Pages

Thursday, 10 December 2015

கொண்டதென்ன? கொடுத்ததென்ன?

கேட்கும் பொழுது பொய்ப்பாய் 
கேளாத பொழுது பெய்வாய் 
வாராது வந்த மா மழையே -உன்னை 
வேண்டாதுக் கொடுத்தது எத்தனை
பள்ளம் மேடு பாராமல் 
பாய்ந்து அடித்துச் சென்றனை
செல்லும் வழியின் கழிவுகளை 
அள்ளிச் சென்று விழித்தனை
ஜாதி மத பேதங்களை 
தேடிச் சென்று அழித்தனை
வீதி எங்கும் மனித நேயங்களை 
விதைத்துச் செழிக்க வைத்தனை
தூங்கிக் கிடந்த ஆற்றல்களை 
ஓங்கி அடித்து எழுப்பினை  -நீ 
கொண்டு சென்றது சிறிதளவு 
கொடுத்து சென்றதோ பெரிதளவு




4 comments:

  1. உண்மையை உரைத்த உன்னத பாடல்! அருமை!

    ReplyDelete
  2. அனைத்தும் 100க்கு100 உண்மையான வரிகள் நண்பரே
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  3. எத்தனை..எத்தனை...
    எத்தனை,
    பித்தனை,
    சித்தனை,
    சொல்லிய
    உம்
    சிந்தனை
    ஏற்கட்டும்
    என்
    வந்தனை..

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.