Monday, 25 July 2016

மனிதன் 2.0

இன்று சாப்பிடக்கூட நேரம் கிடைக்க வில்லை. ஆணி புடுங்குவதில் அவ்வளவு நேரம் போய்க் கொண்டிருக்கிறது.........இத்துணைக்கும் தேவையில்லாத ஆணியைத்தான் புடுங்கிக்கொண்டிருக்கிறோம்.......அது சரி என்னிக்கு தேவையுள்ள ஆணியை புடுங்கி இருக்கிறோம்..........அத விடுங்க...பசி சிறுகுடலை பெருங்குடல் விழுங்கிக்கொண்டிருக்கிறது.
ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்
ஒரு நாளும் என் நோவு அறியாய்- இடும்பை
கூர் என் வயிரே உன்னோடு வாழ்தல் அரிது..
என்று புலம்பிய அவ்வையாருக்கு ஒரு லெவல் மேலே போய்
என்ன வாழக்கையோ சேர்ந்தார்ப்போல் இரண்டு வேளை பட்டினி இருக்க முடியவில்லை இரண்டு வேளைக்கு சேர்த்து சாப்பிடவும் முடியவில்லை என்று  சுருளிராஜன் போல் புலம்பிக்கொண்டு இருக்கிறேன்.

நம்மை படைத்த பிரம்மா ஏன் வயிற்றில் ஒரு ஜிப் போல் வைத்திருக்கக்கூடாது....பசி என்றால் ரண்டு பர்கரை ஜிப்பை திறந்து உள்ளே போட்டு அரை பாட்டில் கோக்கை உள்ளே தள்ளினால் இந்தமாதிரி வேலை தலையைத்தின்னும்வே நாட்களில் ஜோலி  முடிந்தது. எல்லா சிஸ்டத்திலும் upgarde உண்டு ஏன் சங்கர் கூட ரஜினியை வைத்து அடுத்த வெர்ஷன் எந்திரன் 2 ஓ எடுத்துக்கொண்டிருக்கிறார். நம்மை படைக்கும் பிரம்மா ஏன் அவரது சிஸ்டத்தை upgrade செய்யவில்லை என்று நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன், பசி மிஞ்சிப்போய் விட்டது. சரி வேலை அலுப்பில் இரண்டு சோமபானமும் சமோசாவும் அடித்து மட்டையாகிவிட்டது.

திடீரென்று கைபேசி அழைக்கவே ;எடுத்தால் இது ஏதோ தெரியாத நம்பர். வழக்கமான பத்து எண்களுக்கு பதில் முப்பது நம்பர்கள் இருந்தன........

ஹலோ..........நான் பிரம்மா பேசறேன் என்று ஒரு குரலுக்கு பதில் மூன்று குரல்கள் கேட்டன........ஏனோ "வா வா மஞ்சள் மலரே" என்று வெவ்வேறு அலை வரிசையில்.....கேட்டது.

நான் கும்மாச்சி கும்மாச்சி கும்மாச்சி பேசறேன் என்றேன்.....

டேய் லூசு எனக்கு தான் மூணு வாய் இருக்கு உனக்கு ஒரு வாய்தானே ஒரு தடவை சொல்லேன் என்றது எதிர்முனை............

சார் நீங்க...........என்று தடுமாறு முன்...........நான்தாண்டா ப்ரொடக்ஷன் மேனேஜர் பிரம்மா என்றது எதிர்முனை.

உனக்கு என்ன என் ப்ரோடக்ஷனில் சந்தேகம்..............

இவருக்கு எப்படி தெரியும்? என்று யோசித்துக்கொண்டே நெறைய இருக்கு ........என்றேன்

சரி நீ நேர்ல வா உனக்கு புஷ்பக விமானம் ஏற்பாடு செய்திருக்கிறேன் என்றார் பிரம்மா

உடனே அவரனுப்பித்த விமானத்தில் ஏறி பரலோகம் சென்று விட்டேன்...

விமானத்திலிருந்து இறங்கியவுடம் பிரம்மாவே அவரது வொர்க் ஷாப்பிற்கு அழைத்து சென்றார்..........

என்ன சந்தேகம் கேள் என்றார்..

சார் ஏன் இன்னும் ஒரே மாடலையே இன்னும் செய்து கொண்டிருக்கீர்கள் ஏதாவது அப்க்ரேட் செய்தால் என்ன என்றேன்.

நம் நாட்டில் ஹிந்துஸ்தான் மோட்டார் கூட ஒரு மாறுதலையும் செய்யாமல் மார்க் 1,2,3,4 ன்னு அம்பாசிடரை  அடிச்சு விடுகிறது என்றேன்.

சும்மா பொத்திண்டு இரு........ஏற்கனவே ஒரு தடவை நான் தப்பு செய்து ஜி. எம் சிவா என்னை வேலையை விட்டு எடுக்க இருந்தார்.....ஏதோ டி'ஜி. எம் விஷ்ணு சிபாரிசில் ஒரு இன்க்ரிமென்ட் கட்டோடு போய் விட்டது.........

ஏன் என்ன ஆச்சு என்றேன்..

இப்படிதான் ஒரு முறை கடைசியாக எல்லா பிராடக்டும் கன்வேயரில் வரும் பொழுது தலையில் சிப் வைக்க வேண்டியது என் வேலை........முதல் ப்ராடக்ட் வரும் பொழுது எனக்கு அவசரம்...பாத் ரூம் போகவேண்டி இருந்ததால் டிஸ்பாட்சில் இருக்கும் கணேசனை கொஞ்சம் பார்த்துக்கோடா என்று சொல்லி விட்டு சென்றுவிட்டேன்.......பூலோகத்தில் தான் உங்களுக்கு தெரியுமே நான் அல்பசித்தைக்கு போனால் எவ்வளவு நேரம் ஆகுமென்று......

இந்த கணேசன் மண்டையை மண்டையை ஆட்டிண்டு ப்ராடக்டில் சிப்பை வைக்க மறந்து விட்டான்.....

நான் வந்து பார்த்ததும் உங்கள் பாஷையில் சொல்லப்போனால் மெர்சலாயிட்டேன்................என்னடா கணேசா இப்படி பண்ணிட்டே........உங்கப்பன் சிவா என்ன தாளிச்சிடுவாறேடா.........என்றதற்கு.......இப்போ என்ன சித்தப்பு செய்யறது.........என்று முழிக்கிறான்.......சரிடா அதோ கடைசியா வரான் பாரு அவன் மண்டையை திறந்து எல்லா சிப்பையும் போட்டுவிடு என்றேன்.............

சரி இப்போ என்ன செய்யறதுன்னு கணேசன் மண்டையை மண்டையை ஆட்டுறான்.

சரி லோடிங்கில் யாரு என்றேன்........நம்ம சுப்புனிதான் என்றான்..

சரி சுப்புனிகிட்ட சொல்லி சிப்பு இல்லாத எல்லா மண்டையிலும் கலர் துணிய கட்டிவிடு என்று சொல்லி கடைசி ஆள வுட்டுடு என்றேனோ நான் பொழைச்சேன். நல்லகாலம் அந்த ஆள் பூலோகத்தில் போயிட்டு அந்த கலர் துணி கட்டின ஆளுக்கெல்லாம் தலைவர் ஆயிட்டார்.

சரி பிரம்மா சார் இப்போ உங்க கஷ்டம் புரியுது..........இப்போ என் பிரச்சினைக்கு வாங்க........

உங்க டிப்பர்ட்மேன்டுல R&D கிடையாதா? என்றேன்.

யார் சொல்லித்து இருக்கே என்றார்.

அப்போ என் சார் இந்த மனுஷன ஒரே மாடல பண்ணி இத்தனை யுகமா, க்ரித யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம் ஏன் இப்போ கலியுகம் வரைக்கும் ஒரே மாடலை செஞ்சிண்டு இருக்கீங்க.....அந்த மாடலில் கொஞ்சம் அப்க்ரேட் செய்யறது........உதாரணத்திற்கு........நாலு கை வைக்கிறது.....கையில குடைச்சல் வலின்னா கையை கைட்டி ஹேங்கருல மாட்டிட்டு வேறே கைய மாட்டிண்டு போயிண்டே இருக்கலாம் இல்லையா? அப்புறம் இப்பல்லாம் மின்ன மாதிரி இல்லை யார் வீட்டுக்கு போனாலும் முதலில் வைஃபகனெக்ஷன் கொடுத்துட்டு அடுத்தது பீரா ஹாட்டா என்றுதான் கேட்கிறார்கள். அந்த லிவர ஒரு ரெண்டு மூணு வச்சு அப்க்ரேட் செய்யறது......

டேய் நீ மானிடா உன்ன இங்க  வரவெச்சேன் பாரு என்ன பாத ரக்ஷையால அடிச்சிக்கனும்............

ஐயோ சாரி பிரம்மா சார் புஷ்பக விமானத்துல ஏறும் பொழுது உங்க செக்யூரிட்டி என் பாத ரக்ஷைகளை கழட்டி எடுத்து எரிஞ்சிட்டானுங்க. மன்னிச்சிக்குங்க.........

என்ன நக்கலா மானிடா.......வா உன்னை டி.ஜி. எம் கிட்டேயும் ஜி.எம் கிட்டேயும் கூட்டிப்போகிறேன்......அதுக்கு முன்னால அவா செகரிட்டறி லக்ஷ்மி, பார்வதியை கூப்பிட்டு சொல்லனும்.........

சரி சரி வா இரண்டு பேரும் கான்பாரன்ஸ் ஹாலில் தான் இருக்கிறார்கள்.....

போற வழியில் R &D இருக்குன்னு சொன்னீங்களே அவங்க ரிசர்ச் ஒன்றும் பண்றதில்லையா என்றேன். அதற்கு அவர் டேய்........அது  ரிசர்ச் அண்ட் டெவெலப்மென்ட் இல்லே ரிசீவ் அண்ட் டெஸ்பாச்  என்றார்.....

கிழிஞ்சிது போங்க என்று பேசிக் கொண்டே.........கான்ஃபரன்ஸ் ரூம் வந்துவிட்டோம்.

ஹாலில் உள்ளே நுழைந்தவுடன்.........

குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேஸ்வரா என்று உள்ளே நுழைந்தேன்.....................சரி சரி நிறுத்து........அந்த மாண்புமிகு...புரட்சி.. கூட்ட ஆளா நீ விஷயம் என்ன அதை சொல்லு......என்று இருவரும் கோரஸாக கூறினார்கள்........

சிவா சார் விஷ்ணு சார் பிரம்மா கூட பேசிண்டு இருந்தேன்.........ஏன் உங்க ப்ரோடக்ஷனில் அப்க்ரேட் செய்யக்கூடாது...............ஹார்ட்வாரிலோ இல்லை சாப்ட் வேரில் அப்க்ரேட் செய்யறது.........உதாரணத்திற்கு எங்களது பெண்களிடம் வாயை நீளமாக வைத்திருக்கிறீர்கள்.........அதை குறைக்க வேண்டியது தானே.

உடனே ஜி.எம்.........சரி குறைக்கிறேன்.............கையை நீளமாக வைக்கிறேன் ஓ.கெ வா என்றார்.

அய்யோ வேணாம் சார் ஏற்கனவே நான் விழுப்புண்களோட தான்  இங்கே வந்திருக்கேன்........என்றேன்............

இல்லை ஜி. எம் சார் இந்த ஹார்ட்டு, லிவர் இதெல்லாம் கொஞ்சம் மாற்றியமைத்து இரண்டு செட் வைத்தால் என்ன?  மேலும் சாப்ட்வேரிலும் இத வரைக்கும் வேறே வெர்ஷன் வந்ததே இல்லை........

அதற்குள் விஷ்ணு குறுக்கிட்டு "டேய்......மானிடா நீ அதிகப் பிரசங்கித்தனமாக பேசுகிறாய்.........என்ன தைர்யம் இருந்தால் சிவா சாருக்கே அறிவுரை கூறுவாய்....அவருக்கு கோவம் வந்தால் என்ன ஆகும் தெரியுமா.......அசையும் பொருள் நிற்கும்.........நிற்கும் பொருள் அசையும்".........என்று ஏ.பி.என் சார் வசனத்தை பேசி அவரை உசுப்பிவிட்டார்.........

அதற்குள் ஜி.எம் கண்கள் சிவக்க "எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியும்.....எல்லாம் எமக்குத் தெரியும்"...........மறுபடியும் திருவிளையாடல் வசனம் பேசி  மண்டையில் பல்பு எரிய முறைத்தார்..........மானிடா நீங்கள் தயாரிக்கும் பொருட்களில் ஹார்டுவேர், சாஃப்ட் வேர் வேறென்ன அண்டேர்வேரில் கூட வேறு வெர்ஷன் வைத்துக்கொள்ளு யார் வேண்டாம் என்றது...........இங்கே வந்து லந்து பண்ணிக்கொண்டு எங்களை மெர்சல் ஆக்குகிறாய்.......முதலில் யார் இவனை உள்ளே விட்டது.....எங்கே அந்த செக்யூரிட்டி காளையன்...........வேண்டாம் முதலில் அந்த தர்மராஜுக்கு போன் போட்டு இவனை தூக்கிப்போக சொல் என்று கர்ஜித்தார்........

இல்ல சார்.........இந்த புஷ்பக......சரி வேண்டாம் பிரம்மா சாருக்கு இந்த வருஷமும் இன்க்ரிமெண்டு நம்மால் கெடக்கூடாது.........என்று நிறுத்திக்கொண்டேன்.

தர்மராஜ் அதற்குள் அங்கு வந்து "பேர கேட்டாலே சும்மா அதிருதில்லை" என்று உள்ளே நுழைந்தவுடன்.............துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓட ஆரம்பித்தேன்...........அதற்குள் எதிரே பிரம்மாவின் செக்ரட்டரி சரசா  வர "சரசா மேடம் வழிவிடுங்க" என்று கத்திக்கொண்டே ஓடினேன்........உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்துவிட்டது,.......

யோவ் எழுந்திருயா............தூக்கத்தில் என் பெயரைத் தவிர எல்லா பொம்பள பேரையும் கூப்பிடு யார்யா அவ சரசா..............என்று பூரிக்கட்டை சகிதம் தங்க்ஸ்................சுப்ரபாதம் பாடினாள்.


















Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா....

upgraded version கேட்டது நல்ல Request!

”தளிர் சுரேஷ்” said...

நல்ல கற்பனை! ரசித்தேன்!

ஸ்ரீராம். said...

சிரிக்க வைக்கும் சுவாரஸ்யமான கற்பனை.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.