Pages

Saturday, 25 July 2015

ஏறக்குறைய அம்பேலாயிட்டேன்.............

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வலைப்பூ பக்கம் வரமுடியவில்லை........

காரணம் வேறொன்றுமில்லை...............

நேரமில்லை...............தொடர்ந்து வேலைப்பளு.........ஒரு வழியாக வேலையை முடித்துக் கொடுத்துவிட்ட மகிழ்ச்சியில் டேமேஜரிடம் விடுமுறை கேட்ட பொழுது சரி விடுமுறையில் செல்.............வந்தவுடன் அறிக்கை கொடுத்தால் போதும் என்று சொன்ன வேளையில் ஆறுவாரம் விடுமுறை எழுதிக் கொடுத்து விட்டு எஸ் ஆகலாம் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கும் பொழுது மகளின் மேற்படிப்புக்காக விசா, அட்மிஷன் என்று ஒரே அலைச்சல்.

அதை முடித்து நமது மொக்கையைத் தொடரலாம் என்றால் பெற்றோர்களின் உடல் நிலை மோசம் அடைந்ததால் வீடு மருத்துவமனை என்று கடந்த நான்கு வாரங்களாக ஒரே அலைச்சல்.

மருத்துவமனை அனுபவங்களை பதிவாக எழுதினால் இன்னும் இருபது பதிவுகள் தேத்தலாம்.

மருத்துவமனை அனுபவங்கலிருந்து கற்ற பாடம் என்ன என்றால் கத்துக்குட்டி மருத்துவர்கள் நமது பணத்திலும் உடம்பிலும் வேலை கற்றுக்கொள்கிறார்கள். இது மிகைப்படுத்தியது அல்ல. அது அப்போலோவோ இல்லை அதை விட சிறந்த மருத்துவ மனையோ எல்லா இடத்திலும் இதே கூத்துதான்.

சரி விஷயத்திற்கு வருவோம் .................

பதிவு எழுத எவ்வளவோ இருந்தன .................தவற விட்டு விட்டேன்.

அம்மா இடைத்தேர்தல் வெற்றி, தொடரும் அம்மாவின் உடல்நிலை குறித்த சந்தேகங்கள், ஐயாவின் இடைப்பட்ட கும்மி, மருத்துவரின் மகன் ப்ரமோஷன் என்று நிறைய விஷயங்கள்.

போதாகுறைக்கு தமிழ் திரையுலகம் வேறு மொக்கை மொண்ணை என்று கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

பதிவுலகே இதோ வந்து விட்டேன், இனி மொக்கைகள் தொடரும்...........கில்மா படங்களுடன்..........


9 comments:

  1. தனபாலன் வருகைக்கு நன்றி. உங்களது பின்னூட்டம் எனக்கு நல்ல ஊக்கத்தை தருகிறது...............இனி தொடர்ந்து எனது மொக்கைகள் அணி வகுக்கும்.

    ReplyDelete
  2. பதிவை பார்த்தது சந்தோஷமாக இருந்தது. சந்தோஷம் பதிவிற்கா அல்லது நீங்கள் மீண்டும் வருகை தந்ததற்கா அல்லது பதிவில் இட்ட படத்திற்காக என்று மட்டும் கேட்டுவீடாதீர்கள் ஹீஹீ

    ReplyDelete
  3. எல்லாருக்கும் கொஞ்சம் அவ்வப்போது எழுதும்போது கேப் விழுரது சகஜம்தான்.
    இனி தொடருங்கள் சார்...

    ReplyDelete
  4. வாங்க கும்மாச்சி! கலக்குங்க,,
    மருத்துவமனை அனுபவங்கலிருந்து கற்ற பாடம் என்ன என்றால் கத்துக்குட்டி மருத்துவர்கள் நமது பணத்திலும் உடம்பிலும் வேலை கற்றுக்கொள்கிறார்கள். இது மிகைப்படுத்தியது அல்ல. அது அப்போலோவோ இல்லை அதை விட சிறந்த மருத்துவ மனையோ எல்லா இடத்திலும் இதே கூத்துதான்.// மிக மிக உண்மையே
    அது சரி அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனாலும் இதே மருத்துவர்கள் தானா? (இது உங்க அம்மா இல்லைங்க. நம்ம...ஐயையோ சாரி சாரி..தமிழ்நாட்டு அம்மா மூவேந்தரின் குலமகள் அம்மா...)

    மருத்துவரின் மகன் ப்ரமோஷன்// இது என்ன புதுக்கதை கொஞ்சம் இதைப் பத்தியாவது பதிவு போடுங்களேன்...

    உங்கள் பெற்றோரின் மருத்துவ அனுபவங்களையும் போடுங்களேன் மருத்துவர்கள் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்வார்கள் என்றுதான்..

    ReplyDelete
  5. வாருங்கள் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  6. இனிய வருகை
    புதுப் பொலிவுடன்
    தொடருங்கள்


    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    ReplyDelete
  7. We missed you and Munimmaa .
    keep rocking.
    KALAKARTHIK
    KARTHIK AMMA

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.