Wednesday, 4 March 2015

கலக்கல் காக்டெயில்-167

துண்டு என்ன வேட்டியே விழும்

வழக்கம் போல ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். சரியா அதுக்கு நீ ஏன்யா மெர்சல் ஆவுறே என கேட்பது புரிகிறது. நாம் ஒன்றும் தினமும் டன் கணக்கில் சரக்கு அனுப்பவில்லை. ஆனால் இந்த சரக்கு கட்டண உயர்வால் தமிழ் நாட்டிற்கு வந்த சோதனையை நினைத்துதான் நமக்கு மெர்சல் ஆவுது.

தமிழ்நாட்டின் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி "கூட்ஸ் வண்டியில்" வருவது நாம் அறிந்ததே. அதற்கு உண்டான கட்டணம் உயர்த்தப்படுவதால் என்ன ஆகும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். இந்த கட்டண உயர்வால் தமிழகத்தின் மின்சார உற்பத்தி செலவு மேலும் நானூறு கோடி அதிகாரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆதலால் "மக்கழே" நமது பட்ஜெட்டில் "துண்டு" விழ துண்டு என்ன? "ராம்ராஜ் வேட்டி" விழவே வாய்ப்பிருக்கிறது.

மார்ச் 18, லட்டா..........அல்வாவா?

பெங்களுருவில் நடக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு மார்ச் 18ம் தேதி ( பதினெட்டு கூட்டு தொகையை கவனிக்கவும்) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு தேதி முதலில் செப்டம்பர் 20 என்பதை மாற்றி 27 (கூட்டுத்தொகை கணக்கில் கொண்டு) தீர்ப்பை வெளியிட வைத்து தாமே தேடிப்போய் ஆப்பில் அமர்ந்த கதையும் அதைத்தொடர்ந்த தொண்டர்கள் அம்மா அறவழிப்போரட்டமும் தமிழகம் நன்றாக அறியும்.

இப்போது அமைச்சர்கள் "தெய்வம் போன்ற அம்மா" அவர்கள் வழக்கிலிருந்து விதலைபெற உபரி தெய்வங்களுக்கு அலகு குத்தி, பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செய்து கொண்டிருக்கின்றனர்.

தெய்வம் கலங்கி நிற்பதாக சொல்லப்படுகிறது.

ரசித்த கவிதை 

அவனின் குழந்தைகள் 

மான் வரைந்தாள் அக்கா
"மை" தெளித்து
புள்ளிமான் என்கிறாள் தங்கை

இப்போதோ
குதிரை வரைகிறாள் தங்கை
குறுக்கில் கோடுகளிட்டு
வரிக்குதிரையக்குகிறாள் அக்கா

புளியங்கொட்டைகள் புதைத்து
தண்ணீர் தெளிக்கிறாள் தங்கை
வேப்பங்கிளையொடித்து நட்டு
மரமென்கிறாள் அக்கா

தொடர்கிறது விளையாட்டு
நீதான் அம்மா
நான்தான் அப்பா
விளையாட்டு தொடர்கிறது

த்தூ..
உப்பில்ல ஓரப்பில்ல
என்னத்தடி கிண்டிவெச்சிருக்க......

அக்காள்.........தங்கையை அறைகிறாள் பொய்யாய்
அழுவதாய் அவளும் பாவனையிட்டு
கயிறொன்றைத் துழாவி யெடுத்தோடி
அறைக்கதவை அறைந்து மூடும்போது

வியர்த்து விறுவிறுக்க
விழிப்பு தட்டுகிறது
அவனுக்கு.                                   நன்றி: சூ.சிவராமன்



ஜொள்ளு 


Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

KILLERGEE Devakottai said...

தெய்வம் கலங்கி நிற்கிறதா ?
கவிதை அருமை நண்பா
ஜொள்ளு ஜில்லு.
தமிழ் மணம் 1

திண்டுக்கல் தனபாலன் said...

மின்சார உயர்வு நினைத்தாலே ஷாக்...!

sarathy said...

Nalla cocktail.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.