சமூக ஊடகங்களின் பெருக்கம் ஒருமைப்பாட்டிற்கு வைக்கும் வேட்டு. என்னதான் மூஞ்சி புத்தகம், வாட்சப், ட்விட்டர் போன்றவை இழந்த, மறந்த சுற்றங்களையும், புதிய நட்புக்களையும் உண்டாக்குவது போல தோற்றம் கொடுத்தாலும் உண்மையில் நட்புகள் நாட்பட நாட்பட தேவையில்லாத விவாதங்களால் முறிந்து போகின்றன. கருத்து சுதந்திரம் ஒரு வித பொருப்பின்மையோடு கரகம் ஆடுகிறது. என்ன புலம்பல் என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும்.
சில வருடங்களுக்கு முன்பு நான் சென்னையில் வேலை செய்த கம்பனி பெயரில் ஒரு வாட்சப் குழுமம் தொடங்கினேன். ஏனென்றால் முப்பது வருடங்களுக்கு முன்பு எங்களது இயந்திர வாழ்க்கையை அங்கே தொடங்கியவர்கள் இன்று காலப்போக்கில் அருப்புக்கோட்டையிலிருந்து அண்டார்டிக்கா வரை பரவிவிட்டோம். தூரங்கள் நம்மை பிரித்தாலும் மனதளவில் ஒன்று சேர்ந்திருப்போம் என்ற நப்பாசையில்!!! தொடங்கப்பட்ட குழுமம். ஆரம்பித்து சில வருடங்கள் மிகவும் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. குடும்ப நலன்களை பகிர்ந்து கொண்டோம், புதிய வேலை வாய்ப்புகளை குழுமத்திற்கு தெரிவித்தோம். ஏன்? அடுத்த சந்ததிகளை வாழ்க்கை பயணத்தில் ஒன்று சேரவிட்டோம், சிலர் காதலித்தார்கள், சிலர் கைப்பிடித்தார்கள்.
ஆனால் தற்பொழுது குழுமத்தில் அரசியல், பக்தி, பகுத்தறிவு என்ற கிருமிகள் அழைப்பில்லாமல் நுழைந்து மதம், ஜாதி, ஆரியம், திராவிடம் என்று நட்புக்கூட்டை கலைத்துக்கொண்டிருக்கிறது. எத்துனை முறை சம்பந்தப்பட்டவர்களிடம் விண்ணப்பம் வைத்தாலும் நிறுத்துவதாக இல்லை.
அனைவரையும் இணைப்பதற்கு ஒரே காரணம் கொண்டு இணைந்தோம், ஆனால் சில பிரிவினைவாதிகள் பல காரணங்களை வைத்து கூட்டை கலைத்துகொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுது "சமூக ஊடங்களின்" பணி செவ்வனே நடக்கிறது.