சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பின் மேல் முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் இன்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை இருக்கையில் வந்து அமர்ந்த இரண்டே நிமிடங்களில் அறிவித்துவிட்டார்.
இது எதிர் பார்த்ததோ அல்லது எதிர்பாரததோ அல்ல. இந்த வழக்கின் போக்கையும் தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற மசோதாக்கள் நிறைவேற்றமும் ஓரளவுக்கு தீர்ப்பை வாதிகளால் யூகிக்க முடிந்தது. பிரதிவாதி ஆதாரங்கள் ஒன்றும் வாதிகளுக்குக்கு எதிராக சமர்ப்பிக்க வில்லை. ஏன் அவர் நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கவே இல்லை. அதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை அணுகி அவர்கள் கொடுத்த தீர்ப்புகளும் ஊரறிந்ததே.
சரி விஷயத்துக்கு வருவோம். வாதியின் சொத்து மதிப்பு முறைகேடாக கணிக்கப்பட்டுள்ளது. அவரது வருமானம் 1991 முதல் 1996 வரை அவர் பதவியிலிருந்த காலங்களில் 34, 76,65,654 ருபாய். அவரது சொத்தின் மதிப்பு 37,59,02,466 ரூபாய். ஆதலால் வாதி தன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது 2,82,36,812 ருபாய். இது வருமானத்தில் 8.12% , இது 10% கீழே உள்ளதால் தண்டனை தேவையில்லை, ஆதலால் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
ஆதலால் திருவாளர் அரசியல்வாதிகளுக்கு இதனால் அறிவிப்பது என்னவென்றால் தங்களது வருவாயில் 10% வரை லஞ்சம் வாங்கிக்கொள்ளலாம். அதற்கு மேலும் வாங்கி பின்னர் அதை மறைப்பதோ அல்லது மாட்டி வெளியில் வருவதோ அவரவர் திறமை.
தமிழ் நாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் மாறி மாறி கடந்து முப்பது வருடங்களாக ஆட்டையைப் போட்டு கொண்டிருக்கின்றன.
மொத்தத்தில் "ஊழலின் ஊறுகண்ணாக இருந்தால் அது தி.மு.க ஊழலால் நீதியையே வளைக்க முடிந்தால் அது அ.தி.மு.க." இவர்களுடன் கூட்டணி வைக்கும் கோமாளிகள் என்றும் ஆட்சிக்கு வரப்போவதுமில்லை, தேர்தல் வரை தோள் கொடுத்து பின்னர் வெளிநடக்கும் அல்லது வெளியே எறியப்படும் சக்கைகள்.
நெஞ்சு பொறுக்குதில்லையே..............

7 comments:
நெஞ்சு பொறுக்குதில்லைனா ? என்ன செய்யிறது முட்டாப்பய மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்
தமிழ் மணம் 2
கரீடுங்கண்ணா.
After long break with "nach" entry
சொத்துக்குவிப்பு வழக்கு சொல்வது என்ன? -பணமெனில் பிணமும் வாய் திறக்கும்! குமாரசாமி காட்டில் மழையோ மழை, பண மழை!
இனிமேல் யாராவது தவறான வழியில் பணம் சுருட்டினால், நீதிபதிகளைச் சரிக்கட்டக்கூடிய அளவு சுருட்டுங்கள்!
என்னமோ போங்க...
18 வருட வாய்தா வழக்கில... ரெண்டே நிமிடங்களில் தீர்ப்பா....அதெப்படி???? எப்படி.... எப்படி...... எப்படி.... ரெண்டு நிமிட தீர்ப்பு..எப்படி எப்படி எப்படி,,,,???
நன்றாக அலசி உள்ளீர்கள்.
சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.