Thursday, 29 October 2015

மதுவிலக்கா? மாதவிலக்கா? சரியா சொல்லுங்க.

அடுத்த வருடம் தேர்தல் வருது........இப்போதான் நம்ம அரசியலு தலீவர்களுக்கு மக்கள் நியாபகம் வருது. நாலு வருஷமா மட்டையடிச்சு படுத்துக்கெடந்தவங்க, சொகுசு பங்களால சொரிஞ்சிகினு இருந்தவனுங்க எல்லாம் இப்போ புதுசு புதுசா போஸ்டர் ஒட்டி கெளம்பிட்டாங்க.

ஒரு கட்சி மாற்றம் முன்னேற்றம்னு சொல்லி கூவுறாங்க, ஒரு கட்சி நமக்கு நாமேன்னு சொல்லிகினு ஏறு ஓட்டறாரு, எகிறி ஓடுறாரு, பரோட்டாகடைளில் சால்னா கேக்குறாரு,  இன்னொருத்தறோ தூக்கி அடிச்சிடுவேன்னு சொல்லி ஊர் ஊராக போயி குடும்ப சகிதமாக கும்மி அடிக்கிறாரு.

ஆளுங்கட்சி தலீவரோ அரசாங்கத்தை அம்போ என்று விட்டு விட்டு தேர்தல் வியூகம் மலை உச்சியில் அமைக்கிறார்களாம்.

அவரவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை வாய்க்கு வந்தபடி சொல்லிக்கொண்டு போகிறார்கள். கூட்டணி எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் இப்போ மக்களின் ஆசையை தூண்டுவோம் அப்பால ஆட்டையைப் போடுவோம் என்று இலவசங்களை அடுக்குகிறார்கள்.

நாங்க வந்தா மதுவிலக்கை அமல் படுத்துவோமுன்னு மதுரைல சொல்லிட்டு திண்டுக்கல்லில்  போயி டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று மருந்து வைக்கிறாரு. இவர்கள் பேசுவது மற்றவர்களுக்கு புரிவது இருக்கட்டும் இவர்களுக்கே புரிகிறதா தெரியவில்லை. மதுவிலக்கு வந்தால் அப்புறம் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை எதற்கு?

ஒரு வேளை மதுவிலக்கை  மாதாமாதம் கொண்டு வருவார்களோ?

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

”தளிர் சுரேஷ்” said...

மக்களின் ஞாபக மறதி இவர்களுக்கு வசதியாக போய்விட்டது!

Thulasidharan V Thillaiakathu said...

அட! ஆமாம்ல! நல்ல கேள்வி...மக்கள் என்று தொடர்ந்து போராடியிருக்கின்றார்கள்...இரு கோடுகள் தத்துவம் தான் இங்கும்...மற(றை)ந்து விடுகின்றது...

திண்டுக்கல் தனபாலன் said...

வியூகம்.. ஹா..... ஹா.....

KILLERGEE Devakottai said...

ஹாஹாஹா ஸூப்பர் நண்பரே
தமிழ் மணம் 3

சென்னை பித்தன் said...

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

ராஜி said...

அவங்களுக்கு தேவை நம்ம ஓட்டு. நமக்கு தேவை ஓட்டுக்கு ஆயிரம் ரூபா. பெண்களுக்கு சேலை, குடம், மூக்குத்தி. ஆண்களுக்கு குவார்ட்டர், பிரியாணி, செல்போன். நாடு எக்கேடோ கெட்டு போகட்டும்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.