பேயாட்சி ஒழிந்தது........
இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் ராஜபக்ஷேவை ஒழித்து சிரிசேனாவை அரியணையில் அமர்த்திவிட்டனர். தேர்தல் முடிவு வரும் முன்பே ராஜபக்ஷே மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறினார் என்று செய்திகள் வந்தன, தனது ஊர்பக்கம் ஒதுங்கி என்னுடைய தோல்விக்கு தமிழர்கள்தான் காரணம் என்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார். அவரது தம்பிகளும், புதல்வனும் ஊரை விட்டு ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொஞ்ச நஞ்சமா ஆடினார்கள். இப்பொழுது சொந்த ஊரில் இருக்கமுடியாத நிலைமை. "ஆடிய ஆட்டமென்ன? ".
சிரிசேனா ஆட்சியில் தமிழர்களுக்கு ஏதாவது முன்னேற்றம் கிடைக்குமா? என்ற கேள்விக்கு உண்மையான பதில் "ஒன்றும் கிடைக்காது". அப்படியே சிரிசேனா ஏதாவது செய்யலாம் என்று நினைத்தாலும், புத்தபிட்சுகள் சும்மா விடமாட்டார்கள், பழைய சரித்திரம் போல அவருக்கே சங்கூதி விடுவார்கள்.
தமிழ்நாட்டில் வழக்கம் போல சீமான் போன்ற அரசியல் அல்லக்கைகள் குரல் விட்டு இன்னும் கொஞ்ச காலத்திற்கு பொழுதை ஓட்டலாம். அப்படியே அந்த அலை ஓய்ந்தாலும் சினிமா கட்டபஞ்சாயத்து செய்து காலம் தள்ளலாம், இல்லை இருக்கவே இருக்கிறார் சூப்பர் ஸ்டார் அவரை வேகவைத்து வறுத்து சாப்பிடலாம். நம்ம தமிழ் உணர்வு என்னாவது?
மொத்தத்தில் இலங்கையில் பேய் போய் பிசாசு வந்திருக்கிறது.
சிங்கார சென்னை
கடந்த நான்கு வாரங்களாக விடுமுறையில் சென்னை சென்று வந்தேன், எல்லோரும் விடுமுறையில் நிறைய பதிவு போடுவார்கள் நமக்கு விடுமுறையில்தான் ஊரில் நிறைய வேலை காத்திருக்கும். வீட்டு மராமத்து, ஒரு வருட தூசி தட்டுதல், பார்க்கவேண்டிய உறவினர்கள் நண்பர்கள் என்று முதல் மூன்று வாரம் ஓடிவிட்டது. நான்காவது வாரம் ஒரு வருடத்திற்கு தேவையான பொருட்கள் பின்னர் நண்பர்களுக்கு வாங்க வேண்டிய பொருட்கள் என்று கடைத்தெருவில் குடியிருக்க வேண்டிய நிலைமை. இதில் எங்கே பதிவுகள் போடுவது. இந்த வருடமும் வழக்கம்போல புத்தக சந்தை தொடங்குமுன் வண்டி ஏறியாகிவிட்டது.
போதாத குறைக்கு சென்னையில் வண்டி ஓட்டுவதை விட ஒரு கொடுமையான விஷயம் கிடையாது. சமீபத்தில் பெய்த மழையில் ஒவ்வொரு தெருவிலும் குண்டு குழிகள் ஏராளம், அதில் ஒரு முறை இறங்கி ஏறினால் இடுப்பை பிடித்துக்கொண்டு மீதி தூரத்தை நடந்தே கடக்க வேண்டும். அம்மா தோட்டத்தில் பதுங்கி இருப்பதால் அவரவர் ஓய்வெடுத்துக் கொண்டும் காவடி தூக்கிக்கொண்டும் இருக்கின்றனர். இதில் கார்பரேஷன் எங்கே வேலை செய்வது? ப்ளடி நாஸ்டி முனிசிபாலிட்டி.
ரசித்த கவிதை
குடுகுடுப்பைக்காரன்
திடீரென
வீட்டு வாசலில் வந்து நின்று
குறி சொல்லத் தொடங்கியவன் கையில்
சட்டெனத் திணிக்கப்பட்ட
ரூபாய் நோட்டைப் பார்த்ததும்
சொல்லவந்த
குறைகள் அனைத்தையும்
பக்கத்து வீட்டில்
சொல்லத் தொடங்கினான்
குடுகுடுப்பைக்காரன்
நன்றி: சசி அய்யானார்
ஜொள்ளு

3 comments:
பிசாசு தானா... தேவதை ஆகாதா...?
ஜொள்ளு படத்திற்கு தலைப்பையும் வைக்கலாமே கும்மாச்சி,உதாரணமாய் ...யானை படுத்தாலும் குதிரை மட்டம் :)
த ம 3
சிறப்பான பகிர்வு! இனிய பொங்கல்வாழ்த்துக்கள்!
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.