Tuesday, 31 January 2017

தீ வச்சது ஒரு குற்றமா?

செய்திகளும்................... லொள்ளுகளும்

ஆட்டோ குடிசைகளுக்கு தீ வைத்த பெண்காவலர்களிடம் கமிஷனர் விசாரணை......ஏம்மா தீ வைச்சிங்களா?

தீ பத்திரமா இருக்கனும்முன்னு குடிசைக்குள்ளேயும், ஆட்டோக்குள்ளேயும் வச்சது ஒரு குற்றமா கமிஷனர் அய்யா....

கல்வி, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதான 36 மாணவர்கள் விடுதலை......சட்டசபையில் ஒ.பி.எஸ்

ரொம்ப நல்லவரா இருக்காரே? சின்னம்மா.... சின்னம்மா....



அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சின்னம்மா தலைமையில் நடைபெறும்-செய்தி 

பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு ஆட்டையப் போட்டுச்சாம் அனுமாரு........

பொது இடங்களில் என்னை மரியாதையாகப் பேசுங்கள்-----சூனா சாமி 

ஒகே பொறுக்கி சாமி..........இந்த மரியாதை போதுங்களா? இந்தப்பக்கம் வாங்க இன்னும் மகளிரணி மரியாதை செய்யுறோம்..

பா.ஜ.க பிரமுகர் முத்து படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன்...வானதி ஸ்ரீநிவாசன்...

இந்த உலகத்திலேயே கள்ளக்காதல் விவகாரத்தில் தற்கொலை செய்ததை கண்டனம் செய்த ஒரே கரகாட்ட கோஷ்டி நாம்தான்..........ட்விட்டரில் யாரோ 

மேற்கு வங்கத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டிடத்திற்கு தீ வைப்பு--செய்தி 

தமிழ் நாட்டு போலீசு யாரையாச்சும் அங்கே ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாங்களோ?

நிருபர் கேப்டனிடம் உங்கள் பார்வையில் சமூக விரோதி யார்?
கேப்டன்: நீங்கதான்

செருப்படி.............👌👌👌




Follow kummachi on Twitter

Post Comment

Sunday, 29 January 2017

அண்ணே 144 அண்ணே

அண்ணே இன்னிக்கு பேப்பர பார்த்தீங்களா அண்ணே..........

(மைன்ட் வாய்சில்) ஏன் இந்த நாயி இன்னிக்கு பேப்பர பத்தி கொலைக்குது...
டேய் ஏண்டா நாயே நீ பாத்தியாக்கும்..........

இல்லீங்கண்ணே படிச்சேன்............


டேய் பேப்பருல சுருட்டி வச்ச ப்ரியானிய லவுட்டி தின்ற பேமானி நீ பேப்பர நீ படிச்சியாக்கும்.............டேய்.........அதெப்படிடா பொய் உன் வாயில காவாத்தண்ணி மாறி கொட்டுது..............

இல்லீங்கண்ணே உண்மையா படிச்சேன் அண்ணே...........மெரினாவுல 144 ன்னு போட்டிருக்காங்கண்ணே...

சரி அதுக்கு இன்னடா இப்பொ கோமுட்டி தலையா....

144 ன்னா என்ன அண்ணே? 9 பேருக்கு மேல கூட்டம் சேரக்கூடாது......அதுதானுங்களே அண்ணே............

டேய் கூமுட்ட தலையா.............உனக்கு எவண்டா 9 பேருன்னு சொன்னது...........டேய் CrPC 144  இன்ன சொல்லுதுன்னா 4  பேருக்கு மேல கூட்டம் சேரக்கூடாது.............

அப்படியும் சொல்லலாம் கூட்டம்.........அப்போ 144 கூட்டுங்க 9 வருதா அதான் சொன்னேன்...நான் சொலரதுதாண்ணே  ரைட்டு.........

டேய் செங்கல் மண்டையா காலையில ஏண்டா எங்கிட்ட வந்து லொள்ளு பண்ற............நாயே சரி 144  சட்டம் போட்டிருக்காங்க அதுக்கு இன்ன்ன...........

அதெப்படி அண்ணே............நடக்கும் இப்பொ பாருங்க நானு, நீங்க அண்ணி.......நாலு பேரும் பீச்சுக்குப் போறோமா?

டேய் நாயி....அண்ணி உன்கிட்டே வரேன்னு சொன்னாளாக்கும்............சரிடா கரிச்சட்டி தலையா......அதெப்படி நாலு பேரு.............

அண்ணே கூட உங்க தங்கச்சியும் வருமில்ல................

டேய் கருவாயா ஏண்டா காலைல கடை முன்ன வம்பு பண்ற.........போடா......

அது இல்லீங்கண்ணே.........அதுபோல நாலு நாலு பேரா வருவாங்க இல்ல...........அவங்க சுண்டல் கடைல நின்னா கூட்டமாவுமில்ல அப்போ போலீசு இன்னா செய்வாங்க...............

டேய் கோமுட்டி தலையா ஒரு முதலாளிய பார்த்து கேக்குற கேள்வியாடா இது..

அதில்லைங்க அண்ணே.....இன்ன செய்வாங்க கைது பண்ணுவாங்களா அண்ணே....

டேய் அதுக்குதான் சொல்லியிருக்காரு இல்ல............நடக்கிறவங்க........குடும்பமா வரவங்களுக்கு பிரச்சின இல்ல.........

அதெப்படி அண்ணே கூட்டமா நடந்து போனா...............

டேய் நாயே உனக்கு இன்னா வேணும்..............சொம்மா இங்க லொள்ளு பண்ணாதா........அதோ நாய்க்கு வைக்க ரெண்டு பொற வச்சிருக்கேன்.........அத்த கவ்விட்டு ஓடிடு.............அடேய்.........அந்த பெரிய பீச்சுக்கு 144  போட்ட ஒரே கவுமெண்டு நம்ம கவுமெண்டுதான்........அத்த பத்தி இந்த நாயி காலைல பேச வந்த்திடுச்சு....இல்ல கொலைக்க வந்திடுச்சு.........இன்னிக்கு நரி ஊளை உட்டிடிச்சு டோய்............ஊ...ஊ...ஒ..





Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 26 January 2017

கலக்கல் காக்டெயில் -177

வி.ஐ.பி பாஸ் 

ன்று சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் ஒ.பி.எஸ் கொடியேற்றி வைத்தார். சுதந்திரம் அடைந்த நாள் முதல் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் கவர்னர் கொடியேற்றி வைப்பதுதான் மரபாக இருந்தது. ஆனால் சிலவருடங்களுக்கு முன்பு இந்த மரபை மாற்றியவர் முன்னாள் முதல்வர் கலைஞர், அதன்படி சுதந்திர தின விழாவில் முதலமைச்சரும் குடியரசு தின விழாவில் கவர்னரும் கொடியேற்றுவது மரபாக இருந்தது. ஆனால் இந்த குடியரசு தின விழாவில் கவர்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் கலந்து கொள்வதால் அந்த பொறுப்பு ஒ.பி.எஸ் டம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விழாவிற்கு கொடுக்கவேண்டிய வி.ஐ.பி பாஸ்கள் மன்னார்குடி வகையறாக்களுக்கு கொடுக்கப்படும் அவர்களும் முன் வரிசையில் வந்து தங்களது ஆளுமையை காண்பிக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் நடந்தது வேறு..........

ஓ.பி.எஸ் தனது மனைவி சகிதமாக அமர்ந்து குடியரசு தின நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்...............நான் முதலமைச்சரா இருப்பது உங்களுக்கு எரியுதுனா.............நான் இருப்பேன்டா கெத்தா..........ஸ்டைலா.........என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

அவருடைய செயல்பாடுகள் இப்பொழுது மக்கள் ஆதரவைப் பெறுகின்றன. இவரை மறைந்த முதல்வர் சரியாக உபயோகப்படுத்தவில்லையோ என்றே தோன்றுகிறது.

PETA ஒழித்தவை

பீட்டாவின் குறிக்கோள் என்ன என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே நாட்டு மாடுகள் அழிவை தொடங்கிய அவர்கள் நாட்டு நாய்களையும் ஒழிக்கும் வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள்.  தமிழ் நாட்டில் கோம்பை, கன்னி, ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை என்று நான்கு  நல்ல நாட்டு நாய் வகைகள் உண்டு. இவற்றின் இனப்பெருக்கத்திற்காக சென்னை சைதாப்பேட்டையில் ஆராய்ச்சி மையமும், இனப்பெருக்கக்கூடமும் செயல்பட்டு வந்துகொண்டிருந்தது. அதை நாய்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றன, சுகாதார வசதிகள் இல்லை என்று வாதாடி அதை இழுத்து மூடிவிட்டன. அதன் மூலம் வெளிநாட்டு வகைகளான, லாப்ரடார், ராட்வீளர், ப்க் (PUG) வகை நாய்களை இறக்கியாகி விட்டது. இதன் வர்த்தக உள்நோக்கம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நாட்டு நாய்கள் உணவு நமது எளிய வகை உணவுகள்தாம். ஆனால் வெளிநாட்டு நாய்களுக்கு ஸ்பெஷல் மீல்ஸ்!!!! கொடுக்கவேண்டும். இதன் வியாபார விஸ்தாரணம் அளவிட முடியாது. அதன் விளைவுதான் சூப்பர் மார்கெட்களில் PEDIGREE  இத்யாதி வகைகளை பார்க்கலாம்.

ரசித்த கவிதை

கைச்செலவுக்கும் பணமற்ற கடவுள் 

ஓய்வூதியத்தில் ஒதுக்கிவைத்த 
சிறுதொகையை எடுக்க விரைகிறார்
ஏ.டி.எம் படியேறுகையில் பாதம் தடுமாற
தாங்கிப்பிடித்த தாடிக்கார யுவனுக்கு
ஆங்கிலத்தில் நன்றி சொல்கிறார்
வரிசைகண்டு மலைத்து வாசலில் நிற்கையில்
வழுக்கையில் விழும் வெய்யிலை 
குடைகொண்டு தடைசெய்கிறார்
கண்கள் பூத்துக் காத்திருந்து கடைசியில் 
தனக்கும் முந்தைய வாடிக்கையாளரோடு
இருப்பின் பரிவர்த்தனை முடிவுபெற
இறுதியில் முகம் சுருக்கிச் சபிக்கிறார் 
ஆற்றாமை பொங்க
"உலகம் அழியட்டும்".    நன்றி: ஸ்ரீதர்பாரதி

தமிழ் சினிமா

ரித்விகா

சமீபத்திய தமிழ் படங்களில் வந்து கொண்டிருக்கும் வளரும் நட்சத்திரம். பாலாவின் பரதேசியில் முதலில் பார்த்த நியாபகம், ஆனால் பிறகு வந்த மெட்ராஸ் படத்தில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். சமீபத்தில் கபாலியில் சூப்பர் ஸ்டாருடன்...முக்கியமாக  சொந்தக்குரலில் தமிழ் பேசி நடிக்கும் சென்னை பெண்...





Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 25 January 2017

படித்ததில் சிரித்தது

டந்த ஒரு வார காலமாகவே தமிழ்நாட்டில் செய்திகளுக்கு பஞ்சமில்லை. ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடங்கிய பின்பு பிரபலங்களின் பேச்சுகளும், கேப்பில் கிடா வெட்டிய அரசியல் வியாதிகளின் போராட்டங்களும் உளறல்களும் அதனைத் தொடர்ந்து நெட்டிசன்களின் கலாய்ப்புகள் சில சிரிக்க வைத்தன சில சிந்திக்கவும் வைத்தன........அவற்றின் தொகுப்பு...........

ஆபத்தான விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்கிவிட்டு காவலர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்த ராதாராஜன் வேறு யாருமல்ல த்ரிஷாதான் மேக்கப் இல்லாம சுத்துராப்போல.

ஹல்லோ யாரு போலீசுங்களா நம்ம வீட்டு அடுப்ப கொஞ்சம் பத்த வக்கிறீங்களா!!!

நம்ம கேப்டன் குடிச்சிட்டு பேசுறத்தான் கமலு குடிக்காம பேசுறாரு.



இனி எண்ட ட்ரின்க் பவாண்டோ, எண்ட சைடு டிஷு மிச்சர், எண்ட சரக்கு கள்ளு............

ஜல்லிக்கட்டு நடக்க காரணம் சின்னம்மாவாம்.........கலவரத்துக்கு காரணம் மாணவர்களாம்....

கலவரத்திற்கு காரணம் சமூக விரோதிகள்தான்--கமிஷனர் ஜார்ஜ் # அப்புறம் அவங்கள எதுக்கு சார் டிபார்ட்மென்ட்டுல சேர்த்தீங்க?

சிவபெருமான் போலீசை அனுப்பினார், பொறுக்கிகள் ஓடிவிட்டனர்......ட்விட்டரில் சுப்ரமனியசாமி..........யாரிந்த சிவபெருமான்..நடராஜனுக்கே வெளிச்சம்.

ட்ரம்பும் மோடியும் போனில் பேசிக்கொண்டனர்.
ட்ரம்ப்: நீங்க அமெரிக்காவுக்கு வரணும்...
மோடி: உங்க பொடனிக்கு பின்னாடிதான் நிக்குறேன்..ஓவர் ஓவர்

சென்னை கலவரத்தில் 140 போலீஸ் வாகனங்கள் சேதம்--செய்தி# எரிக்கும் போதே எண்ணிட்டிங்களா? போலீஸ்கார்.....


Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 24 January 2017

மிச்சர் சி.எம் இல்ல ஊர் மெச்சும் சி.எம்.

த்தனை நாட்களாக ஓ.பி. எஸ் என்றால் அம்மா இல்லாத போது சி.எம் ஆக வந்து நாற்காலியில் அமர்ந்துவிட்டு அம்பேலாவார். ஒன்றும் செய்ய மாட்டார். அம்மா பதவியில் இருந்தால் ஒரு நாற்பது டிக்ரீ கோணத்தில் முன்னால் குனிந்து  பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் நாள் தமிழ் நாட்டு பட்ஜெட் படிப்பார். அதில் வார்த்தைக்கு வார்த்தை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆணைப்படி என்று தவறாமல் சொல்லிவிட்டு மிச்சர் சாப்பிடப் போய்விடுவார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கியவுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட  கைக்குழந்தை முதல் கைத்தடி வைத்த பெரிசுகள் வரை தவறாமல் ஓ.பி.எஸ் மிச்சர் தின்னும் பதாகைகளை தாங்கி ஏறக்குறைய அவரை மிச்சர் மாமா என்று உலக காப்புரிமை வாங்கிவிடும் அளவிற்கு செய்துவிட்டார்கள். இதைக் கண்ட ஒரிஜினல் மிச்சர் மாமா (நாட்டாமையில் நடித்தவர்) காண்டானதாக கேள்வி.

இதற்கான காரணம் போராட்டம் தொடங்கிய அன்று அவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்குகொண்டு ஆயிரத்தில் ஒருவன் பார்த்துக்கொண்டு இருந்தார். ஆதலால்தான் போராட்டக்காரர்களும் வரச்சொல் வரச்சொல் மிச்சர் மாமாவை வரச்சொல் என்றும் சின்னம்மா சின்னம்மா ஒ.பி.எஸ் எங்கேம்மா என்று ஏலம் விட்டுக்கொண்டு இருந்தார்கள்.

ஆனால் போராட்டத்தின் வீர்யத்தை உணர்ந்த அவர் உடனடியாக பிரதமரை சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய அவசியத்தை உணர்த்தி, பின்பு டில்லியிலேயே ஒரு நாள் தங்கி சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்து மேலும் மூன்று அமைச்சகங்களின் செயலர்களை சந்தித்து பேசி சட்ட திருத்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார். அதில் ஒரு செயலர்தான் ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடை சட்டத்தில் இருந்த ஓட்டைகளை வைத்து நீங்கள் இப்படி செய்தால் இனிமேல் யாரும் தடைபோட முடியாது என்று அறிவுரை கூறியிருக்கிறார். அதெல்லாம் முடிந்த பின்புதான் செய்தியாளர்களை சந்தித்து இனி நல்லது நடக்கும் என்று நம்பிக்கையளித்தார். இருந்தும் கூட போராட்டக்காரர்களுக்கோ நமக்கோ நம்பிக்கை ஏற்படவில்லை. இவர் பிரதமரை பத்து நிமிடம் சந்தித்ததில் இரண்டு பேரும் சேர்ந்து மிச்சர் சாப்பிட்டு இருப்பார்கள் என்று பரவலாக பேசப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள் உங்களை சமூக தளங்களில் கிண்டல் செய்கிறார்களே என்று வினவிய பொழுது அவர் சிரித்துக்கொண்டே பொதுவாழ்வில் இதெல்லாம் சாதாரணம் என்று கவுண்டமணி ரேஞ்சில் சொல்லி அசத்தியது அவரைப்பற்றிய கருத்தை மாற்றிக்கொள்ள செய்தது.

சட்டசபை கூடிய முதல் நாள் கவர்னர் உரைக்குப்பின் மறைந்த முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி சட்ட சபை  முடிக்கப்பட்டது, அதான் மரபும் கூட,  ஆனால் மாலை சட்டசபையைக் கூட்டி சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்றிய வேகத்தைக் கண்டு இனி இவர் மிச்சர் மாமா இல்லை ஊர் மெச்சும் மாமா என்று மக்கள் தங்கள் என்னத்தை மாற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

இருந்தாலும் நேற்றைய காவல்துறை செயல்பாடு குறிப்பாக காவலர்களே சில இடங்களில் ஆட்டோக்களுக்கு தீ வைத்ததும், மற்றும் சிலவீடுகளில் பெண்காவலர்கள் தீ வைத்ததும் ஒரு கரும்புள்ளியே.

இதை அவரின் மதிப்பு கூடுவதைக்கண்டு எரிச்சலடைந்த கூட்டத்தின் உள்குத்து வேலையாக இருக்கும் என்ற செய்திகளை நம்பாமல் இருக்க முடியவில்லை.

ஓ.பி.எஸ் இப்பொழுது தனது அதிகாரத்தை உணர்ந்து இருப்பார், இவர் இப்படியே தொடர்ந்தால்...........அடுத்து அவரை காலி செய்து நாற்காலி பிடிக்க காத்துக்கொண்டு இருப்பவர்கள் மிச்சர் பார்ட்டி ஆவது உறுதி.

Follow kummachi on Twitter

Post Comment

Monday, 23 January 2017

ஜல்லிக்கட்டு போராட்டமும் விருப்பமில்லா திருப்பங்களும்

அலங்காநல்லூரில் சில நாட்களாகவே புகைந்துகொண்டிருந்த நெருப்பு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டவுடன், எல்லா நகரங்களிலும் பரவ ஆரம்பித்துவிட்டது. சென்னை மெரீனா கடற்கரையில் அது இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுக்கும் என்று அரசு மட்டுமல்ல யாருமே எதிர்பார்க்காத ஒன்று. முதலில் ஐயாயிரம் என்ற கூட்டம் நாட்கள் செல்ல செல்ல லட்சக்கணக்கில் பெருக ஆரம்பித்தது. இருந்தாலும் போராட்டம் ஒரு  சிறு அசம்பாவிதம் இல்லாமல் வெகு சீராக நடந்தது. அரசும் இதற்கு முதல் துணை போனதன் காரணம் நமக்குப் புரியாமல் இல்லை.

இந்த போராட்ட இளைஞர்கள் அரசியல் வாதிகளை முதலில் தங்களுள் கலக்க (மன்னிக்கவும்) விடவில்ல. அங்கே ஆதரவு தர வந்த ஒன்றிரு தலைவர்களையும் நீங்க போயி உங்க வேலையைப் பாருங்க..........நாங்க பாத்துக்கறோம் என்று அனுப்பிவைத்துவிட்டனர். அடுத்ததாக சினிமாகாரர்களையும் கிட்டே அண்டவிடவில்லை ஓரிருவர் நீங்கலாக. வந்த ஓரிருவரும் அவர்களின் உணவு தேவைகளையும், பெண்கள் கழிப்பிட வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்து  போராட்டம் சீராக செல்ல வழிவகுத்தனர். நாள் செல்ல செல்ல இந்த அறப்போராட்டம் எல்லோராராலும் பாராட்டுகள் பெற மேலும் மேலும் அதிக மக்கள் வந்து சேர ஆரம்பித்தனர்.

போராட்டத்தின் வீர்யத்தை உணர்ந்த அரசும் மத்திய அரசை அணுகி ஜல்லிகட்டு நடத்த உரிய சட்ட திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது, அதே சமயத்தில் இந்த மெரீனா புரட்சியின் ஆணிவேரை ஆராய ஆரம்பித்தது. சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை வெள்ளத்தில் உதவிய இளைஞர்கள்தான் இந்த முறை இதை ஏற்பாடு செய்திருக்கிறார்கள், இதை பல்வேறு நகரங்களிலிருந்து 136 பேர்கள் கொண்ட குழு செய்திருக்கிறது. இதை முன்பே மோப்பம் பிடித்த உளவுத்துறை மேலிடத்தில் சொல்லியிருக்கிறது.

இந்த அறவழி போராட்டம் இந்த இளைஞர்களின் வேறொரு பக்கத்தை காண்பித்திருக்கிறது. மேலும் போராட்டம் என்றால் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இன்றைய அரசியல்வாதிகளுக்கு தெரிய வைத்திருக்கிறது. இதே போராட்டம் அரசியல்வாதிகளால் நடத்தப்பட்டிருந்தால் எத்தனை உயிர்களை காவு வாங்கி இருக்கும் மற்றும் எத்தனை பொது சொத்து சேதமாகி இருக்கும் என்று நமக்கு தெரியும்.

இதற்கிடைய நாங்களும் போராட்டம் நடத்துகிறோம் என்று கூடிய நடிகர்களை காமெடி பீசாக மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். ஒரு நடிகர் ஏற்கனவே சொல்லியிருந்தார், இது இளைஞர்களுக்கான் போராட்டம் அதில் நாம் "SHOW STEAL" செய்யக் கூடாது என்று, இருந்தாலும் அவர்கள் ஆடிய தனி ஆவர்த்தனத்தில் அவர் கலந்து கொண்டது வியப்பே.

இந்த இளைஞர்களின் எழுச்சி, அறவழிப்போராட்டம் வடக்கத்தியானையும் நம்மை திரும்பி பார்க்க வைத்தது. இப்பொழுது மத்திய அரசும் மாநில அரசும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, போராடும் இளைஞர்கள் எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று முரண்டு பிடிக்க, இனி அரசியல் நாடங்கள் தொடங்க ஆரம்பித்தன.

இதன் நடுவே இந்த போராட்டத்தை "FREE SEX" என்று சொன்னால் கூட ஐம்பதாயிரம் பேர் கூடுவார்கள் என்று கூறி "PETA" ஆர்வலர் வாங்கிக்கட்டிக்கொண்டார். இவரிடம் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில்  ஒரு நபர் ஜல்லிக்கட்டை தடை செய்கிறீர்களே, ஏன் கோயில்களில் யானைகளையும், குதிரைப் பந்தயங்களையும் தடை செய்யவேண்டியதுதானே, என்றே கேள்விக்கும் எதை தடை செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று பதிலளித்தார். இந்த ஆயா இனி வெளியே வருவது சற்று கடினம்தான், வந்தாலும் இவர்கதி இவரால் கைவிட்டப்பட்ட தெருநாய்கள் கதிதான்......(இது தனி பதிவு மேட்டர்)

சரி இப்பொழுது விருப்பமில்லா திருப்பங்களுக்கு வருவோம்.

அரசு விரைவு மசோதா தவிர வேறு எதுவும் செய்ய இயலாத கையறு நிலை.
இளைஞர்களுக்கோ காளையை காட்ச்சிப்படுத்தகூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டால் ஜல்லிகட்டு நிரந்தரமாகிவிடும் என்ற புரிதல். அதுவரை போராட்டம் தொடரும் என்ற நிலை.

சட்டசபை தொடங்க வேண்டும், அதற்குள் மெரினாவில் கூடியுள்ளவர்களை கலைக்க வேண்டும் என்று இந்த போராட்டத்தை ஆதரித்த ஓரிரு பிரபலங்களை அணுக அவர்களுக்கு இளைஞர்களுக்கு புரிய வைக்க முடியாத நிலை. அவர்களும் சட்ட சிக்கல்களை கூறி போராட்டத்தை கைவிடுங்கள் என்று சொல்லி சமாதானப்படுத்தாமல் அரசியலும் மதவாதங்களையும் கலந்து போராட்டம் கொச்சைப் படுத்தப்பட இனி இதன் போக்கு நமக்கு தெரிய ஆரம்பித்ததுவிட்டது.

இனி இந்த இளைஞர்கள் கூட்டத்தில் அரசியல் ரவுடிகளும், சமூக விரோதிகளும்  வலுக்கட்டாயமாக கலக்கப்பட்டு தடியடி கண்ணீர் புகை, கல்வீச்சென்று கலைக்கப்பட்டு சின்னா பின்னமாகும் என்று யாவருக்கும் தெரியும் அதுதான் நடந்து கொண்டும் இருக்கிறது.


ஆனால் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் கல்வீச்சு கல்லடி காவலர்களுக்கும் உண்மையான போராட்ட இளைஞர்களுக்கும் இடையே என்று நினைத்தால் நீயும் தமிழனே!!!!

இனி இந்தப் போராட்டத்தின் நிறைவு அரசியல்வாதிகளால் முடிக்கப்படும்.........அவர்களது ஸ்டைலில்.........

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 11 January 2017

டீ வித் முனியம்மா --சீசன் -2(1)

டேய் மீச ஸ்ராங்கா ஓர் டீ போடுறா..........

வா செல்வம் அயாலு எவ்விடே........

யார்ரா லோகுவா வந்துகினுகிரான் பாரு.........கண்ணுல இன்னா வச்சிகீற...அவனுக்கும் டீ போடு..........மீச நாஸ்தாவுக்கு இட்லி வடகறி கீது?

டேய் மீச மினிம்மா வந்திச்சு...........

அவ்விடே நோக்கு வருன்னு..................

என்ன மினிம்மா.......எங்க ஆளே காணோம்...........

டேய் செல்வம் மினிம்மா.........மினிம்மானு இன்னொரு தபா கூவுன மவனே செவுலு பிஞ்சிடும்..............

அய்ய அதானே உன் பேரு.........

டேய் முனிம்மான்னு கூப்பிடுறா......லுச்சா...........மினிம்மான்னா நம்மள கட்சிக்காரன் ஒரு மாரியா பாக்குறான்.........இப்பொ தமிழ் நாட்டுல அது பேஜாரு பேருடா.............அத்த சொன்னாலே ஜனம் மெர்சலவுது..........

சரி முனியம்மா..........சர்தானே...........தோ பாரு லிங்கம் சாரும் பாயும் வராங்க பாரு..........சட்டு புட்டுன்னு இன்னா நூசு சொல்லு.....

ஐயே உனுக்கு தெரியாதாக்கும்.............அந்தம்மா பூட்ச்சு.........இப்பொ எல்லா பேமானிங்களும் தோட்டதாண்ட போயி "மினி"ம்மா காலுல உயுந்து முதலமைச்சர் ஆவனுன்னு கூவுரானுங்க.

சரி முனிம்மா அவுங்க ஆவட்டுமே இன்ன பூட்ச்சு இப்ப?

அடப்போ லிங்கம் சாரு போங்கா கீதே...........அந்தம்மா இருக்க சொல்ல இது ஊட்ல இன்ன வேலை செஞ்சிகினு இருந்துது.........

ஐய முனிம்மா விசயம் தெரியாம பேசிகினு கீற...........நம்ம நாட்ல யாரு வேணா முதல் மந்திரியோ இல்ல பிரதமரோ இன்னா வேணா ஆவலாம்......

அதெப்படி பாயி அது இன்னா படிச்சிகீது அதுக்கு இன்ன தெரியும்......

அடப்போ முனிம்மா அதுக்கு இன்னாத்துக்கு படிக்கோணும்............தேவல....இதுக்கு முன்னாடி இருந்தவங்கள யாரு படிச்சவக.......கட்சிய நடத்த தெரியோணும்........மவனே எவனாவது கொரலு உட்டா வச்சி செய்யத் தெரியோணும்............அதா அரசியல் இல்ல தமிழ் நாட்டுல சினிமாவுல நடிச்சிருக்கணும்.........

கலீனறு எப்படிகிறாராம்?

இன்னடா லோகு............அவருக்கு வயசாவுது பாரு ஞாபக சக்தி தாராந்து போயினுகீதுன்னு பேசிகீரானுங்க.

அதான் புள்ளைய செயல் தலீவரு ஆக்கிட்டாங்களாங்காட்டியும்.........

ஆமா லிங்கம் சாரு இன்னா போ............அல்லாம் தமாசுதான். அயுவுறாங்க.....காலுல உயுவுறாங்க...........அந்த கச்சி மாறியே ஆவுறாங்க போல.........

இன்ன முனியம்மா நீ பேங்குல போயி நிக்கல...........

டேய் லோகு என் வியாவாரத்துல எதுக்குடா அம்மாம் துட்டு...........இந்த ஜனம் எல்லாம் தேவையோ தேவைல்லையோ அல்லாம் காப்ரா ஆயி அந்த மெசின நோன்டிகினே இருந்தா அது அம்பேலாயிடுது.

அதான முனிம்மா வேட்டி நூறு ரூவாக்கு குடுக்குரானு நைட்லருந்து வரிசையில நிக்குற பேமாநிங்கதான்.............கூவுரானுங்க.

சரி முனிம்மா இன்னா சினிமா நூசு...................

அத ஏண்டா கேக்குற.........போன வருஷம் இருநூறு படம் வந்திச்சாம்.......அதுல பத்துகூட தேரலயாம்............

அது சரி அல்லாம் கதை இல்லாமையே சொம்மா டான்சு..........., ஃபைட்டு......சேட்டு பொண்ணுன்னு..........டாவுன்னு படம் எடுத்தா எங்க உருப்பட போவுது.............

சரியா சொன்னேடா செல்வம்............வர்ட்டா.........

இன்னா முனிம்மா அவ்ளதானா............

டேய்சீ நீ இன்னாத்துக்கு கொரலு கொடுக்குற அல்லாருக்கும் தெரியும்  அஞ்சலையாண்ட போட்டு குடுத்துருவன்............போவியா........



Follow kummachi on Twitter

Post Comment

Monday, 9 January 2017

சொர்க்க வாசல் திறந்திடிச்சு

ணக்கம் நான் உங்கள்  "மந்தி"  டிவியின்  தங்கராஜ் முண்டே............இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி என்பது இன்றைய கால கட்டத்திலே இன்றிமையாத ஒன்று.....இந்த நிகழ்ச்சியை நம் இப்பொழுது நேரடியாக காணலாம் இதற்காக நமது நிருபர்கள், கேமரா மென் போன்றவர்கள் பல இடங்களில் நின்றுகொண்டு இருக்கிறார்கள். இது போன்ற நிகழ்ச்சியை வேறெந்த தொலைக்காட்சிகளிலும் காணமுடியாது. முதன்முறையாக இதை நேரடி ஒலிபரப்பு செய்வது நமது "மந்தி" தொலைக்காட்சி என்பதில் பெருமை கொள்கிறோம். மேலும் இந்த நிகழ்ச்சியில் நமது நிருபர்கள் ஒரே சமயத்தில் சொர்க்கத்தில் உள்ளவர்களையும் பூமியில் உள்ளவர்களையும் பேட்டி காண்பார்கள். அதே சமயத்தில் இரண்டு இடங்களிலும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கின்றன........இனி நிகழ்ச்சிக்கு போகலாமா?

முதலில் சொர்க்க வாசல் முன் நிற்கும் எழில்,..........

முண்டே: எழில் அங்க நிலைமை எப்படி இருக்கு?

எழில்: நிச்சயமா!! ஒரே பரபரப்பா இருக்கு. சொர்க்கவாசல் முன்னாடி நின்னுகிட்டு இருக்கோம், கதவு எப்ப வேண்டுமானாலும் திறக்கப்படலாம். அதற்க்கான மோட்டார் தயார் நிலைமையில் இருக்கிறதா கிங்கரர்கள் சொல்கிறார்கள்.

முண்டே: கிங்கரர்களா அவர்கள் யாருன்னு கொஞ்சம் சொல்லமுடியுமா?

எழில்: நிச்சயமா!! அவர்கள்தான் இங்கு வாட்ச்மேன்கள்......தினமும் காலையில் வேலைக்கு வந்து விடுவார்களாம்..........இந்த கதவருகே நிற்பதுதான் அவர்கள் வேலை.

முண்டே: அவர்களிடம் பேசலாமா?

எழில்: நிச்சயமா!! கிங்கரர் உங்க வேலை என்ன சொல்லுங்க....

கிங்கரர்: தெனைக்கும் வந்து கதவாண்ட நின்னுகினு இருப்போம்... மேலிடத்தில எப்போ தொறன்னு சொன்னாலும் தொறப்போம்...ஆனா வருசத்துக்கு ஒரு தபா தான் தொறக்க சொல்லுவாங்க.

முண்டே: எழில் இணைப்பிலேயே இருங்க........கொயஸ் தோட்டத்து வாசலில் நமது நிருபர் தேன்மொழி இருக்காங்க அவங்க கிட்ட பேசுவோம்........தேன்மொழி நீங்க எங்க இருக்கீங்க அங்கே என்ன நெலமை?

தேன்மொழி: நிச்சயமா? இங்கே ஒரு மக்கல் வெல்லமா இருக்கு..அவர்கலிள் நிறைய பிரபலங்கலும் இறுகாங்க..........எல்லோரும் இங்கே இருந்து சொர்க்கவாசள்...............திறக்க காத்திருக்காங்க............

முண்டே: தேன்மொழி பிரபலங்கள் சொன்னீங்க யாரு யாரு இருக்காங்க?

தேன்மொழி: நிச்சயமா!!  மதிற்பிற்குரிய கம்பினுரை இருக்காரு, கலர்வதி இருக்காங்க, சிதைகுமார் இருக்காரு.............மற்றும் எல்லோரும் கரை வேட்டிக்கட்டிக்கிட்டு காத்திக்கிட்டு இருக்காக............

முண்டே: தேன்மொழி அங்கே என்ன நடக்குது?

தேன்மொழி: நிச்சயமா?!!! எல்லோரும் இங்கே கொயஸ் தோட்டத்து கதவு களற்றி வச்சிருக்கிறதால எல்லாம் கம்பி தடுப்புக்கு முன்னால நின்னுகிட்டு இருக்காங்க.........

முண்டே:கதவ கழ்ட்டிட்டான்களா? அது எப்போ அதை பற்றி ஏதாவது தகவல் உண்டா?

தேன்மொழி: நிச்சயமா!!இதுக்கு முன்னாடி இந்த கதவ எப்பவாவது தொரப்பான்கலாம் ஆனா இப்பொ அடிக்கடி அரசியல் பிரமுகர்கல் குனிஞ்சுகிட்டே வரதால அவுக  முதுகு பட்டு கதவு பெயிண்ட் அடிக்கடி போகுதுன்னு தங்கத்தாரகை மினிம்மா கழட்டி வக்க சொல்லிட்டாங்களாம்.......அப்படின்னு இங்க இருக்கிற பக்கத்து வீட்டு வாட்ச்மேன் சொள்றார்....

முண்டே: சரி அங்கே எதுக்கு எல்லோரும் காத்திருக்காங்க?

தேன்மொழி: நிச்சயமா!!எல்லோரும் மினிம்மா வர காத்திருக்காங்க...........

முண்டே: அவங்க எப்ப வருவாங்க ஏதாவது தகவல் உண்டா?

தேன்மொழி: நிச்சயமா!! அவங்க இப்போதான் புதிய கெட் அப்  போட்டிட்டு இருக்காகளாம்..........இதோ வந்துருவாங்க............

முண்டே: புதிய கெட்டப்பா அதை பற்றி ஏதாவது தகவல் உண்டா தேன்மொழி..

தேன்மொழி: நிச்சயமா!!! அதாவது முப்பது வருஷமா மேக்சிமா கூடவே இருந்ததால அதே மாதிரி கெட்டப் போடனுன்னு ஆடலரசன் சொன்னாராம்?

முண்டே: அதெல்லாம் எப்ப தைக்க குடுத்தாங்களாம் ஏதாவது தகவல் உண்டா?

தேன்மொழி: நிச்சயமா!! அவங்க உதவியாளர இதை பற்றி கேட்கிறேன்......ஏங்க மினிம்மா இந்த டிரஸ் எல்லாம் எப்ப தைக்க கொடுத்தாங்க எதாவது தகவல் உண்டா?

உதவியாளர்: அன்னிக்கு "மேக்சிமா" மயக்கம் போட்டாங்க இல்ல அப்ப இங்கே ஒரே பதட்டமாச்சி.............உடனே அப்போல்லோக்கு போன் போட்டாங்க.......அப்புறம் டைலர் வந்தாரு............அவருகிட்ட அளவெல்லாம் கொடுத்துட்டுதான் அப்போல்லோவுக்கே போனாங்க.........

தேன்மொழி: வந்துட்டாங்க........வந்துட்டாங்க...........மினிம்மா.....இதோ கம்பினுரை போறாரு............தவந்துகிட்டே போறததான் நீங்க பாத்துகிட்டு இருக்கீங்க.............அவரு மினிமா கிட்டே பேசுறாரு...........மைக்க முன்னாடி வக்கிறேன்...........மினிம்மா மினிம்ம நீதான் இனிமே எல்லாம்.............எங்களை எல்லாம் காப்பாத்து மினி தாயே...............அண்ணாவிற்குப் பிறகு தம்பி...........அக்காவிற்கு பிறகு தங்கை................மனைவிக்கு பிறகு துணைவி ............அடுப்புக்கு பிறகு தொடுப்பு...........மினிம்மா நீங்கதான் இனி எல்லாம்........"மேக்சி" பிறகு "மினி" தானே.............

அடுத்து கலர்மதி அழுதுகிட்டே போறாங்க.........மினிம்மா உங்க குரல் இனிமைம்மா..........நீ தான அந்த குயில்..........நீ கண்டி அப்ரோவர் ஆயிருந்த ங்கொயால ஆட்சியையும் இருந்திருக்காது மேக்சிம்மாவும் இருந்திருக்காது........த்தா எந்நன்றி கொண்டார்க்கும் ..மமாள உய்வுண்டாம் பேமானி கண்ட ங்கொய்யால...............சினிமாவுல செல்லாகாசுதானே அந்தம்மா...........நீதான் மினிம்மா இனி அல்லாம்...........

ஆடி அம்பட் இதோ பேசுகிறார்......வான்கோழி மயிலாகலாம்.........தவிடு .........நெல்லாகலாம்............பரோட்டா...........குருமா ஆகலாம்.........சைகோ ஒரு துரோகி..........யானை நடந்தா ............எறும்புகள் மடியத்தான் செய்யும்...

முண்டே: தேன்மொழி இணைப்பில் இருங்க..........எழில் விண்ணுலகிலிருந்து அழைக்கிராறு..........சொர்க்க வாசல் திறந்துட்டாங்களாம். எழில் அங்கே என்ன நடக்குது?

எழில்: நிச்சயமா!!! சொர்க்க வாசல் திறந்து ஐந்து நிமிடம் ஆகிறது........நீங்கள் கொயஸ் தோட்ட நேரலையில் இருந்தததால் அந்நிகழ்வை காண முடியவில்லை.

முண்டே; சரி சொர்க்கவசால் திறந்துட்டாங்க யாராவது தெரிகிறார்களா?

எழில்: நிச்சயமா!!! ஒருத்தரு கையில் சங்குசக்கரம், சங்கு தலையில் கிரீடம் எல்லாம் போட்டுக்கிட்டு பட்டாடை உடுத்தி நடுநாயகமா மேடையில் இருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது...........அவர் முன்பு நிறைய  பேர் உட்கார்ந்திருக்கிறார்கள் சில முகங்கள் நமக்கு பரிச்சயப்பட்ட முகங்கள் போல் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது..........முண்டே........

முண்டே: எழில் அவங்க யாருன்னு உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?

எழில்: நிச்சயமா? மேக்சிமா இருக்காங்க............அவங்ககூட வழுக்கைதலையோட ஒருத்தரு பேசிகிட்டு இருக்காங்க.........முண்டே.......

முண்டே: கேமரா மென் கிட்டே சொல்லி அவங்க கிட்ட ஜூம் பண்ண சொல்லுங்க.......அவங்களையே தெய்வமா வணங்கின கூட்டம் இப்பொ கொயஸ் தொட்டதுலதான் கூடியிருக்கு........அவங்க ஆனந்தப்படுவாங்க...........

எழில்: நிச்சயமா!!இப்பொ பாருங்க அவங்க முகம் தெளிவா தெரியுது..........

முண்டே:  தேன்மொழி சொர்க்கவாசல் திறந்துட்டதா அங்கே இருந்து எழில் சொன்னாரு....

தேன்மொழி: நிச்சயமா!! எங்களுக்கு தெரிகிறது..........மேக்சிமா கூட தெரியிறாங்க...........

முண்டே: அங்கே நிலைமை எப்படி இருக்கு?

தேன்மொழி: நிச்சயமா!!இன் எல்லோரும் மினிம்மா காரு டயர நக்கிட்டு இருக்காங்க............

முண்டே:அங்கே யாரும் சொர்க்க வாசல் நிகழ்ச்சியை பார்க்கவில்லை போல் தோன்றுகிறது என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் தேன்மொழி?

தேன்மொழி: நிச்சயமா!! அவங்க எல்லோரும் குனிந்து இருப்பதால அவங்களுக்கு சொர்க்க வாசல் திறப்போ இல்லை அங்கே அவர்கள் இதற்க்கு முன்னால் குனிந்து வணங்கிய மேக்சிமாவையோ பார்க்கமுடியவில்லை என்பதை நம்மால் காணமுடிகிறது........

முண்டே: தேன்மொழி திடீரென்று அங்கு என்ன கலவரம்........

தேன்மொழி: நிச்சயமா!!! இங்கு ஒருவர மண்டை திறந்திருக்கிறது...........அவரை ஒரு இருபது பேரு சேர்ந்து அடித்திருக்கிறார்கல்........

முண்டே: ஏன் அடிச்சாங்க ஏதாவது காரணம் தெரியுமா?

தேன்மொழி: நிச்சயமா!! இதோ அவருகிட்டேய கேட்போம் அவரு பேச ரொம்ப கஷ்டப்படுறாரு............ஏதோ சொள்றாரு அதை கேட்டு சொள்ரன்.....

முண்டே: கேட்டு சொல்லுங்க...........சத்தமா சொல்லுங்க.....

தேன்மொழி: அவரு மட்டும்தான் இந்தக்கூட்டத்தில் சொர்க்கவாசல் திறப்ப பார்த்தவராம்..........அவரு ஏதோ பழைய விசுவாசத்தில மாண்புமிகு ..........தலீவி மேக்சிமானு சத்தமா சொல்லிட்டாராம்..........

முண்டே: என்ன சொன்னாரு? கொஞ்சம் சத்தமா சொல்லுங்க நேயர்களுக்கு கேட்கணும் இல்ல..........

தேன்மொழி: சத்தமாக மேக்சிமா என்று சொல்ல.............படுத்திருந்த கூட்டம் அவர நோக்கி ..................ஏய் எவடி அவ..........ஓடரா மைக்க..........புடுங்குடா கேமராவா...........

தேன்மொழி: நன்றி உங்கலிடமிருந்து விடை பெறுவது கேமரா மென் குரலசரனுடன் .......தேன்மொலி..............

முண்டே: இதுவரை சொர்க்க வாசல் நிகழ்ச்சியை நேரில் பார்த்தீர்கள்...........இந்த நிகழ்ச்சியை முதலில் காண்பித்தது எங்கள் மந்தி டிவி என்று மற்றுமொரு முறை கூறிக்கொண்டு உங்களிடமிருந்து விடைபெறுவது தங்கராஜ் முண்டே........

சொர்க்கத்திலிருந்து.........சார் முண்டே சார்............நான் எழில்...........நான் எழில்...........என்று கதறிக் கொண்டிருக்கும் போதே திரை ஃபேட் அவுட்டாகிறது.........

Follow kummachi on Twitter

Post Comment

Sunday, 8 January 2017

வள(ர்)ராதமதி

போயஸ் தோட்டத்து வாசலில் சுற்றும் சொறி ..ய்களுக்கு எல்லாம் இப்பொழுது நல்ல காலம் போல் இருக்கிறது.

அம்மா வேஷம் கட்டி அலையும் "ஆயாவிற்கு" இப்பொழுது மௌசு. கூட இருந்து சொம்படிக்கும் அல்லக்கைகளுக்கு இது நல்ல நேரம். ஜெவை அடக்கம் செய்தவுடன் பாலூத்தினாங்களோ இல்லையோ சொம்பை எடுத்துக்கொண்டு போயஸ் தோட்டம் சென்று மினிம்மாவிற்கு ஊத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த விசுவாசாத்திற்கு கிடைத்த முதல் ரொட்டித்துண்டு வளர்மதிக்கு, தமிழ்நாடு பாட நூல் கழகம் மற்றும் கல்வி சேவைகள் கழகம்  தலைவர் பதவி.  தம்பிதுரை, ஒ.பி.எஸ், மட்டும் இதர அல்லக்கைகள் கைகட்டி  வாய்பொத்தி அம்மா நீங்க வரணும்மா என்று கதறிய பொழுது பின்னால் நின்ற வளராதமதிக்கு ஒரு பதவி.

இதனால் என்ன சொல்கிறது ஆயா கோஷ்டி "விசுவாசம் விசுவாசம்" அதை எங்களிடம் காண்பித்தால் பதவி தேடி வரும், இல்லையென்றால் சம்பாதிக்க  வழி இல்லை.  எதிர்த்தால் புஷ்பா புருஷன் கதிதான்.

இப்பொழுது ஏன் வெள்ளையும் சொள்ளையுமா ஒரு கூட்டம் அங்கே நிற்கிறானுங்கன்னு புரியுது. அங்கே நின்னால் மட்டும் போறாது அம்மா நீங்க வர்னும்மானு கண்ணீர் விட்டு அழனும். சரி விடுங்க நம்ம சொர்ணாக்கா விஷயத்திற்கு வருவோம். இந்த வளர்மதியும் கோகுல இந்திராவும்தான் ஜெ ஜெயிலுக்கு சென்ற பொழுது வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதார்கள். ஆனால் இவர்கள் போட்ட ஆட்டத்தில் ஜெ இந்த தேர்தலில் சரியான தொகுதிகளைக் கொடுத்து வச்சி செஞ்சுட்டாங்க.

ஆட்டையை போட்ட கையாச்சே சும்மா இருக்குமா? அதான் ஜெ இருந்த வரைக்கும் கம்முன்னு இருந்துவிட்டு இப்பொழுது கை அரிக்க ஆரம்பித்தவுடன் மினிம்மா பின்னாடி சுத்துது.

சொர்ணா அக்காவிற்கும் கல்விக்கும் என்ன சம்பந்தமுன்னு கப்பிதனமா கேள்வியெல்லாம் கேட்காம அடுத்த தேர்தலில் காசு வாங்கி யாருக்கு ஒட்டு போடுவதுன்னு யோசிக்கிறான் தமிழன்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 4 January 2017

கலக்கல் காக்டெயில் -176

"மினி"ம்மா நாடகங்கள் 

டிசம்பர் ஆறாம் தேதிக்குப் பிறகு தமிழ் நாட்டு அரசியலில் புதுபுது நாடகங்கள் நாளொருமேனி பொழுதொரு வண்ணமுமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

கட்சியைத தோற்றுவித்தவர் இறந்த பொழுது சட்டசபையில் குடுமிப்பிடி சண்டையிட்டு கட்சி இரண்டாகி இலையை தொலைத்து சேவல் புறா எல்லாம் அடித்து 14 ஆண்டு காலம் வனவாசம் இருந்தவரை அரியணை ஏற்றினார்கள்.

இந்த முறை கட்சியைக் காத்தவர் நிரந்தரமாக உறங்கிவிட்டார், இப்பொழுது கட்சியையும் ஆட்சியையும் பிடிக்க ஒரு கொள்ளைக்கூட்டம் காத்திருக்கிறது. முதலில் கட்சியை பிடிக்க முதல் கட்ட காட்சிகள் அரங்கேறின. இனி ஆட்சியை பிடிக்க அடிமைகள் அன்றாடம் தோட்டத்திற்கு வரவழைக்கப்பட்டு காலில் விழுந்து கதற வைக்கப்படுகின்றனர்.

அவங்களுக்கு இஷ்டம் இல்லையாமா...........ஏதோ இவங்க அழுவுறதுனால ஏத்துக்கப்போறாங்களாமா............

மினிம்மாவை பொம்மையாக்கி ஆட்டுவிக்க பின்னால் ஒரு கூட்டம் காத்திருக்கிறது.

ஆட்டுவித்தால் ஆடுகிற ஆள் மாதிரியும் மினிம்மாவை தெரியவில்லை..........இன்னும் நான்கரை ஆண்டுகளில் என்ன என்ன நடக்கப் போகிறதோ?.............

வருமான வரி சோதனைகள் சொல்வதென்ன? 

ருமான வரி  அதிகாரிகள் சில நாட்களாக தமிழ்நாட்டில் டேரா போட்டு ரவுண்டு கட்டி அடித்துக்கொண்டிருக்கிறார்கள். பொதுப்பணித்துறை காண்டிராக்ட்டர் முதலில் சிக்கினார். அவரை தொடர்ந்து தலைமை செயலர் என்று சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் வளைத்தது வருமான வரித்துறை. இதற்கெல்லாம் அரசியல் சாயம் பூசப்பட்டாலும் பிடிபட்ட தொகையும் தங்கமும் பிரமிக்க வைக்கிறது. என்னதான் வழக்கு வாய்தா என்று இவர்கள் இழுத்தடித்து ஜாமீனில்வெளியே இருந்து சேர்த்துவைத்த துட்டை அனுபவித்தாலும் போகும்பொழுது என்னமோ கொண்டு செல்லப் போவதில்லை.

எல்லோரையும் தன் கால்களில் விழவைத்தவர் தான் கால்களைக்கூட கொண்டு செல்லவில்லை என்ற பஞ்சாயத்து இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

ரசித்த கவிதை 


அந்தக் கூட்டத்தில்
யாரும் யாரைவிடவும்
கீழோ மேலோ இல்லை

மிகை நடிப்பில்
மிருதுவாகக் காட்டிக்கொள்வதில்
ஒப்பனையில்
ஒப்பாரிவைப்பதில்
யாரும் யாருக்கும்
கூடுதலோ குறைவோ
இல்லை

ஒரு பொருளை
ஒரு பதவியைப்
பறிப்பதிலும்
பங்கிட்டுக் கொள்வதிலும்கூட
சமமாகவே இருக்கிறார்கள்
சகலரும்

பாதத்தில் கிடக்க
பாவம்போல் நடக்க
சொன்னதைச் செய்ய
சூழலுக்கேற்ப ஒத்தூத
பழகியிருக்கிறார்கள்
ஒருவரைப்போலவே
இன்னொருவரும்

இப்போதுள்ள சிக்கல்
ஒரே மாதிரியானவர்களில்
ஒருவரைத் தேர்ந்தெடுப்பது
காத்திருப்போம்.........
எல்லோரும்  சேர்ந்து
யாரோ ஒருவரைத்
தள்ளத்தானே போகிறார்கள்
குழியில்

அல்லது

எல்லோரும் சேர்ந்து
ஒருவரைத் தள்ள
பறித்துகொண்டிருக்கிறார்கள்
குழியை..

நன்றி: யுகபாரதி


தமிழ் சினிமா 


சமீபத்தில் வந்த தமிழ் நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனித்து நிற்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன்பு "அவர்களும் இவர்களும்" படத்தில்அறிமுகமாகி கிட்டத்தட்ட 27 படங்களில் நடித்துள்ளார்.  அடுத்து இரண்டு மூன்று படங்களில் நடித்தப் பிறகு "அட்டக்கத்தி" படத்தின் மூலம் பிரபலாமானார். பின்பு ரம்மி, காக்கமுட்டை படங்களில் இவருடைய திறமை பாராட்டப்பட்டது, சொந்தக்குரலில் தமிழ் பேசி நடிக்கும் ஒரு நல்ல நடிகை. சன் தொலைக்கட்சியில் அசத்தப்போவது  யாரு நிகழ்ச்சி தொகுப்பாளினியாகத் தொடங்கி திரைத்துறையில்  நுழைந்து நல்ல முன்னேற்றம். தமிழ் திரையுலகில்  கவனிக்கப்பட வேண்டியவர்.



Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 3 January 2017

நெட்டிசன்களும், வாட்சப் அலப்பறைகளும் மற்றும் ட்விட்டர் டுபாகூர்களும்

ன்றைக்கு பிறந்த குழந்தை முதல் பல்லு வைத்த (போன) கிழங்கள் வரையில் வாட்சப் தெரியாத ஆளில்லை. இதற்கு ஸ்மார்ட் போன் இன்றியமையாதது என்று தெரிந்த சாம்சங்குகளும், ஹெச்டிசி களும் சந்தையில் சல்லிசாக அள்ளிவிட்டுருகிறார்கள். ஆதலால் அடுத்த வேளைக்கு சோறு இருக்கோ இல்லையோ எல்லோரிடமும் மேற்படி ஐட்டம் உண்டு. இதில் கொடுமை என்னவென்றால் இந்த வாட்சப் தொல்லை விடாமல் நம்மை விரட்டி அடிக்கும், காலையில் எழுந்தவுடன் காபி என்ற காலம் போய்  இப்பொழுது விழிப்பதே வாட்சப் முகத்தில்தான்.

எல்லோரும் ஒரு இருபது இருப்பத்தைந்து குழுக்களிலாவது சேர்த்துவிடப்பட்டிருப்பார்கள், கவனிக்க!! சேர்ந்த இல்லை, சேர்த்துவிட. முதலில் நல்லபடியாகத்தான் தொடங்கும், நான் நலம், நீ நலமா, அம்மா எப்படி ஆட்டுக்குட்டி எப்படி என்று தொடங்கும். இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. பிறகுதான் இருக்கிறது.

இந்த வாங்கிப்போட (forward) ஒரு கூட்டம் இருக்கிறது, இவர்கள் வேலை ஒரு குழுவிலிருந்து வரும் தகவலை அப்படியே அடுத்த குழுவிற்கு தள்ளிவிடுவது. இவர்கள் பெரும்பாலும் அந்த தகவலை படிக்கமாட்டார்கள்.  இந்த வருடம் பிப்ரவரி மாதம் ஒவ்வொரு கிழமையும் நான்குமுறை வரும் இதுபோல் இனி 823 ஆண்டுகள் கழித்துதான் வரும் இதற்கு பெயர் பணப்பை (Moneybag) இந்த தகவலை நீங்கள் வாங்கி எட்டு குழுவிற்கு அனுப்பினால் உங்களுக்கு பணம் கொட்டோகொட்டு என்று கொட்டும் (எச்சரிக்கை: வருவாய்த்துறை ரெய்டு வர வாய்ப்புண்டு) என்று அடித்துவிடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் படித்த அறிவுஜீவிகளாக இருப்பார்கள். தகவலை சரிபார்க்கவே மாட்டார்கள், அடேய் சிப்சு வருடா வருடம் லீப் வருடம் தவிர இப்படிதான் வருமென்று சொல்ல தோன்றும் சபை நாகரீகம் கருதி கம்மென்று இருக்கவேண்டும். பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நம்நாட்டு தேசியகீதம்தான் உலகில் சிறந்தது என்று யுனெஸ்கோ நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது என்று தங்களது தேசபக்தியை மெச்சி சொரிந்துகொள்(ல்)வார்கள்.

இது இப்படி இருக்க பருவமழை காலத்தில் மற்றுமொரு புயல் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது, கிட்டத்தட்ட நாலாயிரம் சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நாசா அறிவுத்துள்ளது. (அடேய் ஏன் டொமேட்டோ நாசா எங்கேடா நடுவில் வந்தது என்று நடு மண்டையில் போட தோன்றும்) ஆதலால்  எல்லோரும் உடனடியாக சென்னையை விட்டு வெளியேறுங்கள். இதற்காக கோயம்பேட்டில் கோடி கோடியாக பேருந்துகள் தயார் நிலையில் இருக்கின்றன என்று பெரிசு நெஞ்சுகளில் புளியை கரைப்பார்கள். இதை மறக்காமல் அடுத்த வருடமும் போடுவார்கள்.

பிறகு மீம்ஸ், இதையம் சலிக்காமல் வாங்கிப்போட்டுக்கொண்டு இருப்பார்கள். இதில் தேவர்மகன் ஸ்டில் கட்டாயம் உண்டு, எந்த சூழ்நிலையிலும் சும்மா நச்சென்று உட்காரும், இதைதவிர அங்கே ஒரு கவுண்டர் இங்கே ஒரு வடிவேலும் என்று கலை!! கட்டி அடிக்கும்.

அடுத்தது ட்விட்டர் இங்கு பெரும்பாலும் கடலை வியாபாரமும் அணில் ஆமை சண்டைகளும் நடக்கும், சண்டை என்றால் இந்தியா பாகிஸ்தான் சண்டையல்ல. இது அதைவிட மோசம். இந்த அணில் குஞ்சுகளும் ஆமை குஞ்சுகளும் சகட்டுமேனிக்கு திட்டிக்கொள்வார்கள். உலகில் உள்ள அத்துனை கெட்டவார்த்தைகளையும் புழுத்த நாய் குறுக்கே போக முடியாதபடி பிரயோகிப்பார்கள். இதில் சில பிரபலங்களும் சேர்ந்துகொண்டு அவர்களும் தங்கள் பங்கிற்கு இன்னும் கேவலமாக திட்டி திரும்ப வாங்கிக்கட்டி சிலநாள் காணாமல் போவார்கள். இங்கு ஒரே ஒரு நகைச்சுவை விஷயம் இந்த டப்ஸ்மேஷ்கள். அங்கங்கு சில நல்ல முகங்கள் தென்படும்.


மற்றுமொரு கலக்கல் இடம் மூஞ்சிபுத்தகம் அவனவன் ஸ்டேட்டஸ் போட்டு கொல்வான்............காலையில மணி ஒரு ஆறிருக்கும், பொண்டாட்டி குளிச்சிட்டு வந்து தலை நிறைய மல்லிகைப்போவோட என்ன உசுப்பினா...........நான் காபி குடிச்சிட்டு கக்கா போனேன் ....என்று படம் வரைந்து பாகங்கள குறிப்பானுங்க.

இங்கயே இன்னுமொரு கூட்டம் மோடிய செல்லாக்காசு என்று போட்டு தாளித்து எவனாவது மோடியின் செயலில் சில நன்மை.... என்று ஆரம்பித்தால் அவனை "தேஷ்பக்தாஸ்" என்று கெட்டவார்த்தையில் திட்டுவது போல நினைத்து இறுமாந்து போவாவர்கள்.

 எது எப்படியோ இந்த சமூக வலை தளங்கள் பார்க்கமுடியவில்லை  என்றால் டாஸ்மாக் மூடிய குடிமகன் நிலைபோல் இன்று தனிமனிதன் தவிப்பது காலம் செய்த கோலம்.


கும்மாச்சி 

Follow kummachi on Twitter

Post Comment