Pages

Tuesday, 8 December 2015

மனிதநேயம் மரிக்கவில்லை

தமிழ்நாட்டில் பிறந்து, தமிழனாக வளர்ந்து தமிழனாக  இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். இந்த மழை ஏற்படுத்திய பேரிடரில் உதவிய சென்னைவாசிகள் குறிப்பாக இளைஞர்கள் செய்த தன்னலமற்ற உதவி நமது எதிர்கால கவலையை போக்குகிறது.

சென்னையின் பலபகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பொழுது சிக்கிய பொதுமக்களை மீனவ இளைஞர்கள் தங்களது படகுகளை எல்லா இடங்களிலும் செலுத்தி எண்ணற்ற உயிர்களை காப்பாற்றியுள்ளனர். நடிகர்களின் படங்களுக்கு பாலூற்றி வீணடிக்கப்படுகின்றதே இன்றைய இளைஞர் சமுதாயம் என்று நொந்த பெரிசுகளுக்கு இந்த பேரிடரில் அவர்கள் செய்த இந்த தொண்டு ஏதோ ஒன்றை சொல்லுகிறது. இப்பொழுது இவர்கள் பனி கடலூரிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அரசின் கையை எதிர்பாராமல் எண்ணற்ற தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் களத்தில் இறங்கி கடுமையான மழையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள்.

சில முதியவர்கள் கூட ஆயிரம் இரண்டாயிரம் பேருக்கு உணவு சமைத்து தங்களது இரக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

முக்கியமாக ஜாதி மதம் கடந்து எல்லோரும் கைகோர்த்து இந்த பேரிடரை கையாண்டது உலகத்திற்கு முக்கிய செய்தியை சொல்லுகிறது. இந்து கோயில்களில் முஸ்லீம்கள் தங்க வைக்கப்பட்டதும், மசூதிகளில் இந்துப் பெண்களை தங்க வைத்து உதவிகள் செய்ததும் "ஒற்றுமை நம்மிடம் இருக்கிறது வேற்றுமை சில தீய சக்திகளால் விதைக்கப்படுகிறது" என்று ஓங்கி அறைந்து சொல்லியிருக்கிறார்கள்.

வடநாட்டு ஊடகங்கள் நமது பேரிடரை முதலில் கண்டுகொள்ளாததும் எண்ணற்ற வட இந்தியர்கள் நாம் அழிவை ரசித்த பொழுதும் தமிழக மக்கள் எங்களுக்கு யார் உதவியும் தேவையில்லை எங்களை நாங்களே பார்த்துக்கொள்வோம்  என்று காட்டியிருக்கிறார்கள்.

தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்போம்.

6 comments:

  1. "ஒற்றுமை நம்மிடம் இருக்கிறது வேற்றுமை சில தீய சக்திகளால் விதைக்கப்படுகிறது"

    நிதர்சனமான உண்மை நண்பரே... இந்த ஒற்றுமை என்றும் தொடர வேண்டும் என்பதே எனது அவா
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. "ஒற்றுமை நம்மிடம் இருக்கிறது வேற்றுமை சில தீய சக்திகளால் விதைக்கப்படுகிறது"

    ரிபீட்டே! Good One.

    ReplyDelete
  3. தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்போம்.///அது...

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.