Pages

Thursday, 26 January 2017

கலக்கல் காக்டெயில் -177

வி.ஐ.பி பாஸ் 

ன்று சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் ஒ.பி.எஸ் கொடியேற்றி வைத்தார். சுதந்திரம் அடைந்த நாள் முதல் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் கவர்னர் கொடியேற்றி வைப்பதுதான் மரபாக இருந்தது. ஆனால் சிலவருடங்களுக்கு முன்பு இந்த மரபை மாற்றியவர் முன்னாள் முதல்வர் கலைஞர், அதன்படி சுதந்திர தின விழாவில் முதலமைச்சரும் குடியரசு தின விழாவில் கவர்னரும் கொடியேற்றுவது மரபாக இருந்தது. ஆனால் இந்த குடியரசு தின விழாவில் கவர்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் கலந்து கொள்வதால் அந்த பொறுப்பு ஒ.பி.எஸ் டம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விழாவிற்கு கொடுக்கவேண்டிய வி.ஐ.பி பாஸ்கள் மன்னார்குடி வகையறாக்களுக்கு கொடுக்கப்படும் அவர்களும் முன் வரிசையில் வந்து தங்களது ஆளுமையை காண்பிக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் நடந்தது வேறு..........

ஓ.பி.எஸ் தனது மனைவி சகிதமாக அமர்ந்து குடியரசு தின நிகழ்ச்சிகளை கண்டு களித்தார்...............நான் முதலமைச்சரா இருப்பது உங்களுக்கு எரியுதுனா.............நான் இருப்பேன்டா கெத்தா..........ஸ்டைலா.........என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

அவருடைய செயல்பாடுகள் இப்பொழுது மக்கள் ஆதரவைப் பெறுகின்றன. இவரை மறைந்த முதல்வர் சரியாக உபயோகப்படுத்தவில்லையோ என்றே தோன்றுகிறது.

PETA ஒழித்தவை

பீட்டாவின் குறிக்கோள் என்ன என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே நாட்டு மாடுகள் அழிவை தொடங்கிய அவர்கள் நாட்டு நாய்களையும் ஒழிக்கும் வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள்.  தமிழ் நாட்டில் கோம்பை, கன்னி, ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை என்று நான்கு  நல்ல நாட்டு நாய் வகைகள் உண்டு. இவற்றின் இனப்பெருக்கத்திற்காக சென்னை சைதாப்பேட்டையில் ஆராய்ச்சி மையமும், இனப்பெருக்கக்கூடமும் செயல்பட்டு வந்துகொண்டிருந்தது. அதை நாய்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றன, சுகாதார வசதிகள் இல்லை என்று வாதாடி அதை இழுத்து மூடிவிட்டன. அதன் மூலம் வெளிநாட்டு வகைகளான, லாப்ரடார், ராட்வீளர், ப்க் (PUG) வகை நாய்களை இறக்கியாகி விட்டது. இதன் வர்த்தக உள்நோக்கம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நாட்டு நாய்கள் உணவு நமது எளிய வகை உணவுகள்தாம். ஆனால் வெளிநாட்டு நாய்களுக்கு ஸ்பெஷல் மீல்ஸ்!!!! கொடுக்கவேண்டும். இதன் வியாபார விஸ்தாரணம் அளவிட முடியாது. அதன் விளைவுதான் சூப்பர் மார்கெட்களில் PEDIGREE  இத்யாதி வகைகளை பார்க்கலாம்.

ரசித்த கவிதை

கைச்செலவுக்கும் பணமற்ற கடவுள் 

ஓய்வூதியத்தில் ஒதுக்கிவைத்த 
சிறுதொகையை எடுக்க விரைகிறார்
ஏ.டி.எம் படியேறுகையில் பாதம் தடுமாற
தாங்கிப்பிடித்த தாடிக்கார யுவனுக்கு
ஆங்கிலத்தில் நன்றி சொல்கிறார்
வரிசைகண்டு மலைத்து வாசலில் நிற்கையில்
வழுக்கையில் விழும் வெய்யிலை 
குடைகொண்டு தடைசெய்கிறார்
கண்கள் பூத்துக் காத்திருந்து கடைசியில் 
தனக்கும் முந்தைய வாடிக்கையாளரோடு
இருப்பின் பரிவர்த்தனை முடிவுபெற
இறுதியில் முகம் சுருக்கிச் சபிக்கிறார் 
ஆற்றாமை பொங்க
"உலகம் அழியட்டும்".    நன்றி: ஸ்ரீதர்பாரதி

தமிழ் சினிமா

ரித்விகா

சமீபத்திய தமிழ் படங்களில் வந்து கொண்டிருக்கும் வளரும் நட்சத்திரம். பாலாவின் பரதேசியில் முதலில் பார்த்த நியாபகம், ஆனால் பிறகு வந்த மெட்ராஸ் படத்தில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். சமீபத்தில் கபாலியில் சூப்பர் ஸ்டாருடன்...முக்கியமாக  சொந்தக்குரலில் தமிழ் பேசி நடிக்கும் சென்னை பெண்...





8 comments:

  1. நல்ல காக்டெயில்.... நன்றி.

    ReplyDelete
  2. கதம்பம் நன்று
    குடியரசு தின வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  3. OPS பற்றிய உங்கள் கருத்தை 100% வரவேற்கிறேன்

    ReplyDelete
  4. #சொந்தக்குரலில் தமிழ் பேசி நடிக்கும் சென்னை பெண்...#
    ஆனால் பெயர் மட்டும் ரித்விகா ,தமிழ்ப் பெயரா என்று மட்டும் கேட்டுடாதீங்க :)

    ReplyDelete
  5. நீண்ட நாட்கள் கழித்து காக்டெயில்... தொடர்க...

    ReplyDelete
  6. கதம்பச் செய்திகளை ரசித்தேன்.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.