Friday, 21 July 2017

மன்மத வம்பன், மொத்தமும் வில்லன், உலக்கை நாயகன்.....ஒன்டிக்கி ஒண்டி வாறியா?

மல்ஹாசன் தற்போதைய ஆட்சி ஊழல் நிறைந்தது என்று சொல்லப்போக ஆளுங்கட்சி அமைச்சர்கள் முதல் பெஞ்சு தட்டி அல்லக்கைகள் வரை அவரை வசைபாடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக
 இன்று நமது எம்.ஜி.ஆரில் கமலை வசை பாடி ஒரு பதிவு இட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ள அருஞ்சொட்கள்தான் தலைப்பில் உள்ளவை.




ஏழைக்குப் பயன்படாத இந்த குரோட்டன்ஸ் செடி எளியோருக்குப்பயன்படும் கீரையைப் பார்த்து பழிக்கிறது! 'உன்னால் முடியும் தம்பி' என்று இவர் உதட்டளவில் வாயசைத்துப்பாடியதை, இளையோர் கரத்தில் மடிக்கணினி கொடுத்து உலகை உள்ளங்கைக்குள் உட்கார வைத்த ஒப்பில்லா கழகத்தை முப்பொழுதும் தப்பென்று பழிக்கிறார். மஞ்சள் துண்டு தயவு கூடவே, ஒன்றே முக்கால் லட்சம் கோடி கொள்ளையர்க்கு ஒத்தடமும் கொடுக்கிறார். மஞ்சள் துண்டின் தயவில் மக்கள் திலகத்தின் இயக்கத்தை வன்மத்து வார்த்தைகளால் வசைபாடி திரிகிறார்.

புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவியின் புகழ்மனத்து இயக்கத்தை புண்படுத்தி மு.க.வை மகிழ்விக்க முன்னோட்டம் பார்க்கிறார். ஓடுவேன் என்றார் ஒரு படம் ஓடாவிட்டாலே ஓடுவேன் நாட்டைவிட்டு என்ற இந்த ஒப்பாரித் திலகம் குகையில் சிம்மம் இல்லை என்றதும் ஒத்தைக்கு ஒத்தை வர்றியா என்பதாக ஊளையெல்லாம் இடுகிறார். காவி மீது பாசம் கருப்புச் சட்டை போட்டுக்கிட்டு சாதிக்கு ஆலவட்டம் வீசுகிற சாடிஸ்ட் கோஷம் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிவைத்து காவி மீதும் பாசம். காவேரி, முல்லைப் பெரியாறு, மீத்தேன், கெயில், நெடுவாசல், 'நீட்...' என்றெனும் தமிழர்தம் உரிமை என்றால் மட்டும் மன்மத வம்பன் போடுவதோ மவுன விரத வேஷம். உலக்கை நாயகன் இந்த உலக்கை நாயகனின் விமர்சன எல்லையெல்லாம் கழகத்தைப் பழிக்கிற ஓரம்ச திட்டம் மட்டும் என்றால் அதனை உலகம் சுற்றும் வாலிபனின் இயக்கம் ஓட ஓட விரட்டும்.



ஊழல் நிறைந்த ஆட்சி என்று கமல் சொன்னதைத்தான் ஓட்டுபோட்ட நாளிலிருந்து மக்கள் காசுவாங்கி ஒட்டு போட்ட பாவத்திற்காக சொல்லாமல் அடுத்த தேர்தலை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆளும்கட்சிதான் அவரை வசை பாடுகிறது என்றால் "ஏன் சங்கத்து ஆள எவண்டா அடிச்சது" என்று எலும்பு நிபுணரும் டுமீளிசையும் கமல்மீது சேற்றை வாரி இறைப்பதாக நினைத்து தாங்களே சாக்கடையில் முங்கி எழுந்திருக்கின்றனர்.

ஆளுங்கட்சி அல்லக்கைகள் ஒருபடி மேலே போயி அவரது 
 சொந்த வாழ்க்கையை விமர்சிக்கின்றனர். அதுவும் ரெட்போர்ட்டான்
 சொல்லுவதுதான் முரண். இவர் கட்டியவளை விட்டு செட்டப்புடன் இருப்பதாக கட்டியவள் ஒற்றை ரோசாவிடம் முறையிட்டதால் அமைச்சர் பதவிய இழந்தவர்.

எது எப்படியோ நல்ல ஷோதான். 


Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

KILLERGEE Devakottai said...

கேனப்பயல்க ஊருல கிறுக்குப்பயல்க ஆட்டம்தான்...

கும்மாச்சி said...

அதானே

வெங்கட் நாகராஜ் said...

அரசியல் - கேடு கெட்டுப் போய்விட்டது....

கும்மாச்சி said...

உண்மை

Anonymous said...

Kaasu vangittu vote potaanungala nalla anubavikattum.

வருண் said...

எல்லாம் சரி, தமிழ்நாட்டில் மு க, எம் சி ஆர், செயா ஆட்சியின் போதெல்லாம் ஊழல் இல்லையா? என்ன இப்போ திடீர்னு ஊழல் மண்ணாங்கட்டினு?

அ தி மு க ஆட்சியை ஊழல் ஆட்சினு சொன்னால, அ தி மு க காரன் பொங்கி எழத்தான்ன் செய்வான். இதிலே என்ன பெரிய தப்பு? நல்லாத்தான் எழுதியிருக்கான் அவன். அதிலென்ன குறை????

அவன் அல்லக்கைனா? நீரும், கமலஹாசனும்கூட அல்லக்க்கைதான். இல்லையா?? ஏன் இல்லை?

பிக் பாஸ் போன்ற கேலமான ஷோ நடத்துற ஹோஸ்ட்ட்க்கு சேரி பத்திஎல்லாம் விமர்சிக்க என்ன தகுதியிருக்கு? காசுக்காக இவர் செய்ற இந்தத்தொழில் என்ன புனிதமானதா என்ன??

சரி, ஜெயா ஆட்சியின் போது ஏன் ஊழல் பத்தி பேச்சாமல் பொத்திக்கிட்டு இருந்தாரு? இவர் பார்ப்பான், அவர் பாப்பாத்தி என்பதாலா? இல்லைனா ஏன்? பயம்ம்மா?

குன்ஹா தீர்ப்பு வந்தபோது ஒண்ணுமே பேசவில்லை? நல்ல நியாயமான தீர்ப்புனு சொல்லியிருக்கலாமே? அப்படி என்ன பயம்?

சங்கராச்சார்யா விடுவிக்கப் படும்போது "நீதி செத்துவிட்டது"னு சொல்லியிருக்கலாமே?

இப்போ ஒரு பச்சைத் தமிழன் தமிழ்நாட்டை ஆள்றான், உடனே அவனைப் பார்த்தால் மட்டமாத் தெரியுது?

கமலைச் சொல்லி என்ன? காலங்காலமாக பார்ப்பன அடிமையாக வாழ்ந்ந்துவரும் திராவிட கைக்கூலிகளை சொல்லணும்.

ஸ்ரீராம். said...

அரசியல்வாதிகளுக்கு தங்களுக்குப் போட்டியாக யார் வந்தாலும் ஒரு பதட்டம் வரும், எங்கே அவங்களுக்கு ஆதரவு கூடிடுமோன்னு...

sarathy said...

தமிழ் நாடு வளர வாய்ப்பே இல்லை என்று தோண்றுகிறது, இந்த அரசியல் சூழ் நிலையில்!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.