Pages

Thursday, 22 October 2015

மூடாதே கடையை மூடாதே......

வரிசையாக விடுமுறைநாட்கள் வருவதால் டாஸ்மாக் என்றைக்கு விடுமுறை, எப்பொழுது திறந்திருக்கும் என்று ஓரே குழப்ப மனநிலையில் ஒரு குடிமகன் கொடநாடு மம்மியிடம் வேண்டும் ஒரு சோக கீதம்.



மூடாதே அம்மா  மூடாதே
நீ அடைத்தால் நான் தவிப்பேன்
மூடாதே (டாஸ்மாக் கடையை) மூடாதே
நீ அடைத்தால் நான் தவிப்பேன்
உன்கடையில் நானே கட்டிங் வுட்ட
நாட்களெல்லாம் நாரிப்போனதடி
தண்ணீரில்லாமல் சரக்கடித்ததாலே
வயிறெல்லாம் குமையுதடி
கண்ணம்மா பேட்டையில் கூட
கடை ஒன்று வைத்து
க்வாட்டர் அடிப்பேனடி
மூடாதே மூடாதே
நீ அடைத்தால் நான் தவிப்பேன்


கடையடைத்தாலும் சரக்கு எங்கே கிடைக்கும்?
கிடைத்தாலும் துட்டு ஜாஸ்தியா  இருக்கும்
பாண்டிச்சேரி  சரக்கா அது
நினைத்தவுடன் கிடைப்பதற்கு
அடித்தாலும் ஏறாதம்மா
மட்டையாகி விழுவதற்கு
க்வாட்டருக்காக ஏங்கிடுதே...... ஹே........
கட்டிங் போட தோன்றிடுதே.....ஹே.....


மூடாதே.............. மூடாதே
நீ அடைத்தால் நான் தவிப்பேன்
மூடாதே .............. மூடாதே
நீ அடைத்தால் நான் தவிப்பேன்

அழகான சரக்கு அதை நீதான் கொடுத்தாய்
கடையையும் அடைத்து அதை ஏன் கெடுத்தாய்
போதை வேண்டும் நாளை பார்த்து
பொங்குகிற குடிமகன் மீது
கருணை கொண்டு கடையை நீதான்
திறக்க வேண்டுமென்று  தோனலையே
சரக்கிங்கில்லாமல்............ஹோ. கையெல்லாம் நடுங்கிடுதே.......ஹோ..


மூடாதே.............. மூடாதே
நீ அடைத்தால் நான் தவிப்பேன்
மூடாதே .............. மூடாதே
நீ அடைத்தால் நான் தவிப்பேன்

6 comments:

  1. அப்படிப் போடு போடு போடு...

    ReplyDelete
  2. நானும் பாடிப்பார்தேன் திரு. கும்மாச்சி சும்மா கும்முனு ஏறுதுபா....
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. நீங்கள் எழுதிய கவிதையா கும்மாச்சி அண்ணா...

    அனுபவம்....???!!!

    ReplyDelete
  4. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள் த.ம4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. போட்டுத் தாக்குங்க...
    அருமை.

    ReplyDelete
  6. மக்கள் தள்ளாடினால் தான்
    நாடு பலமாக இருக்குமோ?
    மூடாதே கடையை மூடாதே...
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.