Pages

Tuesday, 13 January 2015

கல்லறையிலிருந்து கருவறை வரை.............தலைகீழா வாழோனும்................


வாழ்க்கையை தலை கீழா வாழ்ந்து பார்க்கோனும்...இந்த வித்யாசமான சிந்தனை ஹாலிவூட் நடிகர் உடி ஆலன் அவர்களுக்கு வந்திருக்கிறது, சமீபத்தில் அவருடைய சிந்தனையை நண்பர் வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார். படித்த போது அட இது நல்லா இருக்கே என்று தோன்றியது. அந்த செய்தி ஆங்கிலத்தில் வந்தது, அதனுடைய தமிழாக்கம் இதோ..........

கல்லறையிலிருந்து கருவறை வரை.............

இறப்பிலிருந்து மீண்டு கல்லறை விட்டு  முதியோர் இல்லத்தில் துயிலெழுவீர்கள்.............நாளுக்கு நாள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் ஆகிவருவீர்கள்.

நீங்கள் வேலை செய்யும் அலுவகத்திலிருந்து மிகவும் ஆரோக்கியமாக இருப்பதற்காக ஓய்வு என்று விரட்டப்படுவீர்கள். உங்களது பென்சன் பணத்தை வாங்கிக்கொள்வீர்கள். பின்னர் உங்களது மேசையிலமர்ந்து பணி தொடங்குவதற்கு முன் உங்களுக்கு தங்க கடிகாரம், மாலை மரியாதை செய்து விருந்து உபசாரம் செய்யப்படுவீர்கள்.

பின்பு உங்கள் நாற்பது வருட அலுவலக வாழ்க்கை முடியும் பொழுது மிகவும் இளமையாக உங்களது பனி ஓய்வை எதிர்கொள்வீர்கள்.

பின்னர் குடி, குட்டி என்று ஒரே கும்மாளம்தான்.............இப்பொழுது கல்லூரி நாட்கள். பின்னர் பள்ளிக்கூடம்................நர்சரி.............என்று ஒரே கொண்டாட்டம்.
பின்னர் கவலைகள் எதுவுமற்ற குழந்தை பருவம் நீங்கள் பிறக்கும் வரை.........

இப்பொழுது உங்களது கடைசி ஒன்பது மாதங்களை  கருவறையில் உயர்தர ஸ்பா குளியல்.............வெப்பக்கட்டுப்பாட்டு வசதி.........பசி எடுத்தால் ரூம் சர்வீஸ்........எல்லாம் குழாய் வழியாக............என்று வசதியாக பொழுது கழியும்.....பின்னர் இரண்டு ஜீவன்களின் உச்சகட்ட மகிழ்ச்சியில் வாழ்க்கையை முடிப்பீர்கள்.

அடடா நல்ல சிந்தனைதான்.............  

9 comments:

  1. வித்தியாசம்தான்......

    ReplyDelete
  2. இது நல்லா இருக்கே! :)

    ரிவர்ஸ் கியரில் வாழ்ந்து பார்க்கலாம்....

    ReplyDelete
  3. முடியாது என்று ஆன பிறகு
    இப்படி யோசித்தாவது
    சுகம் கொள்ளலாம்......

    முதிர்வின் எண்ண ஓட்டம்....
    இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது கும்மாச்சி அண்ணா.

    ReplyDelete
  4. ஹூம்
    இப்படியெல்லாம் நடந்தால் !!!
    எப்படி இருக்குமென்று யோசிக்கவைத்ததுடன்
    பெருமூச்சையும் வரவைத்தது..

    ReplyDelete
  5. வித்தியாசமான சிந்தனை....

    ReplyDelete
  6. இரண்டு ஜீவன்களின் உச்சகட்ட மகிழ்ச்சியில் வாழ்க்கையை முடிப்பீர்கள்.

    ReplyDelete
  7. சிந்தனை வித்தியாசமாகத்தான் இருக்கிறது! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. வித்தியாசமான பகிர்வு.
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.