ஷங்கரின் "ஐ" படம் மொக்கையா? சுமாரா? அதுக்கும் மேலேயா? என்பதற்கு நிறைய பதிவர்கள் முதல் நாள் முதல் காட்சி பார்த்து ஏராளத்திற்கு எழுதிவிட்டார்கள். இந்த பதிவு அந்த படத்தைப் பற்றிய விமர்சனம் அல்ல. பொதுவாக படத்தைப் பற்றிய என்னுடைய கருத்துக்களே.
படத்தில் மிரள வைத்தது விக்ரமின் நடிப்பு. முகத்தில் வீக்கங்களுடன் கொஞ்சமே தெரியும் கண்களுடனும், உதடுகளிலும் அத்தனை உணர்ச்சியை காட்டியிருக்கிறார். அவருடைய கடினமான உழைப்பு படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. எமி ஜாக்சன் அழகோ அழகு.
அடுத்தது பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவு. சீனாவில் நாம் இதுவரை தமிழ் படத்தில் பார்த்திராத இடங்கள், மற்றும் விக்ரம், எமி காதல் காட்சிகள், ஒரு பிரம்மாண்ட சைக்கிள் சண்டை என்று ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகு. முக்கியமாக எமி, விக்ரமிற்கு நடிப்பு வருவதற்காக காதலித்ததாக சொல்லும் காட்சியில் அவர்கள் முகத்தில் பிரதிபலிக்கும் எண்ணங்களுக்கு மிதமான லைட்டிங் கொடுத்து மெருகூட்டுகிறார்.இந்தக் காட்சியில் ரஹ்மானின் பின்னணி அபாரம். "மொத தபாவை" இன்னொரு தபா வேறு பரிமாணத்தில் வயலினில் வழிய விடுகிறார்.
ரஹ்மான் பின்னணியில் வேறு வித பரிமாணம் காட்டியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. "பூக்களே சற்று ஓய்வெடுங்கள்" பாட்டில் ஹரிசரண், ஸ்ரேயா கோஷால் குரல்கள் மனதை வருடுகின்றன. மற்றபடி "என்னோடு நீ இருந்தால்" சித் நன்றாக பாடினாலும் படத்தில் தேவையில்லாமல் ஷங்கரின் கிராபிக்ஸ் திறமையை நாம் பார்த்தே தீர வேண்டும் என்று வைத்திருக்கிறார். படத்தின் நீளம் ரொம்பவே அதிகம். மூன்று மணி நேரம் படங்களை பார்ப்பது என்பது இந்த காலகட்டத்தில் வேலைக்கு ஆவாது. இரண்டு மணி நேரத்தில் கதையை முடித்திருக்கலாம். மேலும் ஷங்கர் அந்நியனில் பொது நலனிற்காக பழிவாங்கும் விக்ரமை தன நலத்திற்காக "புருடா புராணம்" வைத்து வதைக்கிறார். மேலும் அந்த திருநங்கை கேரக்டரை வைத்து நக்கலடித்திற்பதற்கு தன் வீட்டு வாசலில் கூடியிருக்கும் திருநங்கைகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஷங்கர் ரொம்ப காலத்திற்கு பிரம்மாண்டத்தையும் தொழில் நுட்பத்தையும் நம்பி படம் எடுத்துக்கொண்டிருக்க முடியாது. இன்னும் ஒரு சுஜாதா வேண்டும். கற்பனை வறட்சியும், வசனங்களின் தாக்கமின்மையும் நன்றாகவே படத்தில் தெரிகிறது.
சந்தானம் பழி வாங்கிய வில்லன்களை பேட்டி காணுவதெல்லாம் டூ டூ மச். முதல் பாதியில் சந்தானம் ஒன் லைன் காமெடி வழக்கம் போல் கிச்சு கிச்சு ரகம்.
மற்ற படி படம் மொக்கைக்கு சற்று மேலே சுமாருக்கு சற்றே கீழே. ஆனால் ரவிசந்திரனுக்கு போட்ட முதலுக்கு மோசம் இருக்காது என்று தோன்றுகிறது. அதற்கான காரணங்கள் வேறு விஷயம்.
வாயால் சுட்ட வடைகள்
சமீபத்தில் வந்த "நிரந்தர" படத்தை எராளத்திற்கு நக்கல் செய்த "தற்காலிக" குஞ்சுகள் படத்தின் வசூலை குறி வைத்து வாயால் சுட்ட வடைகள் தீய்ந்து போய் இப்பொழுது நாறிக்கொண்டிருக்கிறது.
"ஆயுதம்" படத்தின் வசூல் "மெசின்" படத்தை மிஞ்சி விட்டது ஆஹா ஓஹோ என்று சமூக வலைதளத்தில் வடை சுட்டார்கள். ஆனால் இந்த வருட ஆரம்பத்தில் வந்த "ஃபோப்ஸ்" இதழில் 2014ம் வருட இந்தியன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை புட்டு புட்டு வைத்து "தற்காலிக" சூப்பர் ஸ்டார் மார்க்கெட் நிலவரம் என்ன என்பதை அலசி அம்மணமாக்கி அரங்கத்தில் ஏற்றி விட்டது.
போத குறைக்கு தமிழ் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை விக்கிபீடியா புள்ளி விவரங்களுடன் கொடுத்திருக்கிறது.
இது வரை வந்த தமிழ் படங்களில் அதிக வசூலைப் பெற்றது.
எந்திரன்------------------------------- 256 கோடி
விஸ்வரூபம்----------------------- 220 கோடி
தசாவதாரம்------------------------- 200 கோடி
மற்றையவை யாவும் நூறு கோடி அளவில் உள்ளன.
இது வரை வந்த தமிழ் படங்களில் முதல் நாள் வசூல் நிலவரம்
லிங்கா------------------------------- 37 கோடி
ஐ--------------------------------------- 34.74 கோடி
மற்றைய புள்ளி விவரங்களைக் காண.
இங்கே கிளிக்கவும்
இந்த விவரங்கள் நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் மக்களே. அடுத்த TNPSC வினாத்தாளில் இதை பற்றிய கேள்விகள் வர வாய்ப்புள்ளது.

15 comments:
Nicely written . I am frequently visit your site . Nice
Nicely written. Good
வணக்கம்
தங்களின் பார்வையில் விமர்சனம் நன்றாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரூபன் வருகைக்கு நன்றி.
சுவையான பகிர்வு! நன்றி!
சுரேஷ் வருகைக்கு நன்றி.
விஸ்வரூபம்-----------------------INR 220 கோடி?? close to yenthiran?? Is it that worth? I doubt the data...........
ஜெயதேவ் உங்கள் கருத்து சிந்திக்க வேண்டியது, ஆனால் அந்தப்படத்தின் பப்ளிசிட்டி அதை அப்படி போக வைத்தது, அது கமலே எதிர்பாராதது.
ஐ ஐயே ஆகிவிட்டதோ....னீங்கள் சொல்லியிருப்பது மிகச் சரி..//.ஷங்கர் ரொம்ப காலத்திற்கு பிரம்மாண்டத்தையும் தொழில் நுட்பத்தையும் நம்பி படம் எடுத்துக்கொண்டிருக்க முடியாது. //
துளசிதரன் வருகைக்கு நன்றி.
சுவாரஸ்யம்...
தனபாலன் வருகைக்கு நன்றி.
படம் மொக்கைக்கு சற்று மேலே சுமாருக்கு சற்றே கீழே. ஆனால் ரவிசந்திரனுக்கு போட்ட முதலுக்கு மோசம் இருக்காது என்று தோன்றுகிறது. நான் நெனச்சேன் நீங்க சொல்லீட்டீங்க பாஸ்
எமிக்காக 'சுமாருக்கு ரொம்ப மேலே' என்று சொல்லியிருக்கக்கூடாதா?
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.