ஸ்ரீ ரங்கம் "இடை" த்தேர்தல்
ஸ்ரீ ரங்கத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஆளுங்கட்சி தங்களது வேட்பாளரை அறிவித்து அவர் இன்று வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டார். காங்கிரசோ தனது வேட்பாளராக "குஷ்பூ" வை நிற்கவைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. பி.ஜே.பி. நெப்போலியன் என்று பேசிக்கொண்டிருக்கிறது. தி.மு.க.வும் வேட்பாளரை அறிவித்துவிட்டது.
தே.மு.தி.க தனித்துப்போட்டி என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. இந்த ஜோதியில் ஐக்கியமாகி டெபொசிட் வேணுமென்றால் கிரிஜா ஸ்ரீ தான் நல்ல போட்டி கொடுப்பார்.
பலே சரியான "இடை" தேர்தல் போட்டி.
அனானி அணில் குஞ்சு
என்னுடைய போன பதிவில் தமிழ் சினிமாக்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை விக்கிபீடியா தகவல்களுடன் எழுதியிருந்தேன். அதைக் கண்டு தாங்க முடியாத அணில் குஞ்சு ஒன்று அனானியாக வந்து "டியர் மண்டை ஃபேன்" என்று ஆரம்பித்து புழுத்த நாய் கூட குறுக்கே போக முடியாத படி தமிழ் அகராதி காணாத அருஞ்சொற்பொருட்களுடன் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தது. அதில் தப்பில்லை, அவருடைய கருத்தை அவர் தெரிவிக்கிறார். என்னுடைய பதிவை எத்துணையோ பேர் படிக்கிறார்கள், அவர்கள் இந்த அருஞ்சொற்பொருட்களை கற்றுக்கொள்ள வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில் பிரசுரிக்கவில்லை. மேலும் அவர் சொல்லுவது போல் நான் யாருடைய கடினசாவு விசிறியும் அல்ல.
அணில் அன்னானிகளே உங்களது கருத்தை நாகரீகமான முறையில் தெரிவியுங்கள், உங்களது தனி மனித துதியை நான் குறை சொல்ல வில்லை. கொண்டாடுங்கள், அடுத்தவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு போகலாமே. நீங்கள் உங்களது நடிகரின் கடினசாவு விசிறி என்ற பெயரில் அவருக்கு சொறிந்து விடவேண்டும் என்றால் தனியாக நீங்கள் பதிவு போட்டு சொறிந்து கொள்ளுங்கள். ஆனால் அதற்காக உங்களது தலைவன் ஒன்றும் கொடுத்துவிடமாட்டான். அதை புரிந்து கொண்டால் நீங்களெல்லாம் எங்கேயோ போய் விடுவீர்கள். அது வேறு விஷயம். என்னுடைய கருத்தை நான் எழுதுவேன் அது உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை நண்பர்களே.
மீறி நீங்கள் கருத்து தெரிவிக்க வேண்டுமென்றால் உங்களது சங்காத்துடன் வாருங்கள், அனானியாக வரவேண்டாம். அனானிக்கு அகராதியில் வேறு அர்த்தம்.
ரசித்த கவிதை
பறக்கமுடியா நாளொன்றில்
திண்மை அடைத்து
காற்றுவெளி மேவி
பொன்வண்டொத்த
சிறகையும் ஒட்டிவிட்டு
அடையாளத்திற்காய்
ஒற்றைக்கல் வைத்து
கால் மடித்து காத்திருக்கிறது
அந்த விநோதக் காற்று.
புதுப்பித்தல் பற்றிய
மரணித்த வாசகங்கள்
கொண்டு வந்த கானத்தில்
உப்பின் அடர்த்தி குறைத்து
பறக்க முயற்சிக்கிறது
ஒரு மோனரிதப் பூ.
என்றோ உதிர்த்துவிட்ட
சருகின் சப்தம்
விழிக்குள் நடுங்க
ஒடிந்த காம்பில்
அமைதியின் அடையாளம்.
பொன் வண்டொத்த அச்சிறகிற்கு
பூவுடன் பயிற்சியும் தரலாமென
அறிவிக்கிறது அவ்விநோதக் காற்று!!!
நன்றி: ஹேமா
ஜொள்ளு
11 comments:
ஜொள்ளு ஜில்லுதான் போங்க...
கில்லர்ஜி வருகைக்கு நன்றி.
வழக்கம் போல அசத்தல்! நன்றி!
சுரேஷ் வருகைக்கு நன்றி.
வழக்கம் போல் அருமை...
குமார் வருகைக்கு நன்றி.
//கடினசாவு விசிறி //இது தான் தமிழ்ப் "படுத்துதலோ " ?
எனது புதிய பதிவு என் நூல் அகம் 3
சிரமம் எதையும் மறந்து விடுங்கள்...
ஜொள்ளினேன்...
Indha ammani yaroo
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.