Monday, 18 July 2016

ஒரு கொலையும் சில களவானிகளின் அரசியலும்

அதிகாலை வேளையில் ரயில் நிலையத்தில் ஒரு கொலை நடத்தப்படுகிறது. ஒரு சில பேர் அதை நேரில் பார்த்திருக்கின்றனர். கொலை நடந்து போலீஸ் துப்பு துலக்குமுன்பே ஊடகங்களும், சமூக வலைதளங்களிலும் பலவிதமான கருத்துகள் பரப்படுகின்றன. அனைத்தும் ஊகங்களின் பேரிலே அரங்கேறுகிறது. சில பிரபலங்கள் அதற்குள் இவர்தான் குற்றவாளி என்று வேறு ஒருவரை சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்புகின்றனர்.

காவல்துறை கிடைத்த ஆதாரங்களின் பேரிலே சில நாட்களில் கொலையாளி என்று ஒருவரை கைது செய்கிறது. அதற்குள் ஊடகங்கள் தங்களது பத்திரிகையின் வியாபார நோக்கில் சில கருத்துகளை அள்ளி விடுகிறது.

இந்த கால கட்டங்களில் காவல்துறை மேலும் சில ஆதாரங்களை திரட்டுகிறது. அதற்குள் இந்த கொலை வழக்கில் ஜாதி அரசியல் நுழைகிறது. கொலை குற்றம் சுமத்தப்பட்டவர் தான் தான் அந்த குற்றத்தை செய்தார் என்று ஒத்துக்கொண்டதாக காவல் துறை அறிவித்தகாக ஒரு சில ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.

இப்பொழுது அல்லக்கை அரசியல் வாதிகள் ஜாதி அரசியலை கையில் எடுத்துக்கொண்டு குற்றம் சுமத்தப்பட்டவர் நிரபராதி என்று சில செய்திகளை ஊடகங்கள் வாயிலாக பரப்புகின்றன. இது கௌரவகொலையோ இல்லை ஜாதி ஆணவக் கொலையாக இருக்கலாம் என்று விஷத்தை தூவுகின்றன. இப்பொழுது மற்ற கட்சிகளும் களத்தில் குதித்து தங்களது இருக்கையை காட்டிக்கொள்கின்றன.

எது எப்படியோ இந்த வழக்கு வழக்கு மன்றத்திற்கு வரும் பொழுது தகுந்த ஆதாரம் இல்லாமல் தீர்ப்பு வழங்காது. குற்றவாளி தப்பிக்கலாம் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற நமது சட்டத்தின் ஒரு நியதியை பிடித்துக்கொண்டு வழக்கு அதே பாதையில் செல்லும். மேலும் இந்த வழக்கு பல காலம் நீடிக்கலாம்.

அது வரை ஊடங்கங்களும் சமூக வலைத்தளங்களும் அடுத்த கொலையோ இல்லை ஒரு கற்பழிப்போ நடக்கும்வரை தங்களது கற்பனையை தட்டிவிட்டு செய்திகள் வெளியிடும். வேறு எதாவது நிகழ்ச்சி நடந்தால் இந்த வழக்கு பின்னால் தள்ளப்படும் ஊடகங்களை பொறுத்த வரை...............

குற்றம சுமத்தப்பட்டவர் நிரபராதி என்று தீர்ப்பு வெளியாகலாம். கொலை செய்யப்பட்டவர் தானே தன்னை வெட்டிக்கொண்டு இறந்திருக்கலாம் என்ற அனுமானத்தை வழக்கம்போல் நீதிமன்றம் மக்களிடமும் ஊடகங்களிடமும் விட்டுவிடும்............

வாழ்க ஜனநாயகமும் பத்திரிகை சுதந்திரமும்...............
   

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

KILLERGEE Devakottai said...

கொலை செய்யப்பட்ட சுவாதி இறந்து விட்டாள் அவளது குடும்பம் ஊடகங்களால் தினம் செத்துக்கொண்டு இருக்கின்றது நண்பரே
த.ம.2

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.