இன்னா முனிம்மா வெள்ளம் வந்து அல்லாத்தையும் அள்ளிக்கினு போச்சே.....
ஆமா பாய் இன்னாத்தா சொல்ல, ரெண்டாந்தேதி மதியம் வரிக்கும் நல்லாத்தான் இருந்திச்சு அப்பால அடிச்சுது பாரு ஐயோ இன்னா அடிங்கற.....
அது சரி முனிம்மா அப்போகூட தெருவுல இம்மா தண்ணி வரலே தோ அந்தா காவால கூட தண்ணி கம்முன்னுதான் போய்கினு இருந்திச்சு.
டேய் செல்வம் அதானடா எப்புடி அடையாறுல வெள்ளம் வந்திச்சின்னு தோ பேப்பருல போட்டுக்கிறான் பாரு.
செம்பரம்பாக்கத்த முன்னாடியே தொறந்தாங்க கண்டி இந்த வெள்ளம் இம்மாம் தூரம் வந்திருக்காதாம்.
ஏனாம் அதாம் ரமணனு அடிக்கடிக்கி சொல்லிகினே இருந்தாரே அது இன்னாடா லோகு.
கனமய, அதி கனமய, மிக அதி கனமய அல்லாத்துக்கும் பேரு வச்சிகினாறு.
ஆமாண்டா லோகு மய பொத்திக்கிட்டு ஊத்தப்போவுதுன்னு சொன்னாரு. அப்பவே ஏரிய தொரந்துகினா இம்மாம் தண்ணி வாராது.
பின்ன என்ன புடிங்கிகிட்டு இருந்தனுங்களாம் கவுர்மெண்ட்ல.
அப்பால பாத்துக்கலாமுன்னு உட்டுருப்பானுங்க. இல்ல லிங்கம் சாரு இப்படி இருக்குமா.....ஏரி தொறக்கனும்...........அணையை தொரறக்கனும்முன்னா அம்மா சொன்னாதானே அதிகாரிங்க தொறப்பானுங்க..........அம்மா சொல்லலயாங்காட்டியம்.
அது இன்னா அடையாறுல பூந்த வெள்ளம் ஜாபர்கான் பேட்ட, ஈக்காட்டுதாங்கலு, கண்ணம்மாபேட்ட, கோட்டூருபுரம், தி. நகரு அல்லா இடத்துலயும் தண்ணி பூந்திடிச்சி. தோ இம்மாம் ஐயத்துக்கு தண்ணி வந்திடிச்சு, வீடெல்லாம் மூய்கி போச்சு.
டேய் செல்வம் அதுக்குதான் அல்லா பேப்பரு, பத்திரிக அல்லாம் படிக்கணும், நீ எங்க பேப்பரு எதுக்கு பாக்குற.........நடிக கில்மா படம் பாக்கத்தானே பேப்பரே எடுக்கற. உனுக்கு கீது பாரு ஒரு நாளிக்கி அஞ்சலயாடையும், தேன்மொழியாண்டையும்.
த சும்மா என்ன நக்கலடிக்காத.......மேட்டரு இன்னா அதுக்கு வா முனிம்மா..
விகடணுல புலவர் மகுடேஸ்வரன் எழுதிக்குறாரு பாரு, அடையாறு ஆயம் எங்க எங்க எப்படி கீது.........ஏன் ஊருக்குள்ள தண்ணி வந்திக்கிச்சு. எர்போர்ட்டு ஏன் மூய்கிடிச்சு, அல்லா ப்ளேனையும் இஸ்துகினு போயி காட்டுல போட்டிருச்சுன்னு.
சரி முனிம்மா காப்பறேசணுல ஒவ்வொரு தபா மேயரு சொன்னாரு காவா தூறு வார நானூறு கோடி, சாக்கட அள்ள ஐநூறு கோடி, அப்ப இவனுங்க ஒன்னும் புடுங்கலியா?
அடப்போ நாடார் நீ வேற காமெடி பண்ணிகினு.........அதத்தான் கமலதாசன் கேட்டாரு வரி துட்டு இன்னாச்சு..மக்கள் கஷ்டப்படுதுங்கோ....சன்னலில லுக்கு வுட்டேன்னு.........இப்போ அவரு வூட்டான்டையே காவா இயுத்து கரண்டு புடிங்கிட்டானுங்கோ.
அட சொம்மா அவர சொல்லாத முனிம்மா......அவரு அப்படி சொல்லவே இல்லியாம்.
இல்லடா லோகு அதாண்டா கொயப்பமா கீது.........மொதலோ கம்முன்னுதான் இருந்தாரு...........அப்பால பன்னீரு கூவிகின சொல்ல மாத்திகினாரு.
முனிம்மா ஆத்தா எலிகாப்டருல போச்சே பாத்தியா.
ஆமாம் பாய் சொம்மா.. ஆத்தா ... அவங்க வெள்ளத்த பாக்கல அல்லாரும் கூவிகினே இருந்தாங்களா, அதான் சொம்மா நல்ல மேக்கப் போட்டுகினு தா இம்மா சைசுக்கு ஓதட்டுல சாயம் பூசிக்கினு சொம்மா ஸ்டைலா போவுது. நல்ல தமாசு போ.
இன்ன முனிம்மா ஆனா நம்ம சென்னை பசங்க நல்லா வேல செஞ்சானுங்க.
ஆமா லிங்கம் சாரு அல்லாம் சின்ன பசங்க இன்னா துடியா வேல செஞ்சானுங்க.........பாய் ஆளுங்க, நம்ம ஆளுங்க அல்லாரும் கவருமெண்டு காரனுங்க ஒன்நியம் செய்யமாட்ரானுங்க........அல்லாம் நாம தானுனு நல்லா வேல பாத்து நெறைய ஜனத்த வெள்ளத்துல அள்ளிகினு வந்தானுங்க.......நம்ம மீனவ குப்பம் ஆளுங்க போட் எத்துகினி எத்தினி பேர தன்னிலேந்து தூக்கி விட்டானுங்க...அவனுக எல்லாம் நல்லா இருக்கணும். அல்லாருக்கும் சோறு தண்ணி கொடுத்தாங்க.
அ..ஆமாம்... முனிம்மா மந்திரிங்க எங்க போனாலும் ஜனம் தொரத்தியடிச்சிடிச்சி போல.
ஆமாண்டா இதுக ஒன்னும் செய்யாம.........செஞ்சிகினு இருக்கவங்கிட்ட புடுங்கி ஸ்டிக்கர் ஓட்டினா.......அதாம் மந்திரிங்கள..... மவளே ஏரியா பக்கமே வராதன்னு அடிச்சி விட்டானுங்க.
சரி முனிம்மா மோடி ரெண்டாயிரம் கோடி கொடுத்துகிறாரே நமக்கு ஏதாவது கெடிக்கும்..........
போடா லோகு சரியான கேன புண்ணாக்கா கீறே........அல்லாத்தையும் அவனுங்களே ஆட்டைய போட்டுப்பனுங்க........நீ கட்சில கீரியா அப்போ உனுக்கு பொற துண்டு போடுவானுங்க உன் நாய்க்கி ஆச்சி. போ......
இல்ல முனிம்மா வூடு போச்சினா பத்தாயிரமாம்....ஆத்தா சொல்லிகீது.
போடா சரியான லுச்சாவா கீறயே..........நீ அவங்க கச்சியா.......அப்போ துட்டு கெடிக்கும். இல்லேன்னா உன் குடிசை மேல அவங்க கொடிய நடு, கொடுப்பானுங்க அது கூட வட்டம், மாவட்டம், சதுரம் அடிச்சது போக ஆயிரம் வந்தா உனுக்கு டாஸ்மாக்குக்கு ஆச்சி அப்பால அது அவனுகளுக்கே போயிடும்.
தோ மீச கடில அல்லாம் வெள்ளத்துல அடிச்சிகினு போச்சு........லிங்கம் சார் அவனுக்கு கடை போட்டுதாறேன்னு சொல்லிகிறாரு. எனுக்கி வீடே போச்சு. பாய் துட்டு தாரேன்னு சொல்லிகிறாரு.........கவருமெண்டு எல்லாம் நம்புற ஆளு நம்ம இல்ல. அதே போல பாய்க்கி எதாச்சும்னா நான் எல்ப்பு செய்வேன். அல்லாம் நமக்கு நாமே தான்.
இந்த ரோடெல்லாம் இப்படி தொண்டி வுயுந்து போச்சே எப்போ சரி செய்வானுங்க.....
தோடா............அடுத்த வருஷம் எலிக்சன் வருது அதுக்கு முன்னே கண்டிசனா கல்லு மண்ணு போட்டு ரொப்பிடுவானுங்க.......அப்பால அது புடுங்கிகினு தபா தபா தொண்டி வியும்.
சரி மத்த கட்சிகாரனுங்க இன்னா ஆனானுக.
தோ மய உட்டிடிச்சி இல்ல.......அல்லாம் வேட்டிய தூக்கி கட்டிகினு கொட பிச்சிகினு வருவானுக பாரு.
இந்தாடா செல்வம் பேப்பர புடி. நானு ஒரு வாரத்துக்கு அப்பால் கடிய போட்டுகிறேன். வேல கீது.....ஏதோ பத்து மொயம் விடத்தான் இன்னிக்கு சோறு. பாத்து தொர மயல நெனஞ்சு கீது........அதேபோல மயல நெனஞ்சிகினு எவ படமாவது போட்டிருப்பான். பாத்துக்க.

6 comments:
அரசாங்கமும் அனைத்து மக்களும் போற்றும் அளவில் துயருற்றோர்களை ஓடி ஓடி தேடி உயிர் காத்து, உணவு, உடை, மருத்துவம், தூய்மைபடுத்துதல், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பல உதவி செய்து வரும் தமிழக முஸ்லீம்கள் இப்பொழுது கடலூரில் வெள்ளத்தால் வீடிழந்தவர்களுக்கு இலவசமாக வீடு கட்டி தருவதாக அறிவிக்கிறார்கள். எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு சளைக்காமல் கரசேவை செய்வோம்.
சொடுக்கி >>>> கடலூரில் வெள்ளத்தால் வீடிழந்த அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டித்தருகிறோம்.<<< படிக்கவும்.
முனிம்மா ஆத்தா எலிகாப்டருல போச்சே பாத்தியா.
ஆமாம் பாய் சொம்மா.. ஆத்தா ... அவங்க வெள்ளத்த பாக்கல அல்லாரும் கூவிகினே இருந்தாங்களா, அதான் சொம்மா நல்ல மேக்கப் போட்டுகினு தா இம்மா சைசுக்கு ஓதட்டுல சாயம் பூசிக்கினு சொம்மா ஸ்டைலா போவுது. நல்ல தமாசு போ.
உண்மைதான் நண்பரே நானும் இதை கவனித்தேன் சரியாக அதை தாங்களும் எழுதி விட்டீர்கள் அருமை மக்கள் இனியெனும் திருந்தட்டும்
தமிழ் மணம் 1
மேலே உள்ள இரண்டு பின்னூட்டங்கள் இந்த பதிவிற்கு தொடர்பில்லாதது ஆதலால் நீக்கப்பட்டுள்ளது.
கலக்கலாய் பிரிச்சி மேஞ்சிருச்சு முனியம்மா...
சூப்பர் பகிர்வு ஜி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.