Saturday, 31 October 2015

ரசம் சாதமும் ரசகுல்லாவும் (2)

என் தங்கையை கண்டபடி திட்டிக்கொண்டு தேஷ்ணாவை வேண்டா வெறுப்பாக வண்டியில் ஏற்றிக்கொண்டு  அவளது வீடு நோக்கி சென்றேன்.

தேஷ்ணாவின் வீடு நெருங்கும் பொழுது அவளை வழக்கமாக இறக்கிவிடும் கடை அருகில் நிறுத்திய பொழுது "ரவி அண்ணா இங்கு ஆள் நடமாட்டமே இல்லை வீட்டருகிலே இறக்கிவிடேன்". என்றாள். சரி என்று அவளது வீட்டின் வாசலில் இறக்கிவிட்டு நான் வீடு வந்து சேர்ந்தேன்.

அன்று இரவு நைட் ஷிப்ட், ஆதலால் வீட்டிற்கு வந்து குளித்து முடித்து தொழிற்சாலையை நோக்கி வண்டியை செலுத்தினேன். தொழிற்சாலையின் நுழைந்தவுடன் எனது செக்ஷனுக்கு போனால் எனக்கு முன்பு அங்கு பிரேம்குமார் இருந்தான். 

"உனக்கு என்னடா இங்கு வேலை" என்று என்னை கேட்டான். 

"டேய் இது என் செக்ஷன் உன் செக்ஷனுக்கு போ" என்றால் "டேய் உன்னை பாய்லரில் போட்டிருக்கிறார்கள்" என்றான். 

என்னது போன மாதமும் பாய்லர் இந்த மாதமுமா? இங்கு பாய்லர் வேலையைப் பற்றி சொல்லியாக வேண்டும். இது சரியான லொள்ளு பிடித்த வேலை. அங்குங்கு புகையும்  நீராவியும் லீக்காகி பாடாய் படுத்தும். போதாதா குறைக்கு பர்னரை வேறு கழற்றி அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும். சூபர்வைசர் யாரையாவது பழிவாங்க வேண்டுமென்றால் இரண்டு மூன்று மாதங்கள் பாய்லரில் போட்டு தாளிப்பார்கள். முகர்ஜி என்னை எந்த காரணத்திற்காக போட்டான் என்று தெரியவில்லை. சரி அவரிடம் கேட்கலாமென்று அவனது அலுவலகம் போனால் ஆளில்லை. எங்கே என்று கேட்ட பொழுது ரவுண்ட்ஸ் போயிருக்கிறார் என்றார்கள். இருந்தாலும் ஷிப்ட் முடிந்தவுடன் பேசிக்கொள்ளலாம் என்று பாய்லர் செக்ஷனிலேயே ஆணி பிடுங்கினேன்.காலையிலே சந்தித்து கேட்ட பொழுது இன்னா கேக்குது ரொவி, பாய்லர் என்ன பிரச்சினை பண்றார்? என்று கேட்டார். 

சார் பாய்லர் பிரச்சினை இல்லை சார், ஏன் என்னை இந்த மாதமும் பாய்லரில் போட்டீர்கள் என்று கேட்டேன்.

இந்த மாசம் அல்ல அல்லா மாசமும் ரொவி பாய்லர் பண்ணுது, என்று கேனத்தனமாக பதில் சொன்னார். 

இந்தக் கூத்து ஒரு மாதம் தொடர்ந்தது. அடுத்த மாதமும் பாய்லரில் ஆணி பிடுங்கிக்கொண்டிருந்தேன், அப்பரைசல் நேரம் வேறு நெருங்குவதால் இந்த ஆளின் கோவத்திற்கு என்ன காரணம் கேட்கலாம் என்று அவரை ரௌண்ட்ஸ் வரும்போது மடக்கினேன்.

சார் உங்களுக்கு என் மீது என்ன கோவம் சொல்லுங்க சார் என்றேன்.

ரோவி வேலையைப் பாக்குது.........ரசம் சோறு துண்ணுது ரொசகுல்லா கேக்குது.........பாய்லர் ஓடுறாரு ............ரோவி பாக்குது என்று கரண்டில நசுக்கப்பட்ட  ரசகுல்லா போல மூஞ்சிய வைத்துக்கொண்டு போய்விட்டார்.

இந்த ஆளு என்ன சொல்றாரு, ரசம், ரசகுல்லா, பாய்லர் ஒன்றும் புரியவில்லை. 

அன்று வார விடுமுறையில் வீட்டில் இருந்தேன். வழக்கம் போல தங்கையின் நண்பிகள் க்ரூப் ஸ்டடி என்ற பெயரில் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். அது முடிந்தவுடன் எல்லாம் ஏதோ தியேட்டர் போவதாக பிளான் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

தங்கை வந்து "அண்ணா உனக்கு என்ன இன்னிக்கு பிளான்" என்றாள்.

என் கேக்குற உன் கூட்டத்துக்கு ஆட்டோ ஒட்டணுமா? 

இல்லை நாங்கள் எல்லாம் சினிமாக்கு போறோம், தேஷ்ணா வரலையாம் அவளை கொஞ்சம் அவள் வீட்டில் டிராப் பண்ணிடேன் என்றாள்.

போடி உனக்கு இதே பொழைப்பா போச்சு? எனக்கு வேற வேலை இருக்கு என்றேன்.

டேய் ப்ளீஸ்டா இன்னிக்கு ஒரு நாள் மட்டும், நான் அவர்கள் வீட்டுக்கு போனால் அவள் அண்ணன்  என்னை டிராப் செய்வதில்லையா? கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்.

சரி என்று தேஷ்ணாவை கூட்டிக்கொண்டு கிளம்பினேன்.

அவர்கள் வீடு நெருங்கும் போது அண்ணா வீட்டுக்கு வாங்களேன் காபி சாப்பிட்டுவிட்டு போகலாம் என்றாள். இல்லை எனக்கு வேலை இருக்கிறது என்று சொல்லியும் மிகவும் வற்புறுத்தவே வண்டியை அவள் வீட்டின் முன் நிறுத்திவிட்டு அவளுடன் சென்றேன்.

தேஷ்ணா வீட்டில் அவள் அம்மா இருந்தார்கள். எனக்கு காபி, ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள். 

அவர்களிடம் ஆண்ட்டி இது என்ன உங்கள் பெண்ணின் பெயர் மிக விநோதமாக இருக்கிறதே என்று நான் கேட்க "தேஷ்ணா" என்றால் கடவுளின் பரிசு என்று பெங்காலியில் அர்த்தம் என்றார்கள்.

நான் என்ன செய்கிறேன் என்று கேட்கவே நான் எனது கம்பெனி பெயர் சொல்லி  அங்கு வேலை செய்கிறேன் என்றேன்.

அப்படியா உனக்கு பிரதீப்பை தெரியுமா? என்றார்கள்.

பிரதீப்பா தெரியவில்லையே? நீங்கள் யாரை சொல்லுகிறீர்கள் என்றேன். பிரதீப் முகர்ஜி அவர் அங்குதான் வேலை செய்கிறார் என்றார். இரு தேஷ்ணா "call daddy" என்றாள்.

தேஷ்ணாவின் அப்பா வந்தார். வந்தார் என்றா சொன்னேன் இல்லை அந்த கிராதகன் வந்தான்.

ரசம் இப்போ வீட்டுக்குள்ளேயே வருது............என்றான். அப்புறம் அவன் ஒன்றும் பேசவில்லை. ஒரு இரண்டு நிமிடம் அங்கு இருந்துவிட்டு, விறுவிறுவென்று உள்ளே சென்று விட்டான்.

எனக்கு இப்பொழுது அவனது லூசுத்தனமான கோவத்தின் காரணம் புரிந்தது. நான் வண்டியில் தேஷ்ணாவை கொண்டுவிடும் பொழுது எப்பொழுதோ பார்த்திருக்க்றான் போலும். இந்த ஆள் ஏதோ நம்மை தப்பாக நினைத்துகொண்டு தாளிக்கிறான் என்று தெரிந்து கொண்டேன்.

கம்பெனியில் என்னை தவிர்த்தான், மேலும் அந்த வருடம் அப்ரைசலில் என்னை பழிவாங்கிவிட்டான். இந்த ஆளுக்கு உண்மையை விளங்க வைக்கலாம் என்றால் என்னை முற்றிலுமாக தவிர்க்கிறான். அவனது பெண்ணிடமாவது கேட்கமாட்டானா? கிராதகன் 

ஒரு முறை தேஷ்ணா வீட்டிற்கு வந்த பொழுது அவள் அப்பா ஏதாவது அவளிடம் விசாரித்தாரா? என்று கேட்டதற்கு எதைப் பற்றி கேக்குறே எனக்கு ஒன்றும் புரியவில்லையே என்றாள்.

இவ்வளவு  நடந்தும் என் தங்கை எனது "ஆட்டோ" வேலையை தொடர சொன்னாள். அவள் ஒரு லூசு அவளுக்கு இதெல்லாம் புரியாது. சொல்லியும் பயனில்லை.

இனி வருடம் முழுவதுமாக பாய்லரில் குப்பை கொட்டமுடியாது என்று ஒரு சுபயோக சுபதினத்தில் குஜராத்தில் உள்ள வேறு கம்பெனிக்கு மாறினேன். அதற்கு பிறகு நான் முகர்ஜியையும் பார்க்கவில்ல தேஷ்ணாவையும் பார்க்கவில்லை.

சமீபத்தில் வேலை விஷயமாக ஜெர்மனி போய் திரும்புகையில்  ஃபிராங்க்ஃபர்ட் ஏர்போர்ட்டில் முகர்ஜியை சந்தித்தேன்.

இன்னா "ரொசம்" எப்படி இருக்குது? எங்கே இருக்குது? என்று கேட்டார். நான் விவரம் சொன்னேன். 

மிக மிக தயங்கி அவரிடம் சார் "ரசகுல்லா" இப்போ எங்கே? சார் என்றேன்.

சிகாகோவில் இருக்குது? ரண்டு குட்டி ரசகுல்லா கூட இருக்குது என்று சிரித்தார்..

பின்னர் எனது குடும்பம் பற்றி விசாரித்தார்.

சரி வா நாம கிளம்புது.............பிளேனு கெளம்புறார் என்றார்.

முற்றும் 


Follow kummachi on Twitter

Post Comment

Friday, 30 October 2015

ரசம் சாதமும் ரசகுல்லாவும் (1)


என் படிப்பெல்லாம் அவ்வளவு சிலாக்கியமில்லை. எப்படியோ ஒவ்வொரு வகுப்பிலும் பெஞ்சை தேய்த்து பள்ளிப்படிப்பை முடித்தேன். நான் வாங்கிய மதிப்பெண்களுக்கு எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்காது. இருந்தாலும் ஏதோ ஒரு தொழிற்கல்லூரியில் சேர்ந்து தோழர்களுடன் கடலை போட்டு ஒரு டிப்ளமா வாங்கிவிட்டேன். வாங்கிய  கையோடு அப்பொழுதுதான் நகரத்தில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் சேர்ந்தாகிவிட்டது. முதல் இரண்டு வருடம் அப்ரசண்டீ, கையில் வரும் உதவித்தொகையில் வீட்டில் கொடுத்தது போக மீதி இருந்தவையில் வாரவிடுமுறை நாட்களில் சினிமா, பீச் என்று நண்பர்களுடன் சுற்றுவது என்று வாழ்க்கை ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது தேஷ்ணாவை அன்று என் வண்டியில் அவள் வீட்டில் விடும் வரை. இது ஒன்றும் புதியதல்ல நிறைய முறை அவளை டிராப் செய்திருக்கிறேன் ஆனால் வீடு வரை அல்ல அருகில் உள்ள பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் என்று இறங்கிவிடுவாள்.

தேஷ்ணாவை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் முன்பு எனது ஷிப்ட் சூபர்வைசர் பற்றியும், நான் மோட்டார் பைக் வாங்கிய கதையையும் சொல்லவேண்டும். "அப்ரசண்டீ" முடிந்தவுடன் அதே கம்பெனியில் வேலையில் நிரந்தரமாக்கப்பட்டேன். இப்பொழுது சம்பளம்  பேசிக், ஹவுஸ் ரெண்ட், டிஏ என்கிற பஞ்சப்படி, ஷிஃப்ட் அலவன்ஸ் என்று பொருளாதாரத்தில் கணிசமான முன்னேற்றம். கூடவே வட்டி இல்லாமல் இரு சக்கர வாகனம் வாங்க கடனும் கொடுத்தார்கள். ஆனால் அதில் ஒரு பிரச்சினை. வண்டி விலையில் முக்கால் பங்குதான் கொடுப்பார்கள், அதுவும் நாம் வண்டி வாங்கி அதற்கான ஆர் சி புக்கை காண்பித்தால் நமக்கு பணம் வந்து சேரும். ஆதலால் முதலில் முழுப்பணமும் புரட்டியாக வேண்டும். அப்பாவிடம் கேட்டால் என்னிடம் பணம் இல்லை, மேலும் இப்பொழுது வண்டி எதற்கு, நிம்மதியாக ஷிப்ட் பஸ்ஸில் போகவேண்டியதுதானே என்று கைவிரித்து விட்டார்.

இருந்தாலும் நண்பர்களிடமும் அவர்களுக்கு தெரிந்த கந்துவட்டிகளிடமும் கடன் வாங்கி வண்டி வாங்கியாகிவிட்டது. வண்டியில் தொழிற்சாலை சென்று வந்து கொண்டிருந்தேன். ஷிப்ட் வேலை என்பது ஒரு கொடுமையான விஷயம். எல்லோரும்  ஆபீஸ் சென்று வரும் வேலையில் நாம் நைட் ஷிப்ட் செல்லவேண்டும். மேலும் விடுமுறையெல்லாம் நமக்கு மாறி மாறி வரும். வார வாரம் மாறும். ஒரு வாரம் திங்கள் , செவ்வாய் என்றிருக்கும் மற்றுமொரு வாரம் புதன், வியாழன் என்றிருக்கும். சனி ஞாயிறு எல்லாம் வந்தாலும் இரவு வேலை பார்த்த அலுப்பிலேயே சனிக்கிழமை போய் ஞாயிறு முடிவதற்குள் காலை ஷிப்ட் என்று நான்கு மணிக்கே கிளம்ப வேண்டிய கொடுமை.

என்னதான் ஷிப்ட் என்று சென்று கொண்டிருந்தாலும் தொழிற்சாலையில் வேலைக்கு நடுவே நண்பர்களுடன் அரட்டை சூப்பர்வைசரை ஓட்டுவது என்று நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. சூபர்வைசர் "முகர்ஜி" ஒரு பெங்காலி. அவர் இப்பொழுதுதான் தமிழ்நாட்டில் வந்து பொருப்பேற்றுக்கொண்டதால் தமிழ் ஒரு மாதிரி குன்சாவாக பேசுவார். என்ன பிரச்சினை என்றால் மனிதர்களை "ஏய் நீ இன்னா சாப்புடுது, கண்ணன் வேலைக்கு வர்து, ரோவி (நான்தான்) நீ மேலே போகுது", என்று ஆடு, மாடு போல விளிப்பார். ஆனால் கம்ப்ரெஸ்சர், பம்ப்பு, பாய்லர் போன்றவற்றிற்கு அளவுக்கதிகமாக பாய்லர் ஓடுறாரா? கம்ப்ரெஸ்சர் சுத்துறாரா? என்று அம்மாவைக்கண்ட அமைச்சர்கள் போல குழைவார். பிரச்சினை அவரல்ல அவர் தமிழ்தான். இருந்தாலும் அவருக்கு எனது வேலை பிடிக்கும் வருடா வருடம் அப்ரைசலில் நன்றாக எழுதி டபிள் இன்கிரிமென்ட், போனஸ் என்று நன்றாகவே கவனித்துக்கொண்டார்.

நாம் தினமும் ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு அலுப்புடன் வந்து சற்று தூங்கலாம் என்றால் என் தங்கை அவளது கல்லூரி தோழிகளுடன் அரட்டை அடித்துகொண்டிருப்பாள். நாம் தூங்க ஆரம்பித்து சற்று நேரத்திற்குள் எழுப்பி "டேய் ரவி ப்ளீஸ் என் பிரெண்ட்சை கொஞ்சம் ஸ்டேஷனில் டிராப் செய்கிறாயா" என்பாள்.

போடி சனியனே எனக்கு டயர்டா இருக்கு? என்றால் சீ பாவம்டா ரொம்பதூரம் ஸ்டேஷனுக்கு போகணும், நீ தண்டத்துக்கு தூங்கிக்கொண்டுதானே இருக்கே என்பாள்.

அவள் தொல்லை தாங்க முடியாது. அந்த சனியன்கள் ஒவ்வொன்னும் ஒவ்வொரு இடம் சொல்லும், ரேவதி பஸ் ஸ்டாண்டு என்றால் , ஜெனிப்பர் ஸ்டேஷன் என்று கெஞ்சும். பாவனா என்னை மார்கெட்டில் விடு அண்ணா என்று ஏறக்குறைய நம்மை ஆட்டோ டிரைவர் போல் ஆக்கிவிடும் என்ன அவர்கள் மாதிரி மீட்டர், மீட்டருக்கு மேல் காசு என்று வாங்க முடியாது. அப்படி எனக்கு பரிச்சியமானவள்தான் இந்த தேஷ்ணா.

அன்றும் அப்படித்தான் ரொம்ப தொந்தரவு செய்தாள். டேய் என் பிரண்டு தேஷ்ணாவை அவள் வீட்டில் விடவேண்டும் என்றாள்.

நானோ முடியவே முடியாது எனக்கே  கம்பெனியில் வேலை அதிகம், மேலும் இது அப்ரைசல் டைம் வேறு வழக்கத்தைவிட வேலை அதிகம் ஆளைவிடு அவளை வழக்கம்போல் பஸ் பிடித்து போக சொல்லு என்றேன்.

என்னடா லூசு இன்றைக்கு பஸ் ஸ்ட்ரைக் தெரியாதா? உனக்கு. இங்கு வரும்போது அவன் அண்ணா டிராப் செய்துவிட்டான், திரும்ப அவனால் வரமுடியாதாம் நீதான் டிராப் செய்யணும் என்றாள்.

அவளை கண்டபடி திட்டிக்கொண்டு தேஷ்ணாவை வேண்டா வெறுப்பாக வண்டியில் ஏற்றிக்கொண்டு  அவளது வீடு நோக்கி சென்றேன்.

-----------தொடரும்



Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 29 October 2015

மதுவிலக்கா? மாதவிலக்கா? சரியா சொல்லுங்க.

அடுத்த வருடம் தேர்தல் வருது........இப்போதான் நம்ம அரசியலு தலீவர்களுக்கு மக்கள் நியாபகம் வருது. நாலு வருஷமா மட்டையடிச்சு படுத்துக்கெடந்தவங்க, சொகுசு பங்களால சொரிஞ்சிகினு இருந்தவனுங்க எல்லாம் இப்போ புதுசு புதுசா போஸ்டர் ஒட்டி கெளம்பிட்டாங்க.

ஒரு கட்சி மாற்றம் முன்னேற்றம்னு சொல்லி கூவுறாங்க, ஒரு கட்சி நமக்கு நாமேன்னு சொல்லிகினு ஏறு ஓட்டறாரு, எகிறி ஓடுறாரு, பரோட்டாகடைளில் சால்னா கேக்குறாரு,  இன்னொருத்தறோ தூக்கி அடிச்சிடுவேன்னு சொல்லி ஊர் ஊராக போயி குடும்ப சகிதமாக கும்மி அடிக்கிறாரு.

ஆளுங்கட்சி தலீவரோ அரசாங்கத்தை அம்போ என்று விட்டு விட்டு தேர்தல் வியூகம் மலை உச்சியில் அமைக்கிறார்களாம்.

அவரவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை வாய்க்கு வந்தபடி சொல்லிக்கொண்டு போகிறார்கள். கூட்டணி எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் இப்போ மக்களின் ஆசையை தூண்டுவோம் அப்பால ஆட்டையைப் போடுவோம் என்று இலவசங்களை அடுக்குகிறார்கள்.

நாங்க வந்தா மதுவிலக்கை அமல் படுத்துவோமுன்னு மதுரைல சொல்லிட்டு திண்டுக்கல்லில்  போயி டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று மருந்து வைக்கிறாரு. இவர்கள் பேசுவது மற்றவர்களுக்கு புரிவது இருக்கட்டும் இவர்களுக்கே புரிகிறதா தெரியவில்லை. மதுவிலக்கு வந்தால் அப்புறம் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை எதற்கு?

ஒரு வேளை மதுவிலக்கை  மாதாமாதம் கொண்டு வருவார்களோ?

Follow kummachi on Twitter

Post Comment

Monday, 26 October 2015

டீ வித் முனியம்மா -பார்ட் 35

பாய் இன்னு எந்த நேரத்தே வன்னு சாய் வேணு,,,,,

மீச ஒரு பெசல் டீ போடு......

அடே மூணு டீ போடு, நாடாரும், லிங்கம் சாரும் வருது பாரு.......

இன்னா முனிம்மா இத்தினி வேகமா வந்துகினு கீற.....

டேய் பயம் இன்னாடா கடில வேல இல்லியா........


இன்னா வேல முனிம்மா கடியே ஆடிகிச்சு......உனுக்கு தெரியாது........பூகம்பம் வந்திச்சாமே..........நூசுல சொல்லிக்கிறான்.

ஆமாண்டா லோகு பாகிஸ்தானு, ஆப்கானிஸ்தானுகிட்ட பூகம்பமாம்........

ஆம்மாம் முனிமா நெம்ப ஜனம் செத்துகிச்சாம்.......நூறு இருநூறுன்னு சொல்லிக்கிட்டு இருக்கானுக......நேரம் ஆவ ஆவத்தான் தெரியும் எத்தினி பேரு மாட்டிகிரானுன்களோ.

கொண்டித்தோப்புலேயே நெரிய ஜனம் பேசிக்கிச்சு..........வடபயநியாண்ட கட்டிடம் எல்லாம் ஆடிச்சாமே...........

இன்னா முனியம்மா அடுத்த வருசம் தேர்தல் வருது,,,,,,,,இன்னும் கூட்டணி நூசு வரலியே......

கேப்டன் இன்னா செய்வாரு.........தெர்லயே.....

நாடாரு பொறுமையா இரு.........கிட்டக்க வரசொல்ல அல்லாம் தெரியும்......கேப்டனு கம்முன்னு பாத்துகினு கீறாரு.  ராமதாசு அன்புமணி முதலமைச்சருன்னா இந்த சைடா வாங்கங்கிராறு....எவன் போவானுன்னு தெரில?.

கேப்டன் கலிஞறு பக்கம் போவாராங்காட்டியும்.

அல்லாம் துட்டுடா செல்வம் ............அத்த வச்சிதான் எது எதொடா சேருமுன்னு தெரியும். கொஞ்சம் துட்டு அப்பால வாரியம் பேரியமுன்னு துண்டு போடுவானுங்க.

அம்மா இன்னா செய்யும்..........முனிம்மா.

அம்மா கொடனாட்டுல குந்திகின்னு தொண்டருங்க எல்லோரையும் வுசுப்பி வுட்டுகினு கீது. ஆனா ஒரு முடிவோடதான் கீது.

அது சரி முனிம்மா கடேசில நம்ம ஜனமும் துட்டு.....துட்டு  வச்சிதான் குத்துங்க.

கரீட்டா சொன்ன லிங்கம் சாரு.......க்வாட்டரும், கோயி பிரியாணியும்தான் முடிவு செய்யும் போல...

முனிம்மா மோடி நூசு இன்னா ஒன்னியும் இல்லையா........

அவரு இன்னாடா ஒலகம் புல்லா சுத்திகினு கீறாரு.........பறந்து பறந்து வெளிநாட்டு துட்ட உள்ள கொண்டுவராருன்னு சொல்றாரு........நமக்கு இன்னா லாபம்........தொ விலைவாசி எல்லாம் எகிறிகீது, பருப்பு வேல இருநூறு ரூவா சொல்றானுங்க பேமானிங்க.

அதெல்லாம் சொம்மா முனிம்மா இவனுக இன்னா செஞ்சாலும் நம்ம பொயப்பு நாறிகினுதான் கீது.

இன்னா முனிம்மா போனவாரம் நடிகர் சங்கம் தேர்தலுன்னு டீவிகாரனேல்லாம் அந்தப் பக்கம் ஓடிகினானுங்க......

அதான் பாய் இன்ன கொரலு வுட்டானுங்க........தமியந்தான் தலைவனா வரணுன்கிறான் ஒத்தன்.

அது சர்தானே முனிம்மா.......

டேய் பயம் அத்த நீ சொல்லாதடா...........தமியன் தமியன்னு பூ சுத்துவானுங்க.....படத்துல நடிக்க ஹீரோயினி மட்டும் சும்மா தளதளன்னு சேட்டு பொண்ணா தேடுவானுங்க.

கரீட்டா சொன்ன முனிமா.......

பின்ன இன்னாடா லோகு.........அங்கனயும் ஏதோ ஊயல் நடந்துகீது போல...முப்பது வர்சமா ஒரே கூட்டம் ஆட்டயப் போட்டுகீது போல.அது சரி நமக்கின்னா வந்துது........நாம போயி பொயப்ப பாப்போம்.







Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 22 October 2015

மூடாதே கடையை மூடாதே......

வரிசையாக விடுமுறைநாட்கள் வருவதால் டாஸ்மாக் என்றைக்கு விடுமுறை, எப்பொழுது திறந்திருக்கும் என்று ஓரே குழப்ப மனநிலையில் ஒரு குடிமகன் கொடநாடு மம்மியிடம் வேண்டும் ஒரு சோக கீதம்.



மூடாதே அம்மா  மூடாதே
நீ அடைத்தால் நான் தவிப்பேன்
மூடாதே (டாஸ்மாக் கடையை) மூடாதே
நீ அடைத்தால் நான் தவிப்பேன்
உன்கடையில் நானே கட்டிங் வுட்ட
நாட்களெல்லாம் நாரிப்போனதடி
தண்ணீரில்லாமல் சரக்கடித்ததாலே
வயிறெல்லாம் குமையுதடி
கண்ணம்மா பேட்டையில் கூட
கடை ஒன்று வைத்து
க்வாட்டர் அடிப்பேனடி
மூடாதே மூடாதே
நீ அடைத்தால் நான் தவிப்பேன்


கடையடைத்தாலும் சரக்கு எங்கே கிடைக்கும்?
கிடைத்தாலும் துட்டு ஜாஸ்தியா  இருக்கும்
பாண்டிச்சேரி  சரக்கா அது
நினைத்தவுடன் கிடைப்பதற்கு
அடித்தாலும் ஏறாதம்மா
மட்டையாகி விழுவதற்கு
க்வாட்டருக்காக ஏங்கிடுதே...... ஹே........
கட்டிங் போட தோன்றிடுதே.....ஹே.....


மூடாதே.............. மூடாதே
நீ அடைத்தால் நான் தவிப்பேன்
மூடாதே .............. மூடாதே
நீ அடைத்தால் நான் தவிப்பேன்

அழகான சரக்கு அதை நீதான் கொடுத்தாய்
கடையையும் அடைத்து அதை ஏன் கெடுத்தாய்
போதை வேண்டும் நாளை பார்த்து
பொங்குகிற குடிமகன் மீது
கருணை கொண்டு கடையை நீதான்
திறக்க வேண்டுமென்று  தோனலையே
சரக்கிங்கில்லாமல்............ஹோ. கையெல்லாம் நடுங்கிடுதே.......ஹோ..


மூடாதே.............. மூடாதே
நீ அடைத்தால் நான் தவிப்பேன்
மூடாதே .............. மூடாதே
நீ அடைத்தால் நான் தவிப்பேன்

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 20 October 2015

சொல்றாங்களே.............

"பாத்தீங்களா.. வெக்கமா இல்லை உங்களுக்கு. எந்தத் தவறும் செய்யாத சரத்குமாரை எப்படியெல்லாம் பழித்தீர்கள். போய் தூக்கில் தொங்குங்கள் நண்பர்களே,"-------ஒப்பந்தத்தை ரத்து செய்தவுடன் ராதிகா.

கும்மாச்சி: என்னே பதிபக்தி..............இந்த வருஷம் ஆஸ்கார் உங்கள் எல்லோருக்கும்தான்..........

 "நானும் ராதாரவியும் சத்யம் சினிமாவுடன் போட்ட ஒப்பந்தத்தைப் பற்றி கண்டபடி விமர்சித்து, பழி சுமத்தியதால், அதை நாங்களே ரத்து செய்து விட்டோம். எங்கள் மீது எந்தக் கறையும் இல்லை. மிஸ்டர் க்ளீனாக நான் வெளியேறுகிறேன்," ----------தேர்தலில் தோத்தவுடன் சரத்குமார் கண்ணீர் கதறல் 

கும்மாச்சி: அதே ஏன் இப்போ சொல்றீங்க, எங்கேயோ ஒதைக்குதே.

கும்பி எரியுது குடல் கருகுது கோடுநாடு  ஒரு கேடா?------------ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி.

கும்மாச்சி: தம்பி கம்பு சுத்துது அண்ணன் அரிவாள் காட்டுது உங்களுக்கு ஆட்சி ஒரு கேடா?

கமல் யூத்தா? சொந்தம் பார்க்கும் சத்யராஜ்-சரத்குமார் நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரத்தில் 

கும்மாச்சி: சித்தப்பு, நீங்க சித்தி, மச்சான் மட்டும்தான் யூத்து..........மற்றவர்களெல்லாம் ...........து வேண்டாம்  விடுங்க உங்களுக்கும் எங்களுக்கும் வித்யாசம் வேண்டும்.


Follow kummachi on Twitter

Post Comment

Monday, 19 October 2015

கலக்கல் காக்டெயில்-171


கொடநாடு கோட்டையானதே.

அரை மணிநேர அலுவல்கள் முடிந்து இப்பொழுது முழுநேரப் பணிகளுக்காக பரிவாரங்களுடன் மம்மி மலையேறிவிட்டது. இனி என்ன எல்லா முடிவுகளுக்கும் அம்மா லைன் கிடைத்தால்தான் முடிவுகள் கிட்டும். ஏற்கனவே தமிழ்நாட்டு பேருந்துகளின் நிலைமையை எல்லோரும் கிழித்து தொங்கவிட்டாலும் ஏதோ பேருக்கு ஒரு ஐநூறு பேருந்துகளை பட்டிதட்டி டிங்கரிங் பண்ணி கோட்டையிலிருந்தே கொடியசைத்து ஓட விட்டு விட்டார்கள்.

மழைகாலம் தொடங்கப்போகிறது, அதற்கான முஸ்தீபுகள் ஏதும் செய்ததாக தெரியவில்லை. அடுத்த சட்டசபை தேர்தலுக்கான வியூகமும் கொடநாட்டில் தயாராகிக்கொண்டிருக்கிறது. மம்மியின் தற்போதைய பலமோ, வலுவில்லாத எதிர் கட்சிகள் மற்றும் அவர்களின் ஒற்றுமையின்மை. மேலும் இருக்கவே இருக்கிறது வைட்டமின் "ப".


எவன்டா ஏன் சங்கத்து ஆள அடிச்சது

 வெறும் மூவாயிரம் ஓட்டுக்களே உள்ள ஒரு சங்கத்திற்கு தேர்தல் அதற்கு இந்த ஊடக அப்ரசண்டிகள் கொடுத்த முக்கியத்துவம் தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு எடுத்துக்காட்டு. சென்னையில் எத்துணையோ சங்கங்கள், கிளப்புகள் உள்ளன அதற்கெல்லாம் தேர்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் தற்போதைய தேர்தல் கிட்டத்தட்ட எல்லா அரசியல் நாடகங்கள் திருப்பங்கள், ஜாதி சண்டைகள் கொண்டு அரங்கேறின.

இவர்கள் பிரச்சாரத்தில் ஆபாச நெடி அதிகமாகவே வீசியது. ஜாதி பெயர் எல்லாம் சகட்டுமேனிக்கு மேடையில் அரங்கேறின..........நாளைக்கு இவர்களே வந்து திரையில் நம்மைப் பார்த்து "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடுவார்கள், பின்னர் "ஜாதி ஜாதிங்கிறயே அந்த ஜாதியாட உன்னை பெத்தது" என்று பஞ்ச் பேசுவார்கள் . நமது தமிழ் கூறும் நல்லுலகமும் விசலடித்து கைதட்டும்.


ரசித்த கவிதை (படித்ததில் பிடித்தது)

சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத்தேர்தல் அதற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் தமிழ் நாட்டு மக்களின் மனநிலையை தெள்ளத்தெளிவாக சொல்கிறது. விகடனில் இதைப்பற்றிய ஒருக்கட்டுரைக்கு பின்னூட்டத்தில் "மர்யம் கபீர்" என்பவரின் அசால்ட்டான கவிதை மிகவும் ரசிக்க வைத்தது.

நடிகர் சங்க
தேர்தல்
முடிவடைந்தது.

கவலையாகத்தான்
இருக்கிறது
ஒரு மாதத்திற்கு மேலாக

நடிக்காத நடிகர்களை

சொந்த வசனத்தை
சொந்தக்குரலில் பேசிய
நடிகர்களை

அரிதாரம் விட்டு
அரியணைக்காக துடிக்கும்
நடிகர்களை

கிளாப் அடிக்காமல்
 ஆக்ஷன் சொல்லாமல்
"கட்"க்கு நிறுத்தாமல்
சுய தரத்தையும்
சுற்றியுள்ளவர் தரத்தையும்
கழுவி ஊற்றிய
நடிகர்களை

கூட்ட நெரிசலில் நிற்காமல்
டிக்கட் எடுக்காமல்
வீட்டிலிருந்த படி
பார்க்க முடிந்தது
இன்றோடு முடிவது
கவலையாகத்தான் இருக்கிறது
ஒரு விதத்தில்..............

-------------------------------நன்றி: மர்யம் கபீர்


ஜொள்ளு



Follow kummachi on Twitter

Post Comment

Saturday, 17 October 2015

பிரபலங்கள் வீட்டில் கொலு-தொடர்கிறது


கைலாபுரம் தோட்ட  கொலு


"வாமபாஸ்" கம்புமணியுடன் கைலாபுரம் தோட்டத்தில் அமர்ந்திருக்கிறார். வீடே அமளி துமளியாய் இருக்கிறது.

வாமபாஸ் யாரது கொலுப்படியில் என் பொம்மையும் கம்புமணி பொம்மையும் வைப்பது, என் குடும்பத்தில் இருப்பவர் ஒரு பொம்மை அங்கு வைத்தாலும் யார் வேண்டுமானாலும் வந்து எங்கள் அன்றாயரை உறுவி நடுத்தெருவில் வைத்து செருப்பால அடிக்கலாம்.

டேய் கம்பு இது என்ன பொம்மை, உங்க பொம்மைதான்.

அப்போ அத மேல்படில வையி.

அடுத்து இது இன்னா பொம்ம.

என்னுடையது ஐயா.

நமது கொலுவில் மாற்றம் முன்னேற்றம் வேண்டும், அப்போ அந்த பொம்மையை அடுத்து வை. 

இதெல்லாம் கழக பொம்மைகள் ஐயா.

இத்தனை வருஷமா அந்த பொம்மைகள் வைத்துதான், நம் வீட்டு சுண்டலெல்லாம்  ஊசிப்போய் தமிழ் நாடே நாறுகிறது. அந்த பொம்மைகளுடன் கூட்டும் வேண்டாம் பொரியலும் வேண்டாம். இனி இந்த இரண்டு பொம்மைகள்தான் நமது கொலுவில், தனித்தே கொலுவை சிந்திப்போம்.

யாரு வந்திருக்காங்க பாரு கம்பு. ஆடு வெட்டியா இருக்கப்போறான்......அவன் வேறே லொள்ளு பிடிச்சவன்........

சி.பி.ஐ தான் என்னை தேடி வந்திருக்காங்க........

கோயம்பேடு கொலு

"விஸ்கிவாந்து" டேய்.........யாருடா அது கொலு வீட்டில் இல்லடா........அஆங்.....கட்சி ஆப்பீசில்டா ஆங்...... நான் வந்தேன்னா தமிழ்நாட்டில் இருக்கிற முப்பத்திமூனு லட்சத்து அம்பாத்தினாலாயிரத்து நானூற்றி நாற்பத்தி எட்டு பொம்மைகளும் மூவயிரத்தி முன்னூறு  படில ஒக்கந்துக்கும்.அஆங்..........

சரி பேக்டன் எந்த பொம்மை வைக்கிறது அத சொல்லு மாமா..........

அடியே ட்ரேமா இருக்கிறதே மூணு பொம்மைதான் எங்க வேணா வையி புள்ள.....

இன்ன சொல்லறீங்க எப்படி மூணு பொம்மைதான்.....

ஆமாம் நானு,நீயி அப்புறம் உன் தொம்பி..........

என்ன பேக்டன் சொல்றீங்கா.

சரி சம்மு, பிரபு பொம்மைகளையும் வையி......

மாமா மாமா வெளியே யாரோ நெறைய ஆளுங்க வந்திருக்காங்க. வாங்க வாங்க.....

ஏன் மச்சான் என் டென்சன் ஆவுற? ரெண்டு கட்டிங் வுட்டு கட் பண்ணு.........மொறைக்காத மச்சான் டெண்சன சொன்னேன்........யாரு இந்த டீ.வீ காரனுங்களாதான் இருக்கோணும்.........ஏய் நீ யாருப்பா எந்த டீ.வீ என்ன கேட்கணும் கேளு?

பேக்டன் பிராந்தி கட்டிங் வுட்டா பட்டாணி சுண்டல் சைடு டிஷ் செட்டாவுமா?

டேய் நீ எந்த கட்சி டீ.வீ  என்ன கேள்வி கேக்கிற.........தூக்கி அடிச்சுடுவேன் பாத்துக்க...............பாருங்க மக்கழே..........நீங்களே வையுங்க நான் போறேன்.......

தென்னிந்திய நடிகர் சங்க கொலு 

சித்தி, சித்தப்பா, மச்சான்  ஒரு புறமிருக்க குஷால் ஷெட்டி, காசர், வெள்ளி வண்ணன் எதிர்புறம் அமர்ந்திருக்கிறார்கள். ஒரே கூச்சல் குழப்பமாக இருக்கிறது அபிபுல்லா ரோட்டிலே....

எங்கே அந்த பரதேசி நாயி..........குஷால் ஷெட்டி.......நன்றி கெட்டவன்........டேய் தம்பி நீ சின்ன பிள்ள.........நேத்து பெஞ்ச மழையில் முளைச்ச காளான் நாங்க இருக்கோம் அடையார் ஆலமரம் கணக்கா.........என்று சித்தி மைக்கு பிடிக்கிறாரு.

சித்தப்பா நான் சி.எம். க்கு சொம்பு பிடிக்கிறன்வண்டா.........நாந்தாண்டா தலைவரு. டேய் யார்ராவன் சொரலட்சுமின்னு.........கத்தினவன் 

விறுவென்று வந்து கிம்பு வந்து கம்பு சுத்துகிறார்.......

டேய் நீ நாய் இல்லடா நரி..........நீ கட்டிங்கு வுட்டு கனெக்ட் பண்ணது எனக்கு தெரியாதா..........நான் எல்லாம் சூப்பர் ஸ்டார்டா என் லெவெலுக்கு ஒன்னோட நான் பேசவே கூடாது..............நான் பஸ்ஸில் ஏறும் பொழுது நீ பின்னாடி நின்னையே அதுக்கு பேரு லவ்வுதானே ஜெஸ்சி..........டும்மிலே டும்மிலே டும்மா டும்மா ங்கொய்யா........இன்னாமா பண்ணலாம்........டும்மா டும்மா ங்கொய்யா..

சாதா ரவி மைக்கு பிடிக்கிறாரு..........டேய் பரதேசி .......ஒரு பூச்சி பேன்ட்டுல போயிடுச்சி.......இரு அண்ட்ராயர உருவி நசுக்குறேன்.......நான் இங்கே எல்லாம் அவுக்க மாட்டேன்.......யாரவன் சமலு.........அவன் என்ன அல்டிமேட்டா.......நாங்க கோவணம் கட்டாத காலத்திலேயே நண்பன்டா........நான் அவன  கேவலமா பச்சை பச்சையா திட்டுவேன்........அவன் என்ன அத விட கேவலமா இன்னும் பச்சையா திட்டுவான்........பேமானி........பரதேசி நாயி.........நாற.........பயலே ...........மச்சான்  தாண்டா தலைவரு..........அவரு வாழும் அப்துல் கலாம்டா..............

சரிபா சண்டைய அப்புறம் வச்சிக்கங்க கொலு வையுங்கப்பா.........

யோவ் நீ அப்பால போயி நில்லு எங்க கொலூவே இதாண்டா..........இன்னும் பொம்மையே யாருன்னே தெரில.......வந்துட்டான்............போடா அப்பால .........என்று சித்தி சித்தப்பாவை தள்ளிவிட்டு கத்துகிறார்...........டேய் குஷால் ஷெட்டி............வரேண்டா........நான் யாருடா மூணு பேரு பார்த்தவடா...........சமலு நன்றி கெட்டவன்.........எல்லோரையும் நோண்டி விடுறியா.....நான் மூணு பேரு பாத்தவடா.........


Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 15 October 2015

பிரபலங்கள் வீட்டில் கொலு.


இது கொலு சீசன். நமது தெருவில் உள்ள அணைத்து வீட்டு கொலுவையும் ரசித்து அட்ட  பிகர் முதல் அல்வா பிகர் வரை பார்ப்பது ஒவ்வொரு வருடமும் நடக்கிற விஷயம். இந்த வருடம் மாற்றம் முன்னேற்றம் வேண்டி பிரபலங்கள் வீட்டு கொலுவிற்கு செல்லலாம்.....

முதலில் கோயஸ் தோட்டம்.

"வசி" என்ன பொம்மையெல்லாம் அடுக்கிட்டீங்களா அதென்ன மேல்தட்டுல எல்லா பொம்மையும் படுக்க வச்சிருக்கீங்க......

இல்லக்கா அது வந்து நம்ம அமைச்சருங்க பொம்மைதான், எப்பவுமே அப்படித்தான்.....நிக்கும்போதே அப்படிதான் இருக்கும். முதலில் அக்கா நம்ம கெ.பி.எஸ், பாருங்க காரு டயருல தலைய வச்சு கும்புடுறா மாதிரியே இருக்கு. அப்புறம் பக்கத்துல "வத்தம்" கரண்டு கம்பிய பிடிச்சு கரண்ட்டு டெஸ்டு பண்றா மாதிரி, இப்போ இந்த பொம்மைதான் நல்லா விக்குதாம்.

பக்கத்துல யாருடி சாமி

நம்ம நாலும் மூனும் எட்டு சாமி "கைம்மாறாசாமி".......

சரி வசி சுண்டலுக்கு என்ன செஞ்சிருக்கீங்க..........

உங்களுக்கு ராசியா ஒன்பது வகை சுண்டல் வச்சிருக்கோம்..........கேடி வரேன்னு சொல்லியிருக்காரு அதான்.

சரி பெல் அடிக்குது யாருன்னு பாரு.

அக்கா நம்ம அமைச்சருங்கதான், காவடி எடுத்து உருண்டுகினே வந்திருக்காங்க.

அப்படியா அப்ப கதவ தெறக்காத, அவங்க எல்லோரையும் நாளைக்கு கொலு சொடநாடுல, அங்கே வந்தா பார்க்கலாமுன்னு சொல்லு.

சரிக்கா........

என்ன போய்விட்டார்களா?

இல்லக்கா ஒரே ஒரு பாட்டு வாசலோடு பாடிவிட்டு சுண்டலை தூக்கி எறிந்தால் பிடித்துக்கொண்டு போய்விடுவார்களாம்?

சட்டசபையில் பாடும் பாட்டையே பாட சொல்லு............

அம்மா அம்மா அம்மா 
மாண்புமிகு அம்மா
மற்றவர்கள் சும்மா
இதய தெய்வம் அம்மா
புரட்சி தெய்வம் அம்மா
புண்ணியவதியே அம்மா 
விலையில்லாத அம்மா 
விடியல் தெய்வம் அம்மா 
நிரந்தர முதல்வர் அம்மா 
நிக்க முடியல அம்மா 

வசி அது யாரு சுருதில சேராம பாடுறது சொல்லு தூக்கிடலாம்.....

அக்கா யாருமே சுருதில சேரல.....

சோபாலபுரத்தில் கொலு

கழக கண்மணிகளே கொலு திராவிட விழா அல்ல வந்தேறிகள் ஆரியனால் கொண்டு வரப்பட்ட மாயை இருந்தும் இந்த ஊழல் ஆட்சி ஒழியட்டும் விடியட்டும் என்ற நோக்கிலே கண்மணிகளால் கொண்டாடப்படும் விழாவினை தலைமை தாங்கி "மாற்றான் வீட்டு சுண்டலும் ருசிக்கும்" என்ற "கண்ணா" வார்த்தைக்கிணங்க இந்த முறை தம்பி "ஸ்காலின்" கழகத்தின்மேலும் நாட்டு மக்களின்மேலும் கொண்ட அக்கறையை மேன்மை படுத்தவும், மனைவி மற்றும் துணைவியின் அன்புக்கினங்கியும், மற்றும் எனது அருமை மகள் "தனிவொழி" நாட்டிற்கும் மற்றும் ஒவ்வொரு ஏழை வீட்டிலும் 2ஜி செழித்தோங்க அயராது உழைப்பதாலும், இந்த முறை சோபாலபுரத்திலலே  கொலு விழாவிற்கு உங்களை மூத்த தமிழன் என்ற முறையில் உவகை பொங்க அழைக்கிறேன்.

தம்பி பாலு அந்த மேல்தட்டில் "செறியார்", "கண்ணா" பொம்மை வைத்துள்ளாயே அதை அங்கே வை.

எங்கே தலீவரே?

அதோ அந்த சட்டி அருகில்.

தலைவரே அது சட்டி இல்லை குப்பைதொட்டி.

அங்குதான் வை.

அப்போ எல்லாதட்டிலும் என்ன பொம்மை வைக்கிறது தலைவரே.

கழகம் செழிக்க பாடுபட்டவர்களின் பொம்மையை  வை.

சரி தலீவரே புரிஞ்சிடுச்சி. முதலில் "சஞ்சா கஞ்சனா"? இல்லை தொளபதியா?

உனக்குத் தெரியாது? சரி "பொறைசருகனை" அழைத்துவா?

தலீவரே "புஷ்கு" கொலுவிற்கு வராங்களாம்.........

திராவிடம் செழிக்க வந்த புஷ்கு நமது கழகம்விட்டு சென்றாலும் நம் மீது கொண்ட அன்பிற்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்க கழகக்கண்மணிகளை கல்லெடுத்து வரச்சொல்.

அதற்குள் மகளிரணி சோபாலபுரத்தில் நுழைந்து பாடுகிறார்கள்.

ஈழம் வேண்டி இரண்டு மணி உணவு துறந்த தலைவா போற்றி 
குடும்பம் செழிக்க  கொள்கை துறந்த தலைவா போற்றி 
செந்தமிழ் செழிக்க ஐநூறு கோடி மாநாடு தந்த தலைவா போற்றி  
ஊழல் ஒழிக்க 2ஜி தர்மம் வெல்ல வந்த தலைவா போற்றி 

கைலாபுரம், டேப்டன் கொலு விவரம் அடுத்து...........


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 14 October 2015

டீ வித் முனியம்மா-பார்ட் 34

டேய் செல்வம் இன்னாடா கடியாண்ட தேன்மொழி கீது, அஞ்சல எங்கேடா?

ஐய இன்ன முனிம்மா அது அம்மா வூட்டுக்கு காசிமோடு போயிகீது.....

உன் பாடு இன்னா அஞ்சல இல்லேன்னா தேன்மொயி ..........இன்னாடா கயகத்துல எதுன்னா சேந்துகினியா.......பயக்கட வச்சிகீற ........ரெண்டு பொண்டாட்டி கட்டிகீர, கயகத்துல சேந்தா நேர மந்திரிதான்..........அப்பால ஒரு செட்டாப்ப வச்சிக்க சி.எம் ஆயிடலாம்...........

த முனிம்மா காலையில எண்ணிய ஓட்டாத........நூசு இன்னா அத்த சொல்லு...

இருரா உன் கூட்டாளி லோகு எங்க..........நாய இட்டுகினு வருவானே.....

இத பாயோட கறிக்கடைக்கு போயி அவர இட்டுகினு வரான் பாரு.....

டேய் மீச அல்லாருக்கும் டீ போடுறா.........

லிங்கம் சாரு, நாடாரும் வந்துருவாங்க.........முனிம்மா நாட்டு நடுப்பு இன்னா நீ சொல்லு..........

இன்னத்தடா சொல்றது.........தளபதி நமக்கு நாமென்னு சொல்லிக்கினு கம்பு சுத்துறாரு, கோயிலாண்ட போறாரு, அம்மா கடில இட்லி வாங்கி துன்ராறு.........அல்லாம் எலிக்சன் வருதுல்லா.............

அது சரி அவரு இன்னா சொல்றாரு அத சொல்லு மொதொல்ல.

இன்னா சொல்லுவாரு.........கரீண்டு இல்ல, விலைவாசி ஏறிகீது........நாங்க கண்டி ஆச்சிக்கு வந்தா அல்லாத்தையும் கரீட் பண்ணுவோம்னுவாறு..........

ஜனங்க இன்னா சொல்லுது......ஒட்டு போடுங்கற.........

அடபோ லிங்கம் சாரு.........க்வாட்டரும் கோயியிக்கறியும் துன்னுட்டு யாருக்கு குத்தும்னு நமக்கு இன்னா தெரியும்........

அம்மா இதக்கண்டுகினா மெர்சல் ஆவிடுமே.......

இல்ல பாய் அந்தம்மா வேற ரூட்ல போய்கினு கீது.......கலீனராண்ட யாரும் சேராம பாத்துகினாலே போதும்னு கம்முன்னு சிருதாவூர்ல குந்திகின்னு கீது.

ஆச்சின்ன சொன்ன நம்ம ஆச்சிதான் மனுசுல வருது.........பாவம் இன்னா ஆயிட்டுக் கொடுக்கும் டப்புன்னு செத்துடுச்சே......

ஆமாண்டா லோகு..............சொம்மா வா வாத்தியார வூட்டாண்ட  பாடிக்கினு எத்தினி படம் நடிச்சிகீது..........ஊர்வலத்துக்கு இன்னா ஜெனம்டா.......ஐய சொவுத்து மேல எல்லாம் நின்னுகினு அத்த வயி அனுப்பிச்சானுங்க.

இன்னா முனிம்மா  இந்த கூத்தாடிப்பசங்க எல்லாம் அடிச்சிகினு நிக்கிறானுங்க. இன்னா மேட்டரு....

அவனுக  நடிகர் சங்கம் கீதில்ல அதுல  எளிக்சனாம்......

அது வேறயா......

ஆமா நாடாரு...........இந்த சொம்படி சரத்குமாரு அவன் மச்சான், பொண்டாட்டின்னு இத்தினி  வருசமா சங்கத்துல தலைவரா இருந்துகினு சொம்மா கூத்தடிச்சிகினு இருந்தானுங்க......இப்ப அவனுகளுக்கு ஆப்பு வைக்க ஒரு கூட்டம் புச்சா கெளம்பிகீது......

நல்ல தமாசுதான் போ.

ஆமாண்டா ஐய்ய இன்னாம்மா திட்டிகிரானுங்க..........நம்ம குப்பம் எல்லாம் இவனுக கிட்ட பிச்சே எடுக்கணும்...........நாயிங்குறான், பரதேசி நாயிங்கிறான். இன்னும் வுட்டா...........உன் நாயீ குறுக்கே போவாம திட்டுவானுங்க போல.

முனிம்மா அம்மா பொம்பளையாளுங்களுக்கு அல்லாம் போனு கொடுக்கப் போவுதாமே.........அம்மா போனு.

டேய் லோகு அது எங்களுக்கு இல்லடா......சுய உதவி குயு பொம்பளைங்களுக்காம்.

இன்னா முனிமா பேஜார் பண்ற......நீ கூடத்தான் சொயமா கடை வச்சிகீற.

டேய் செல்வம் சொம்மா புளிப்பூத்தாத..........ஆமா.........

சரி முனிம்மா இந்த யுவராசு போலீசுல சரண்டர் ஆயிகிறான்......இன்னா மேட்டரு. அவனதான் டோனி டீம வுட்டு தூக்கிட்டாரே......

போடா டோமரு இது வேற ஆளுடா.......கொலகேசுல தேடிக்கினு இருந்தானுங்க.......பதினாறு செக் போஸ்டு போட்டு தேடியும் அந்தாளு டபாய்ச்சிகினு கீறான்.. இன்னா நம்ம போலீசு......

சரி அத்த வுடு முனிம்மா..........சினிமா நூசு இன்னா...........இன்னா படம் போட்டுக்கிறான்.......

அடப்போடா......இனி "கபாலி" வந்தாதான் நூசு..........மத்ததெல்லாம் டப்பாசு........
இந்தா பேப்பர பிடி படத்த பாத்துகினு இரு அங்க தேன்மொயிய எவனாவது உசார் பண்ணிடப்போறான்.

அதெல்லாம் நம்மாளுகிட்ட நடக்காது முனிம்மா...........





Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 13 October 2015

வருங்கால முதல்வரே.....

சமீப காலங்களில் ட்விட்டரில் அல்லக்கை நடிகர்களின் ரசிகக்குஞ்சாமணிகளின் அலப்பரையைத்தாண்டி சில கீச்சுகளை ரசிக்க முடிந்தது, அவற்றில் சில..

 வருங்கால முதல்வரே என எனக்கு எதிராக சதி செய்து சிலர் டிஜிட்டல் பேனர் வைக்கின்றனர்- சரதுகுமார் # நிரந்தர அடிமைன்னு வைக்க சொல்றாரு போல---------மெத்தவீட்டான்.

என்னை வரம் வாங்கி பெத்தாங்களா தெரியாது. நான் 10 மாசம் தலைகீழா தவம் இருந்துதான் பொறந்தேன் # எனி டவுட்---------ரெட்டைசுழி

கோவில்ல ஒரு லேடி போலிஸ் நீங்க சீரியல் நடிகர் தானேன்னு கேட்டாங்க. நானும் ஆமான்னுட்டேன். சிறப்பு தரிசனம், பிரசாதம்னு நல்லா கவனிச்சாங்க-------------ட்விட்டர் MGR.
தூங்கி எழுந்து அப்படியே நைட்டியோட விழாவிற்கு வந்துட்டாங்க போல 

 செய்தி வாசிக்கும் பெண்மணியின் புடவை, நகை நட்டை பார்த்தவுடன்  முடிந்துவிடுகிறது பெண்களுக்கான செய்திகள்-----govikannanR

நல்லவங்களாத்தான் கடவுள் சோதிப்பாராம் தினமும் என்னைய கண்ணா பின்னா என்று சோதிக்கிறாயே கடவுளே அவ்வளவு நல்லவனா நான்???---------சட்டம்பி ஸ்டாலின் 

சென்னை காசி தியேட்டர் கடந்து போனபோது விஜய் ரசிகர்கள் கூட புலி படம் பார்க்கப்போவதில்லையன புரிந்தது. திரையுலகிற்கு ஒரு நல்ல மாற்றம்-----------ரௌத்திரம் பழகு.

பாக்க பன்னி மேய்க்கிறவன் மாதிரியே இருப்பவன் கம்பெனிக்கு CEOவாக இருக்கலாம். கம்பெனிக்கு CEOவாக மாதிரி தெரிபவன் பன்னி மேய்த்துக்கொண்டு இருக்கலாம்---------Mr. வண்டுமுருகன்.

ஒரு வீடு தேடறேன் அதுக்கு இப்படி அட்வைசா " If you need what u want then u have to wait" நேரஞ்சரியில்லன்னா நொண்டிக்கோழி நாட்டியமாடுதும்பாங்க-------------Lakschumi

கேவலத்துக்கு படம் எடுத்து ஃப்ளாப்பானதும் ஜெனரல் ஆடியன்ச கொற சொல்றது சில்றதனமா நடந்து செருப்படி பட்டு நடுநிலைகளை கொற சொல்றது #அணில்குஞ்சுஸ்-------------கரடி

ப்ளாக்-ல டிக்கெட் வாங்கி படம் பாக்குற நாம தான் மேசைக்கு கீழ கவர் வாங்குற அரசு வேலை அப்பாவுக்கு பொறந்த நாம தான் லஞ்சம் ஊழலை பத்தி பேசுறோம்!-----------வேலைவாய்ப்பு தகவல்
.
மின்சாரம் தாக்கி உயிர்விட்டவனை விட சம்சாரம் தாங்கி உயிரிழந்தவர்கள் கோடான கோடியப்பா-------------தரலோக்கலு லேஜிபாய்

போத்திஸ் அபிமானத்த வாங்கிடுச்சு அபிமானத்த வாங்கிடுச்சுன்னு கமல் திரும்பத்திரும்ப விளம்பரத்துல சொல்றாப்லையே... இதுக்கு அபியோட கருத்து என்ன?=-----------போயட்டு கபாலி 


Follow kummachi on Twitter

Post Comment

Sunday, 11 October 2015

ஜில் ஜில் ரமாமணி

ஆச்சி என்று எல்லோராலும் அறியப்பட்ட மனோரமா நேற்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு தமிழ் திரையுலகம் தவித்து நிற்கிறது. தனது பன்னிரெண்டாவது வயதில் நடிப்பைத்தொடங்கி, பல மேடை நாடகங்கள், ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் என்று சாதித்தவை இனி எந்த நடிகை, நடிகராலும் செய்ய முடியாத சாதனை.


இன்று அவருக்கு செய்யப்பட்ட இறுதி மரியாதை, வழியெங்கிலும் கூடிய கூட்டம் அவரது நடிப்பாற்றலுக்கு கிடைத்த மரியாதை என்று சொன்னால் அது மிகையாகாது. நகைச்சுவை, குணசித்திரம் என்று எந்த பாத்திரம் கொடுத்தாலும் அவரது பாணி மற்ற சக நடிகர்களுக்கு சவாலாகவே இருக்கும். நடிகர் திலகமே அவருடன் நடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் தனது குடும்பத்தினரிடம் இன்று "எதிர்த்த வீட்டுக்காரி" அசத்திவிட்டாள் என்று சொல்லுவாராம்.

தில்லானா மோகனாம்பாளில்  சிக்கல் சண்முகசுந்தரமாக நடித்த சிவாஜிக்கும், திருவாரூர் மோகனாம்பாளாக நடித்த பத்மினிக்கும் சற்றும் சளைக்காமல், ‘ஜில் ஜில் ரமாரமணி’ என்ற பாத்திரத்தில் வெளுத்துக் கட்டினார் மனோரமா. ‘அந்த மோகனாங்கி ஆடுறாகளாமே.. அவுகள பாக்க ஆளுக வந்தா.. நான் ஆடுறத பாக்க வரமாட்டாகளா?” என்று வட்டார வழக்கில் மனோரமா பேசியதும், சிவாஜியும் அவரும் கலாய்க்கும் காட்சிகளும் காலங்கடந்தும் நெஞ்சில் நிறைந்திருப்பவை. தமிழுக்கு ஒரு சிறந்த நகைச்சுவை நடிகையைத் தந்தது ‘ஜில் ஜில் ரமாமணி’ கதாபாத்திரம். நடிப்பைப் போலவே பாட்டிலும் அவரது தனித்துவம் வெளிப்பட்டது.

தில்லானா மோகனாம்பாள் ஜில் ஜில் ரமாமணி அவரைத்தவிர வேறு யாராலும் செய்யமுடியாத ஒன்று. மனோரமா என்றாலே அந்த கதாபாத்திரம் நம் உள்ளே தோன்றுவது இயல்பு. தனது நாடக கொட்டாயிற்கு வந்திருக்கும் சிக்கல் சண்முக சுந்தரத்திடம் நாதஸ்வரத்தைக் கொடுத்து அவரை வாசிக்க சொல்லும் காட்சியில் அவர் நடிகர் திலகத்தையே மிஞ்சியது போல் தோன்றும் அசத்தலான நடிப்பு.

இந்தியனில் ஒரு சராசரி ஏழையாக வந்து, தாலுக்கா ஆபீசில் லஞ்சம் கேட்பதை புலம்பும் காட்சி, சின்ன வேடமானாலும் அதை அவர் செய்யும் திறன் அபாரம். சம்சாரம் அது மின்சாரம், மிஸ்டர் சம்பத், உன்னால் முடியும் தம்பி, பாரத விலாஸ்  போன்ற படங்களில் அவரது நகைச்சுவை நடிப்பு மறக்க முடியாதது.

எழுபதுகளில் வா வாத்தியாரே ஊட்டாண்ட பாடல் ரொம்ப பிரசித்தம். "மெட்ராச சுத்திப்பாக்கப்போறேன் மெரினாவில் சுண்டல் வாங்கித்தாரேன்" என்று ஏ. ஆர் ரஹ்மான் இசையில் பாடியது நம்மிடம் எப்பொழுதும் ஒலிக்கும்.

சொந்த வாழ்க்கையில் சோகம் அப்பியிருந்தாலும் நகைச்சுவையிலே நம்மை மூழ்க அடித்த "ஜில் ஜில்" சொர்கத்தை மகிழ்விக்கப் போயிருக்கிறது. நகைச்சுவை என்ற சொல் இருக்கும் வரை ஆச்சியின் புகழ் இருக்கும்.

அவரது ஆன்மா சந்தி அடைய வேண்டுவோம்.




Follow kummachi on Twitter

Post Comment

Friday, 9 October 2015

கலக்கல் காக்டெயில்-170

இருட்டுக்கடை அல்வாடா.........செயின்ட் ஜார்ஜு கோட்டடா.............

தளபதி கடந்த சில நாட்களாகவே ஆட்டோவில் தொங்குறாரு, பேருந்துல பதுங்குறாரு, மெட்ரோல மெர்சல் ஆவுறாரு, டீ கடைல வடகறி துன்றாரு, கையேந்தி பவணுல தோச சட்னி ஊத்திகினு தாய்க்குலத்தோட பேசுறாரு சரிபா அல்லாம் சர்தான்..................

இது எல்லாம் ரெண்டு மூணு வருஷம் முன்னாடி செஞ்சாருன்னா ஜனம் எல்லாம் மெர்சல் ஆயி................யோவ் தலைவா நீ கம்முன்னு கெட எங்க அடுத்த தல ஸ்டாலின்தாபான்னு............அயகிரிய அம்பேல் ஆக்கிருக்கும்.

ஆனா இப்போ அயகிரி இது காமெடி டைமுன்னு நக்கல் அடிக்கிறாரு.........

உலக சரித்திரத்திலேயே ஒரு இயக்கத்தை குடும்பம், கூத்தியானு நாறடிச்ச ஒரே கூட்டம் இதுதான்யா..............

ஆனா இந்த மேட்டருல அம்மா மெய்யாலுமே டென்சன் ஆயிருக்காப்போல....

தளபதி தப்பான இடத்துல வந்துட்டாரு..............கருவின் குற்றம்.......

குற்றம் தண்டனை சிறை 

ஜாதிக்கார் இந்த முறை எந்த திராவிடக் கட்சியுடனும் கூட்டணி இல்லை, நாங்கள் தனித்தே போட்டியிட்டு ஆட்சியைப்பிடிப்போம், அப்புறம் என் மவந்தான் சி.எம் என்று ஒரு ஏற்பாடுடன் போய்க்கொண்டிருக்கிறார்.

இதற்காக புது போஸ்டர் எல்லாம் வடிவமைத்து மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று ஊர் முழுவதும் ஒட்டி தீர்த்தார்கள்.

சின்ன ஐயா மத்திய அமைச்சராக இருந்த பொழுது முறைகேடாக மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய வழக்கில், சி.பி. ஐயை குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

தமிழ் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளுமே ஊழல் வழக்கிலிருந்து விடுபடாமல்தான் வரப்போகும் தேர்தலை சந்திக்கப்போகின்றன, அந்த ஜோதியில் இப்பொழுது சாதிக்காரரும் ஐக்கியமாகிவிட்டார்.

அவர்கள் வைத்த போஸ்டரை வைத்தே சில நெட்டிசன்கள் "குற்றம், தண்டனை, களி" என்று நையாண்டி செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

ரசித்த கவிதை

சீதையோடு ஒரு செல்ஃபி 
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தாள் சீதை.
இரண்டாவது டிக் வராத வாட்ஸ்அப் செய்திகளால்
நிரம்பியிருந்தது ராமனின் தொடுதிரை.
பாதுகைகளை சுவரெங்கும் ஒட்டியிருந்தான் பரதன்.
வாலிக்கு இரங்கல் எழுதிக்கொண்டிருந்தான் சுக்ரீவன்.
ராவணன் பறித்துக்கொண்ட செல்பேசியில் இருந்தது
சீதைக்கு நினைவில் நில்லாத ராமனின் எண்.
விபீஷணன் தனிச்செய்தி அனுப்பியிருந்தான் ராமனுக்கு.
அறுந்த மூக்குடன் டேக் செய்திருந்தாள் சூர்ப்பணகை.
'ஆறு மாதங்களுக்கு டீஆக்டிவேட்’ என்றான் கும்பகர்ணன்.
ராமனைப்போல சுய படமிட்ட போலிக்கணக்கில்
சீதைக்கு நட்பு அழைப்பு அனுப்புகிறான் ராவணன்.
'எங்கே உருப்படப்போகிறது?’ என்று கடந்தாள் மண்டோதரி
அனுமனிடம் இருந்து ராமனுக்கு ஆதாரமாக வருகிறது
அசோகவனப் பின்னணியில் சீதையோடு செல்ஃபி ஒன்று!
நன்றி------------------------- ஷான் (விகடன் சொல்வனத்திலிருந்து)

ஜொள்ளு

"நெட்"டுத்தாக்கு 
I DONT support ராதிகா (நாயுடு) MR Radha=Madras Rajagopala Radhakrishna Naidu:)) - தேவையா தாயி ஒனக்கு?:( அப்பாவின் 'பெரியார் பெருமை' அறிவாயா?
------------------KRS@kryes

Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 8 October 2015

நடிகர் சங்கம்- அடிதடி சங்கம்

சமீபகாலமாக தமிழ் செய்திகளில் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருப்பது இந்த சங்கம் விவகாரம்.

இத்தனை நாட்களாக சங்கத்தில் உயர் பதவியில் இருந்து கொண்டிருப்பவர்கள் ராதா ரவுடியும், நமது சொம்படி சொறிகுமாரும்தான். அவர்கள் தான் சங்கத்தை தூக்கி நிறுந்தியவர்கள் என்று ஒரு கூட்டம் உரியடித்துக்கொண்டிருக்க, ஐவர் அணியோ இன்னாத்த நிறுத்தினாங்க, நெலத்த தூக்கி கொடுத்துட்டானுங்கபா இந்த தபா நாங்கதான் தலீவரு ஒரு கை பார்ப்போம் என்று  போர்க்கொடி தூக்க இப்பொழுது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில்... இல்லபா ...........மேற்பார்வையில்  சங்கத்திற்கு தேர்தலாம்.

நம்ம ஊரில மூணு கோடி வேட்பாளர்களை வைத்து தேர்தல் நடத்தினாலே ஊரு நாறும், கேவலம் மூவாயிரம் வாக்காளர்களைக் கொண்ட சங்கத்திற்கு நாங்களும் நாறடிப்பதில் குறைந்தவர்கள் அல்ல என்று இப்பொழுது அடிதடி செய்துகொண்டிருக்கிறார்கள்.

முன்னாள் தலைவரோ இப்பொழுது போட்டிபோடும் புதிய வருகையை "நாயே பேயே" என்று கொஞ்சி அகமகிழ்கிறார்.   அவரது சகோதரி சித்தியோ ரெட்டி, நாயுடு என்று ஜாதியை துணைக்கு அழைக்கிறார்.

இது எல்லாம் பத்தாது என்று "வாலு" வேறு மைக்கை பிடித்து டேய் நீ எதுக்கு நிக்குறேன்னு தெரியாது, டும்மிலே டும்மில் டும்மா தும்மா ங்கொய்யா.......என்று கொச்சையான கொக்கோக கலிப்பா படிக்கிறார்.

இதில் ஒன்று நிச்சயம், அரசியல் ஏகத்திற்கும் இதில் கலந்து மணக்கிறது. ஆளுங்கட்சியோ யாரும் தேர்தலில் கலந்து கொள்ளக்கூடாது என்று ஆணை பிறப்பித்துவிட்டது. எதிர்கட்சிதான் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கிறது என்று சித்தப்பு............ ஆளுங்கட்சிக்கு சொரிந்துவிடுகிறார்.

நட்டத்துங்கப்பு...............இதெல்லாம் பத்தாது..........சொம்மா ஹபிபுல்லா ரோடுல டப்பா.........டேன்ஸ் ஆடனும், சினிமால ஆடறது எல்லாம் பத்தாது........தேர்தலுக்கு முன்னாடி அல்லார் துணியையும் உருவி வுட்டு ஆடனும்.......சித்தப்பா சொம்மா கலக்கு..............குஜாலா இருக்கும்பா......


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 6 October 2015

மீண்டும் கும்மாச்சி

வலைப்பூவிற்கு நீண்ட இடைவெளி. இணையம் பக்கம் வரமுடியாத நிலை. காரணம் வேறொன்றுமில்லை.

கடந்த சிலமாதங்களாகவே ஓயாத வேலை. தந்தையின் உடல் நிலை வேறு மோசமடைந்ததால் அடிக்கடி நாட்டிற்கு பயணம் என்று போய்கொண்டிருந்தது.

மேலும் தந்தையின் உடல் நிலை மேலும் மோசமடைந்து கடந்தமாதம் இறைவனடி சேர்ந்தார்.

மறுபடியும் தாய்நாடு பயணம். தந்தையின் இறுதி சடங்குகளுக்காக.

ஒக்கமடிந்ததடி ஊடுருவ வெந்ததடி
கற்கோட்டை எல்லாம் கரிக்கோட்டை ஆனதடி

தனது இறுதி மூச்சு வரை தனது சுற்றங்களின் நலனுக்காக வாழ்ந்தவர் ஒரு பானை சாம்பலில் முடிந்தது மனதை உலுக்கும்  நிகழ்வு.

எல்லாம் முடிந்து பயையபடி வேலைக்கு வந்தாகிவிட்டது. இனி சோகங்களை மறந்து இயல்பான பணிகளை தொடரவேண்டும்.

வாழ்க்கை..................


Follow kummachi on Twitter

Post Comment