உங்க தாத்தா அரிசி பதுக்கியவர்
சமீபத்தில் காகிரசை விட்டு வெளியேறிய "ஜெயந்தி நடராஜனை" தற்போதைய தமிழ் மாநில காங்கிரசின் தலைவர் இளங்கோவன் விமர்சித்த விமரசனம்தான் தலைப்பில் உள்ளது. தலைவர் பொறுப்பேற்றவுடன் சிதம்பரம், கார்த்திக், ஜெயந்தி நடராஜன் என்று எல்லோரையும் தன் அரைவேக்காட்டுத்தன பேச்சால் வருத்தெடுத்துக்கொண்டிருக்கிறார் இளங்கோவன்.
ஜெயந்தி நடராஜன் தான் மத்திய அமைச்சராக இருந்த பொழுது ராஜீவ் ஒரு சில ஆட்களுக்கு ஒப்பந்தம் தர நிர்பந்தித்தார் என்று சொல்லப்போக, இளங்கோவன் "உங்க தாத்தா பக்தவத்சலம் பஞ்ச காலத்தில் அரிசி பதுக்கியவர் தானே" என்று காங்கிரஸ் கட்சி தலைகளின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுகிறார்.
நல்ல கட்சிய வளர்க்குறீங்க அப்பு, புஷ்கு.........அக்கா கூப்பிடுறாங்க தமிழ் நாடு காங்கிரஸ் சார்பா சத்தியமூர்த்தி பவன்ல ஒரு குத்து போடுங்கபா...........
தள்ளாடும் தமிழகம்
இரண்டு வாரங்களுக்கு முன்பு "இரண்டு லட்சம் கோடி கடன், தள்ளாடும் தமிழகம்" என்று ஜூனியர் விகடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் தமிழகம் கடன் சும்மையில் தள்ளாடிக்கொண்டிருப்பதாகவும் அதற்கு உண்டான காரணங்களை அலசி ஆராய்ந்து புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையை நாம் படித்து ஒன்றும் ஆகப்போவதில்லை.
தொழில் வளர்ச்சியிலும், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியிலும் அண்டை மாநிலங்கள் எப்படி முன்னேறிக்கொண்டிருக்கின்றன, மேலும் தமிழ் நாட்டில் தொழில் தொடங்க யாரும் முன் வராததற்குக் காரணம் மின்சாரப் பற்றாக்குறையே என்று சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் நமது அமைச்சரோ தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கப்சா விட்டுக்கொண்டிருக்கிறார்.
தமிழகம் தள்ளாடுகிறது என்பது டாஸ்மாக்கில் நிற்கும் வரிசையைப் பார்த்து கணக்கிட்டுவிடலாம்.
கீச்சோ கீச்சு
ஆஞ்சநேயருடன் நான் இரண்டு முறை பேசியுள்ளேன், அசப்பில் என்னை மாதிரியே இருக்கிறாய் என்று கூறினார்---------------கட்டதொர
சின்ன வயசுல ஜட்டி போடாம ஜிப்பு போடும் போது ஒரு கவனம் வருமே அந்த கவனம் வாழ்நாள் முழுக்க இருந்தா வாழக்கையில் முன்னேறிரலாம்------------------------சிக்கல்காரன்
அந்த கவனம் வாழ்நாள் முழுக்க இருக்கனும்னு இன்னிக்கு வரை ஜட்டி போடாம ஃபேண்ட் போடுறியே உன் கடமை உணர்ச்சி கண்டு...............புதியவன்
ரசித்த கவிதை
தொக்கி நிற்பது
விழுங்கிய பின்னும்
தொண்டையில் நிற்பதுபோல்
நெருடலில் வாழைப்பழம், சோறு என
எதைஎதையோ விழுங்கிப் பார்த்தும்
விலகாத புதிராகப் போய்விட்டது என
தேத்திக்கொண்டு
உறங்கப்போனவனின் கனவில்
தொக்கி நிற்கிறது
மாத்திரை ஒன்று----------------------------நன்றி: கீரன் செல்லதுரை
ஜொள்ளு

4 comments:
கலக்கலோ கலக்கல்
த ம 1
காங்கிரஸ் இனியாவது வளரட்டும்.
வரிசை மேலும் மேலும் நீண்டு கொண்டு தான் போகிறது...!
மக்களின் முதல்வர் மீண்டும் தமிழக முதல்வர் ஆனால் தமிழகம் "ஸ்டெடியாகிடும் " சகோ.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.