இத்தனை நாட்களாக ஓ.பி. எஸ் என்றால் அம்மா இல்லாத போது சி.எம் ஆக வந்து நாற்காலியில் அமர்ந்துவிட்டு அம்பேலாவார். ஒன்றும் செய்ய மாட்டார். அம்மா பதவியில் இருந்தால் ஒரு நாற்பது டிக்ரீ கோணத்தில் முன்னால் குனிந்து பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் நாள் தமிழ் நாட்டு பட்ஜெட் படிப்பார். அதில் வார்த்தைக்கு வார்த்தை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆணைப்படி என்று தவறாமல் சொல்லிவிட்டு மிச்சர் சாப்பிடப் போய்விடுவார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கியவுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட கைக்குழந்தை முதல் கைத்தடி வைத்த பெரிசுகள் வரை தவறாமல் ஓ.பி.எஸ் மிச்சர் தின்னும் பதாகைகளை தாங்கி ஏறக்குறைய அவரை மிச்சர் மாமா என்று உலக காப்புரிமை வாங்கிவிடும் அளவிற்கு செய்துவிட்டார்கள். இதைக் கண்ட ஒரிஜினல் மிச்சர் மாமா (நாட்டாமையில் நடித்தவர்) காண்டானதாக கேள்வி.
இதற்கான காரணம் போராட்டம் தொடங்கிய அன்று அவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்குகொண்டு ஆயிரத்தில் ஒருவன் பார்த்துக்கொண்டு இருந்தார். ஆதலால்தான் போராட்டக்காரர்களும் வரச்சொல் வரச்சொல் மிச்சர் மாமாவை வரச்சொல் என்றும் சின்னம்மா சின்னம்மா ஒ.பி.எஸ் எங்கேம்மா என்று ஏலம் விட்டுக்கொண்டு இருந்தார்கள்.
ஆனால் போராட்டத்தின் வீர்யத்தை உணர்ந்த அவர் உடனடியாக பிரதமரை சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய அவசியத்தை உணர்த்தி, பின்பு டில்லியிலேயே ஒரு நாள் தங்கி சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்து மேலும் மூன்று அமைச்சகங்களின் செயலர்களை சந்தித்து பேசி சட்ட திருத்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார். அதில் ஒரு செயலர்தான் ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு போடப்பட்ட தடை சட்டத்தில் இருந்த ஓட்டைகளை வைத்து நீங்கள் இப்படி செய்தால் இனிமேல் யாரும் தடைபோட முடியாது என்று அறிவுரை கூறியிருக்கிறார். அதெல்லாம் முடிந்த பின்புதான் செய்தியாளர்களை சந்தித்து இனி நல்லது நடக்கும் என்று நம்பிக்கையளித்தார். இருந்தும் கூட போராட்டக்காரர்களுக்கோ நமக்கோ நம்பிக்கை ஏற்படவில்லை. இவர் பிரதமரை பத்து நிமிடம் சந்தித்ததில் இரண்டு பேரும் சேர்ந்து மிச்சர் சாப்பிட்டு இருப்பார்கள் என்று பரவலாக பேசப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள் உங்களை சமூக தளங்களில் கிண்டல் செய்கிறார்களே என்று வினவிய பொழுது அவர் சிரித்துக்கொண்டே பொதுவாழ்வில் இதெல்லாம் சாதாரணம் என்று கவுண்டமணி ரேஞ்சில் சொல்லி அசத்தியது அவரைப்பற்றிய கருத்தை மாற்றிக்கொள்ள செய்தது.
சட்டசபை கூடிய முதல் நாள் கவர்னர் உரைக்குப்பின் மறைந்த முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி சட்ட சபை முடிக்கப்பட்டது, அதான் மரபும் கூட, ஆனால் மாலை சட்டசபையைக் கூட்டி சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்றிய வேகத்தைக் கண்டு இனி இவர் மிச்சர் மாமா இல்லை ஊர் மெச்சும் மாமா என்று மக்கள் தங்கள் என்னத்தை மாற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
இருந்தாலும் நேற்றைய காவல்துறை செயல்பாடு குறிப்பாக காவலர்களே சில இடங்களில் ஆட்டோக்களுக்கு தீ வைத்ததும், மற்றும் சிலவீடுகளில் பெண்காவலர்கள் தீ வைத்ததும் ஒரு கரும்புள்ளியே.
இதை அவரின் மதிப்பு கூடுவதைக்கண்டு எரிச்சலடைந்த கூட்டத்தின் உள்குத்து வேலையாக இருக்கும் என்ற செய்திகளை நம்பாமல் இருக்க முடியவில்லை.
ஓ.பி.எஸ் இப்பொழுது தனது அதிகாரத்தை உணர்ந்து இருப்பார், இவர் இப்படியே தொடர்ந்தால்...........அடுத்து அவரை காலி செய்து நாற்காலி பிடிக்க காத்துக்கொண்டு இருப்பவர்கள் மிச்சர் பார்ட்டி ஆவது உறுதி.

4 comments:
எப்படி இருக்கும் இவரது ஆட்சி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்... - அப்படி இவரைத் தொடர்ந்து ஆட்சி செய்ய மற்றவர்கள் அனுமதித்தால்!
இந்திய மத்திய அரசம்
தமிழ்நாடு் மாநில அரசும்
தோல்வியை ஒப்புக்கொண்டதால்
மாணவர் எழுச்சியை அடக்கினரோ!
மாணவர் எழுச்சி மறுவடிவம் எடுத்தால்
இந்திய மத்திய அரசம்
தமிழ்நாடு் மாநில அரசும்
என்ன தான் செய்ய முடியும்?
நண்பரே முதல் படம் கோணலாக இருக்கிறதே... உங்களுக்கு நேராக போடத்தெரியாதா ?
கைக்குழந்தை முதல் கைத்தடி வைத்த பெரிசுகள் வரை தவறாமல் ஓ.பி.எஸ் மிச்சர் தின்னும் பதாகைகளை தாங்கி ஏறக்குறைய அவரை மிச்சர் மாமா என்று உலக காப்புரிமை வாங்கிவிடும் அளவிற்கு செய்துவிட்டார்கள். இதைக் கண்ட ஒரிஜினல் மிச்சர் மாமா (நாட்டாமையில் நடித்தவர்) காண்டானதாக கேள்வி.....Super
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.