Sunday, 2 August 2015

கலக்கல் காக்டெயில்-169

சரக்கும், ஓட்டும்,  பின்னே ஐய்யாவும், ஆயாவும்..........

தமிழ் நாட்டில் இப்பொழுது மதுவிலக்கு பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. எப்படியும் தேர்தல் வருமுன்பே ஆயாவே இதை வைத்து அரசியல் செய்யலாம் என்று தோட்டத்தில் பேசியதை "கோயிலில் உருண்டவரிடம்" போட்டு கொடுக்க அதை தனது கைத்தடியிடம் சொல்ல அது தாத்தாவை எட்டி இருக்கிறது. அவர் விடுவாரா கொளுத்திப் போட்டு விட்டார். ஆத்தாவிற்கு விஷயம் எப்படி எதிர்த்த முகாம் போனதென்று குழம்பி பின்னர் உண்மை தெரிந்தவுடன் எடுத்த முடிவுதான்................கல்தா படலம்.

சரி விஷயத்திற்கு வருவோம். நெடுநாளாகவே பல போராட்டங்களை நடத்தி மதுவிலக்கிற்காக போராடிவந்த சசிபெருமாளின் மரணம் இப்பொழுது அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

பா.ம.க இதை வைத்து "செருப்படிபட்டாலும் பரவாயில்லை" "லவ்பெல்லை" முன்னிறுத்தி எப்படியும் முதல்வராக்கி விடலாம் என்று மனப்பால் குடித்த வேளையில் ஆளாளுக்கு இப்போது  மதுவிலக்கை கையில் எடுத்துக்கொண்டு விட்டார்கள்.

இதில் ஆதாரம் இல்லாமல் போராடிய சசிபெருமாள் போன்றவர்கள் உயிரை விட்டதுதான் மிச்சம்.

மொத்தத்தில் மதுவிலக்கு வருமோ வராதோ நமக்குத் தெரியாது, ஒட்டு வேட்டையாட வேண்டிய நேரம் வந்துவிட்டது, யார் செத்தால் அவர்களுக்கென்ன? ஹூம் நடத்துங்க உங்கள் அரசியலை..........

மரணத்திலும் அரசியல்

அப்துல் கலாம் அவர்களின் இறுதிச்சடங்கிற்கு செல்லாமல் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவரும்  ஏதோ காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அண்டை மாநில அமைச்சர்கள் வருகிறார்கள், பிரதமர் வருகிறார், மற்றும் மத்திய அமைச்சர்கள் வருகிறார்கள். ஓய்விற்கு கொடநாடு செல்லும் ஆத்தாவிற்கும், மகளுக்கும் மருமவனுக்கும் மந்திரி பதவி வேண்டி சக்கரம் உருட்டி டில்லி செல்லும் தாத்தாவிற்கும் இப்பொழுது மேலுக்கு சரியில்லையாம்..........

அனுப்பிவைத்த அல்லக்கைகளும் நேரம் காலம் தெரியாமல் கலாம் அவர்களின் புகழ் உடலுக்கு  "மாண்புமிகு அம்மா மலர்வளையம்" வைத்து சொம்படிக்கிரார்கள்.........டேய் நல்லா இருங்க டே......

ரசித்த கவிதை 
பரிவார தேவதைகள் 
டி மாத விசேஷங்களில் 
பெண்கள் ஊர்க் கோயில்களில் கூடுகிறார்கள்.
அலகு குத்தியவர்கள் பாதங்களில் வணங்குகிறார்கள்.
பின்னர் பால்குடம் எடுக்கிறார்கள்.
மதியம் அம்மா கையால் சாப்பிடுகிறார்கள்.
அள்ளிப்போட்டுப் பாத்திரங்களைக் கழுவிய பின்
கடைகண்ணிக்குப் போகிறார்கள்.
மாலையில் தீமிதி பார்த்துவிட்டு
அன்றிரவே புறப்பட்டவர்கள்
அம்மாவை அழ வைக்கிறார்கள்.
மீண்டும் கணவனும் மகன்களும்
கலந்து கலகலப்பாய் இருக்க
அடுத்த விசேஷ தினத்தில் இவர்கள் வர வேண்டும்!

நன்றி:    ராம்வசந்த் 

நகைச்சுவை கீச்சுகள் (படித்ததில் பிடித்தது)
ஆபீசில் மேனேஜர் வீட்டு நாய் செத்ததற்கு 
எல்லோரும் அழுதார்கள்
அடுத்த வாரம் மேனேஜரே செத்தார்
ஒரு நாய் கூட அழவில்லை...........

ஜொள்ளு

எத்தனை நாளுக்குத்தான் உள்ளூர் பிகருக்கே ஜொள்ளு விடுவது.........அதான் ஹிஹி...

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அம்மா மலர்வளையம் கேவலம்...

நல்ல கவிதை...

கீச்சு செம...

Sampath said...

அருமையான ஜோக் ஐயா

”தளிர் சுரேஷ்” said...

செந்திலாண்டவர் கல்தா விஷயம் அறிந்தேன்! கவிதை அருமை! கீச்சு சூப்பர்! நன்றி!

Unknown said...

மிக்க நன்றி கும்மாச்சி
-நேசங்களுடன்
ராம் வசந்த்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.