Tuesday, 11 August 2015

குடித்திருப்போம்...........போராடுவோம்......(கவுஜ)


குடி குடியைக் கெடுக்கும்
குடித்தால் இலவசங்கள் கிடைக்கும்
குடியதனால் நாடு வளர்ச்சி அடையும்
நலத்திட்டங்கள் பெருகும்.......

மதுவிலக்கு போராட்டம் வளரும்
பொது தேர்தல் வரை தொடரும்
எது எப்படி போனாலும்
அரசாங்கம் விற்பனையைப் பெருக்கும்.

அடாது கோஷங்கள் தொடர்ந்தாலும்
விடாது விற்பனை நடக்கும்
கெடாது லாபங்கள் குவியும்
விடாது காவல் பணிகள் தொடரும்

நாட்டு நலன் என்றே சொல்லி
காட்டு  வாசிகள் கூட்டம்
ஒட்டு வேட்டையாடி நடிக்கும்
கூட்டுக் களவாணிகள் கொள்ளையடிக்கும்

நாட்டு நலன் கருதி நாமும்
ஓட்டுக்கு காசு வாங்கி
கூட்டணி அரசியலில் மயங்கி
குடித்திருப்போம், கூடிக்களித்திருப்போம்.



Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எது எது எப்படியோ...
அது அது அப்படியே...

KILLERGEE Devakottai said...

கவிதை வரிகள் அருமை கும்மாச்சி
தமிழ் மணம் + 1

”தளிர் சுரேஷ்” said...

குடி எதையெல்லாமோ கொடுப்பது இருக்கட்டும்! நமக்கு இப்படி ஓர் கவிதையும் கொடுத்தது அல்லவா? குடி வாழ்க!... ஹாஹாஹா!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி அடிப்பது, தந்தையும் மகனும் தண்ணி அடிப்பது , மகள் அப்பாவுக்கு பீர் வாங்கிக் கொடுப்பது இவை எல்லாம், சினிமா மதுவுக்கு செய்த சேவை.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.