னா சொல்லுவாரு, அம்மா வரங்காட்டியும் சொம்மா குந்திகினு கீறாரு.

முனிம்மா தரூரு கேசு இன்னாச்சு?

அந்தம்மா சுனந்தாவ வெசம் வச்சி கொன்னுகீரங்கன்னு சி.பி. ஐ சொல்லுது. அல்லாம் பெரிய இடத்து மேட்டரு. நமக்கு இன்னா?

முனிம்மா பொங்கலுக்கு இன்னா படம் வருது.......

டேய் பயக்கட உனுக்கு தெரியாது, சங்கரு படம் வந்துகீதுடா.

சொம்மா கேட்டேன் முனிம்மா நான் படத்த போகி அன்னிக்கே பாத்துகினேன்.

எப்படி கீதுடா?

சூபரா கீது முனிமா, சங்கரு நல்லா எடுத்துகிறான், நம்ம சீயான் பையன் நடிப்புல பின்னிகிறான், அத பாத்து நானே மெர்சலாயிட்டேன்.

டேய் செல்வம் நடிப்புல மெர்சல் ஆனியா இல்ல படத்துல வர ஹீரோயினிய கண்டுகினு ஜொள்ளு வுட்டு மெர்சலானியா?.

தொ சொம்மா கலாய்க்காத முனிமா? பாட்டெல்லாம் ஸோக்கா கீது, பூக்களே சற்று..........................ஓய்வெடுத்துக்க,,,,,,,,,,,அவ வந்துகினா அவ வந்துகினா.....

டேய் நிறுத்துடா.

வேறென்ன மேட்டரு முனிமா? டேய் இந்தாடா பேப்பர புச்சுகோ,  எனுக்கு வேலகீது. நீ நல்லா படம் பாத்துக்க.வரேன் லிங்கம் சார், பாய், நாடரு. டேய் பயக்கட நாளைக்கு கோயிலாண்ட வாடா கொம்புக்கு பெய்ண்ட்டு அடிச்சி பூ சுத்துறேன்.

த போ முனிம்மா வேலயப்பாரு, இந்த வயசுக்கு நக்கல பாரு.



Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 14 January 2015

பழையன கழிதல்

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
பண்டிகையாகும்
போகியாம்........

பண்டிகை நாளில்
பறையடித்து
பழைய பஞ்சாங்களைக்
கொளுத்துவோம்.
போலிப் பகுத்தறிவைக்
கொளுத்துவோம்.
ஜாதி மத பேதங்களைக்
கொளுத்துவோம்.
தீய எண்ணங்களைக்
கொளுத்துவோம்

இலவசங்கள் பெற்று
இன்புறும் இச்சையைக்
கொளுத்துவோம்
காசு வாங்கி
ஓட்டு போடும்
கயமையைக் கொளுத்துவோம்.
அரசியல் தலைவனை
திரையில் தேடும்
ஆசையைக் கொளுத்துவோம்.


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 13 January 2015

கல்லறையிலிருந்து கருவறை வரை.............தலைகீழா வாழோனும்................


வாழ்க்கையை தலை கீழா வாழ்ந்து பார்க்கோனும்...இந்த வித்யாசமான சிந்தனை ஹாலிவூட் நடிகர் உடி ஆலன் அவர்களுக்கு வந்திருக்கிறது, சமீபத்தில் அவருடைய சிந்தனையை நண்பர் வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார். படித்த போது அட இது நல்லா இருக்கே என்று தோன்றியது. அந்த செய்தி ஆங்கிலத்தில் வந்தது, அதனுடைய தமிழாக்கம் இதோ..........

கல்லறையிலிருந்து கருவறை வரை.............

இறப்பிலிருந்து மீண்டு கல்லறை விட்டு  முதியோர் இல்லத்தில் துயிலெழுவீர்கள்.............நாளுக்கு நாள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் ஆகிவருவீர்கள்.

நீங்கள் வேலை செய்யும் அலுவகத்திலிருந்து மிகவும் ஆரோக்கியமாக இருப்பதற்காக ஓய்வு என்று விரட்டப்படுவீர்கள். உங்களது பென்சன் பணத்தை வாங்கிக்கொள்வீர்கள். பின்னர் உங்களது மேசையிலமர்ந்து பணி தொடங்குவதற்கு முன் உங்களுக்கு தங்க கடிகாரம், மாலை மரியாதை செய்து விருந்து உபசாரம் செய்யப்படுவீர்கள்.

பின்பு உங்கள் நாற்பது வருட அலுவலக வாழ்க்கை முடியும் பொழுது மிகவும் இளமையாக உங்களது பனி ஓய்வை எதிர்கொள்வீர்கள்.

பின்னர் குடி, குட்டி என்று ஒரே கும்மாளம்தான்.............இப்பொழுது கல்லூரி நாட்கள். பின்னர் பள்ளிக்கூடம்................நர்சரி.............என்று ஒரே கொண்டாட்டம்.
பின்னர் கவலைகள் எதுவுமற்ற குழந்தை பருவம் நீங்கள் பிறக்கும் வரை.........

இப்பொழுது உங்களது கடைசி ஒன்பது மாதங்களை  கருவறையில் உயர்தர ஸ்பா குளியல்.............வெப்பக்கட்டுப்பாட்டு வசதி.........பசி எடுத்தால் ரூம் சர்வீஸ்........எல்லாம் குழாய் வழியாக............என்று வசதியாக பொழுது கழியும்.....பின்னர் இரண்டு ஜீவன்களின் உச்சகட்ட மகிழ்ச்சியில் வாழ்க்கையை முடிப்பீர்கள்.

அடடா நல்ல சிந்தனைதான்.............  

Follow kummachi on Twitter

Post Comment

Monday, 12 January 2015

கலக்கல் காக்டெயில்-163

பேயாட்சி ஒழிந்தது........

இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் ராஜபக்ஷேவை ஒழித்து சிரிசேனாவை அரியணையில் அமர்த்திவிட்டனர். தேர்தல் முடிவு வரும் முன்பே ராஜபக்ஷே மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறினார் என்று செய்திகள் வந்தன, தனது ஊர்பக்கம் ஒதுங்கி என்னுடைய தோல்விக்கு தமிழர்கள்தான் காரணம் என்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார்.  அவரது தம்பிகளும், புதல்வனும் ஊரை விட்டு ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொஞ்ச நஞ்சமா ஆடினார்கள். இப்பொழுது சொந்த ஊரில் இருக்கமுடியாத நிலைமை. "ஆடிய ஆட்டமென்ன? ".

சிரிசேனா ஆட்சியில் தமிழர்களுக்கு ஏதாவது முன்னேற்றம் கிடைக்குமா? என்ற கேள்விக்கு உண்மையான பதில் "ஒன்றும் கிடைக்காது". அப்படியே சிரிசேனா ஏதாவது செய்யலாம் என்று நினைத்தாலும், புத்தபிட்சுகள் சும்மா விடமாட்டார்கள், பழைய சரித்திரம் போல அவருக்கே சங்கூதி விடுவார்கள்.

தமிழ்நாட்டில் வழக்கம் போல சீமான் போன்ற அரசியல் அல்லக்கைகள் குரல் விட்டு இன்னும் கொஞ்ச காலத்திற்கு பொழுதை ஓட்டலாம். அப்படியே  அந்த அலை ஓய்ந்தாலும் சினிமா கட்டபஞ்சாயத்து செய்து காலம் தள்ளலாம், இல்லை இருக்கவே இருக்கிறார் சூப்பர் ஸ்டார் அவரை வேகவைத்து வறுத்து சாப்பிடலாம். நம்ம தமிழ் உணர்வு என்னாவது?

மொத்தத்தில் இலங்கையில் பேய் போய் பிசாசு வந்திருக்கிறது.

சிங்கார சென்னை 

கடந்த நான்கு வாரங்களாக விடுமுறையில் சென்னை சென்று வந்தேன், எல்லோரும் விடுமுறையில் நிறைய பதிவு போடுவார்கள் நமக்கு விடுமுறையில்தான்  ஊரில் நிறைய வேலை காத்திருக்கும். வீட்டு மராமத்து, ஒரு வருட தூசி தட்டுதல், பார்க்கவேண்டிய உறவினர்கள் நண்பர்கள் என்று முதல் மூன்று வாரம் ஓடிவிட்டது. நான்காவது வாரம் ஒரு வருடத்திற்கு தேவையான பொருட்கள் பின்னர் நண்பர்களுக்கு வாங்க வேண்டிய பொருட்கள் என்று கடைத்தெருவில் குடியிருக்க வேண்டிய நிலைமை. இதில் எங்கே பதிவுகள் போடுவது. இந்த வருடமும் வழக்கம்போல புத்தக சந்தை தொடங்குமுன் வண்டி ஏறியாகிவிட்டது.

போதாத குறைக்கு சென்னையில் வண்டி ஓட்டுவதை விட ஒரு கொடுமையான விஷயம் கிடையாது. சமீபத்தில் பெய்த மழையில் ஒவ்வொரு தெருவிலும் குண்டு குழிகள் ஏராளம், அதில் ஒரு முறை இறங்கி ஏறினால் இடுப்பை பிடித்துக்கொண்டு மீதி தூரத்தை நடந்தே கடக்க வேண்டும். அம்மா தோட்டத்தில் பதுங்கி இருப்பதால் அவரவர் ஓய்வெடுத்துக் கொண்டும் காவடி தூக்கிக்கொண்டும் இருக்கின்றனர். இதில் கார்பரேஷன் எங்கே வேலை செய்வது? ப்ளடி நாஸ்டி முனிசிபாலிட்டி.

ரசித்த கவிதை 

குடுகுடுப்பைக்காரன் 

திடீரென
வீட்டு வாசலில் வந்து நின்று
குறி சொல்லத் தொடங்கியவன் கையில்
சட்டெனத் திணிக்கப்பட்ட
ரூபாய் நோட்டைப் பார்த்ததும்
சொல்லவந்த
குறைகள் அனைத்தையும்
பக்கத்து வீட்டில்
சொல்லத் தொடங்கினான்
குடுகுடுப்பைக்காரன்

நன்றி: சசி அய்யானார் 

ஜொள்ளு 



Follow kummachi on Twitter

Post Comment