Wednesday, 14 January 2015

பழையன கழிதல்

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
பண்டிகையாகும்
போகியாம்........

பண்டிகை நாளில்
பறையடித்து
பழைய பஞ்சாங்களைக்
கொளுத்துவோம்.
போலிப் பகுத்தறிவைக்
கொளுத்துவோம்.
ஜாதி மத பேதங்களைக்
கொளுத்துவோம்.
தீய எண்ணங்களைக்
கொளுத்துவோம்

இலவசங்கள் பெற்று
இன்புறும் இச்சையைக்
கொளுத்துவோம்
காசு வாங்கி
ஓட்டு போடும்
கயமையைக் கொளுத்துவோம்.
அரசியல் தலைவனை
திரையில் தேடும்
ஆசையைக் கொளுத்துவோம்.


Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

நம்பள்கி said...

போங்கப்பா நீங்களும் உங்க போக்கத்த பொங்கலும்; ஜொள்ளு இல்லாத பொங்கல் ஒரு பொங்கலா?

கும்மாச்சி said...

நம்பள்கி கோவப்படாதீங்க பாஸ், ஜொள்ளு தானா வரும்.

KILLERGEE Devakottai said...

கொளுத்தீய விடயங்கள் அருமை நண்பா....

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் said...

//இலவசங்கள் பெற்று
இன்புறும் இச்சையைக்
கொளுத்துவோம்
காசு வாங்கி
ஓட்டு போடும்
கயமையைக் கொளுத்துவோம்.//

நல்ல சிந்தனை. மக்கள் கேட்டால் நல்லது!

Yarlpavanan said...

தை பிறந்தாச்சு
உலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

”தளிர் சுரேஷ்” said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.