Thursday, 31 May 2018

வாழ்க்கையே போராட்டம்.......

ஜல்லிக்கட்டில் தொடங்கிய போராட்டம்
அம்மாவும், ஐய்யாவும் அடங்கியவுடன்
கடற்கரையில் மையம் கொண்டு
அவுனியாபுரம், அலங்காநல்லூர்
ஆதரவையும் அள்ளிக்கொண்டு
அடங்காத வன்முறையில்
அடக்கி வைக்க அடுத்த
போராட்டம் தொடங்காமல்
கூவத்தூர்  கூத்தாடிகள் கூத்தில்
கூண்டில் அடைக்கப்பட்டது.


அடுத்த காரணம் "காவிரி"
கைகொடுக்க இடையே
நிர்மலாதேவி, கவர்னர் என
ராஜ்பவன் பக்கம் கரை ஒதுங்க!!

அப்போது வந்த ஐபிஎல் சேப்பாக்கம்
என தமிழீன தலைவர்கள் கையில்
தடியடிபட்டு, அடுத்த கட்ட
நகர்வை எட்டியது போராட்டம்!!

இடையே வந்த சேகர்களும், ராஜாக்களும்
திசை திருப்ப, போராட்டம்
தூத்துக்குடி பக்கம் வலுப்பெற
நூறாவது நாள் கலவரத்தில்
அதகளமாக...................
அரசியல் அனல் அடங்கவேண்டாம்
அடுத்த கட்டமாக "சேலம் புறவழியில்"
மூட்டப்பட காத்திருக்கும் நேரங்களில்
இணயம், குளச்சல் என
போராட்ட ஜோதி கொழுந்துவிட்டு
எரியட்டும்!!
வாழ்க்கையே போர்க்களம்
போராட்டம் அதில் நிரந்தரம்.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 30 May 2018

ஜாதி விளையாட்டுக்கள்

தற்பொழுது இணையங்களில் ஜாதி வெறி தலை விரித்தாடுகிறது. இதை படித்தவர்களே செய்யும் பொழுது மற்றவர்கள்களை குறை சொல்லி என்ன பயன்?

சமீபத்தில் நடந்த ஐ.பி. எல் கோப்பையை வென்ற குழு கோப்பையை எடுத்துக்கொண்டு சென்னை வந்தடைய, அதை ஏதோ கோவில் வைத்து பூஜை செய்ததாக இணையங்களில் புகைப்படங்கள் வந்தன. அதை வைத்துதான் இணையங்களில் ஜாதி பொங்கல் படையல். அந்த பதிவை ஒருவர் முகநூலில் பதியப் போக, ஒருவர் அது பார்ப்பான் விளையாட்டுப்பா? அப்படிதான் செய்வானுங்க  என்று தனது அடக்கமான பதிவை பதிந்துவிட்டு அமைதியானார்.

இன்னுமொருவர் ஒரு படி மேலே போயி, ஆரிய சூழ்ச்சியால் திராவிட குழுக்கு வரவேண்டிய கோப்பை தட்டி பறிக்கப்பட்டது என்று பொங்கினார்.

அடப்பாவிகளா விளையாட்டுப் போட்டிகளில் கூட உங்க ஜாதி வெறியா? நடத்துங்க. இந்த தீபத்தை அணையாம வச்சுக்குங்க, அப்பத்தான் அது நம்ம அடுத்த சந்ததிக்கு உதவும். அப்படியே மத்த விளையாட்டுக்களுக்கும் உங்க ஜாதி பட்டத்த சூட்டுங்க, எப்படி?

கால்பந்து-கவுண்டர் விளையாட்டு
வாலிபால்-வன்னியர் விளையாட்டு
டென்னிஸ்-ரெட்டியார் விளையாட்டு
பேஸ்கட் பால்-படையாச்சி விளையாட்டு
செஸ்-செட்டியார் விளையாட்டு.
பாட்மிண்டன்-நாயுடு விளையாட்டு

இன்னும் தேடி தேடி ஜாதிக்கு ஒரு விளையாட்டு வையுங்க, இருக்கிற ஜாதிக்கு விளையாட்டு கிடைக்கவில்லை என்றால், அதற்கு ஒரு போராட்டாம், குண்டல் கமிஷன், இட ஒதுக்கீடு,  அது இது என்று உச்ச நீதிமன்றம் வரை போகலாம்.

இவனுக மாதிரி ஆளுக இருக்கும் வரை ஜாதி வெறி ஓயாது.

இதுதான் இந்த மெத்தப் படித்தவர்கள் இனி வரும் சந்ததிகளுக்கு விட்டு செல்லும் பாடம், பயனுள்ள தத்துவம், பகுத்தறிவு, பண்பாடு, வெங்காயம்.............

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 29 May 2018

டீ வித் முனியம்மா-சீசன்-2(3)

இன்னா முனியம்மா நாட்டு நடப்பு ஒன்னும் ஓயுங்காவே இல்ல.........

ஏன் நாடார் இன்னாமோ புச்சா நடக்குறா மாதிரி பொலம்புற.

டேய் மீச நாடார்க்கு ஒரு டீயும் பொறையும் குடுறா..




இன்னா நாடார் இன்னா மேட்டரு.............தெனிக்கும் ஒரு போராட்டம் நடத்திகினு கீறானுங்க...அத்த தானே  சொல்ல வர..

அதான்  செல்வம், தூத்துக்குடில போராட்டம் நடக்க சொல்ல துப்பாக்கி சூடு, பதிமூணு பேர சுட்டானுங்க.............அது பீகுல இருக்க சொல்ல இங்க மாவீரன் புட்டுகினாருன்னு பஸ் கண்ணாடிய ஓடைக்கிரானுங்க.

இதுல்லேந்து இன்னா தெரிது............லிங்கம் சார்.

பாய் நாட்டுல ரொம்ப பேரு வேலை இல்லாம இருக்கிறானுங்க............காலைலேயே டாஸ்மாக் தொறந்ததும் க்வாட்டர் உட்டுக்கினு போராட்டம் கூட்டத்துல கலந்துகின்னு இதுமாரி செய்யசொல்ல மெய்யாலுமே போராட்டம் பண்றவனுங்க மாட்டிகிரானுங்க.....இன்னாத்த  சொல்ல.

முனிம்மா வாட்சப்பு, பெசுபுக்கு அல்லாம் பாக்கிறியா?

அந்த கசுமாலங்கள  பாக்காம எங்க வண்டி ஓடுது? நாட்டுல எப்படா இன்னா நடக்குதுன்னு பாத்துகினே ஒரு கூட்டம் இருக்குது............கொஞ்சம் மேட்டரு கெடைச்சா போதும் அல்லாரையும் வச்சி செயுரானுங்க.

இன்னாத்த சொல்ற முனிமா.............

டேய் லோகு இந்த இணைய போராளின்னு சொல்லிகிடுட்டு ஒரு கூட்டம் அங்க கீதுடா..............ஏதோ இவருதான் அப்படியே நேர்மைக்கு பொறந்தா மாதிரியும் மத்தவன் செய்யறதெல்லாம் அநியாயமுன்னு தெனிக்கும் போஸ்ட் போடுவானுங்க.

அப்பால................

ஐய இங்க இன்னா கதையா சொல்றாங்க அப்பாலன்னுகினு...........கோயில்ல உண்ட கட்டி கொடுக்க சொல்ல பூசாரி அவன் ஜாதிகாரனுக்கு அரகயு ஜாஸ்தி கொடுத்தான்...........இதெல்லாம் இன்னா நியாயம்னு மொதல்ல ஆரம்பிப்பானுங்க...............அப்பால இன்னா கலவரம்ன்னு வந்தா ஏதோ இவருதான் கூட இருந்து பார்த்தா மாறிக்கி ஏதாவது பழைய போட்டோவ போட்டு காப்ரா செய்வானுங்க.

ரொம்ப கரீட்டு முனிமா?

அஹான் நாடார்...........இதுல எவனாவது வந்து இவன் உள் பெட்டில துப்பி வச்சா.........தோடா வந்துட்டாருடா...........சங்கி, மங்கி, பொங்கின்னு.......போடுவானுங்க........கலாய்க்கிரானுங்களாம்...........

மெய்தான் முனிம்மா...

ஆனா தெனிக்கும் வந்து.........த்தா காவிரில தண்ணி இல்ல நம்ம போராட்டம் பண்ணிக்கினு கீறோம்..........அந்த ஜாதிக்காரன பாரு வாய தொறக்காம சோத்த துன்னுகினு கீறான்.............ன்னு போஸ்டு போடுவான்........

அப்பால..

இதுக்கு கமிண்டு போடவே ஒரு பத்துபேரு குத்த வச்சி குந்திகினு இருப்பானுங்க...........அவன் வந்து ஆமா தலிவரே இந்த மென்டலான் கம்முன்னுகிறான் பா..............ன்னு கமிண்டு போடுவான்.......இன்னொரு ஆளு வந்து மய்யம் பாடு இன்னா சொல்றானுவான்............அந்த கட்சிக்காரன் ஆச்சில இருக்க சொல்லத்தான்........காவிரி மேட்டர கை வுட்டானுங்கன்னு, அம்மா கச்சி, ஐயா கச்சின்னு அல்லாரையும் வச்சி செய்வானுங்க........அப்பால கட்சீல கொண்டு போயி டீக்கடையில கொணாந்து நிப்பாட்டுவானுங்க.

அப்பால............

லோகு கடுப்பபேத்தாத..................கம்முனு இருந்த என்ன உசுப்பிவுட்டு வேடிக்க பாக்குறியா?

சரி முனிம்மா மேட்டருக்கு வா? தூத்துக்குடில சுட ஆர்டரு கொடுத்தது யாராம்?

எப்.ஐ.ஆருல வட்டாட்சியரு, சதுராச்சியருன்னு போட்டு கத உட்டுகினு இருக்கானுங்க.

அப்பால இன்னா நடக்கும்........

விசாரண கமிசன், சி.பி.சி.ஐ.டி அப்படி இப்படின்னு போட்டு கொயப்புவானுங்க........அதுக்குள்ளே அடுத்த போராட்டம் வரும், அவளவுதான் நம்ம பெசுபுக்கு கூட்டம் இத மறந்து அத்த பிடிச்சிப்பானுங்க.

அடுத்த வாரம் கூட ஒரு போராட்டம் வருதாமே.........ஆமா இனயம்  துறைமுகமாம்.........ஏற்கனவே ஒரு கூட்டம் போராட்டம் செஞ்சிகினு கீறானுங்க...28000 கோடி திட்டமாம்......இத்த வச்சி செஞ்சு அல்லாம் காசு தேத்துவானுங்க...........

சரி அல்லாருக்கும் மேட்டர் இருக்குது...........சர்தான் பொறி உருண்ட ஏரியாவா?

சரி முனிம்மா சினிமா மேட்டரு இனா............

டேய் செல்வம் உனுக்கு தெரியாது,.........என்ன கேக்குற...........ஏன் நேத்திக்கி இன்னா மப்பா...................சூனு ஏயாந்தேதிடா ..........








Follow kummachi on Twitter

Post Comment

Sunday, 27 May 2018

கவுஜ........அரசியல்

தற்பொழுது சமூக ஊடகங்களில் திடீர் கவிஞர்கள் கவிதை எழுதுகிறார்கள். தற்பொழுது நிகழும் நிகழ்வுகளை வைத்து சிச்சுவஷன் கவிதைகள் ஏராளம், அவை ரசிக்கப்படும்படியாக இருப்பவை இந்த கவிதைகளின் தனி சிறப்பு. சில ட்விட்டுகள் கவிதை போன்று ரசிக்க வைக்கும்.

அந்த வகையில் ட்விட்டரில் தென்படுபவை

அவசரத்திற்கு ஆடியோ  தந்தாய்
ஆர்.கே. நகர் எலெக்ஷனுக்கு வீடியோ தந்தாய்
பதவியாசைக்கு தியானம் தந்தாய்
பன்னீரின் கனவில் ஆவியாய் வந்தாய்
தமிழக மக்களை செத்தும் கெடுத்தாய்..............#ADMK FAILS

கோடி கோடியா கொள்ளையடிச்சவங்கள ஆட்சியில் உக்கார வைக்கிறோம், வயிற்றுப் பசிக்காக பைக் திருடினவர
மரணத்திலும் அசிங்கப்படுத்துறோம் .................சால்ட் பேப்பர் தளபதி

மேலே உள்ள கீச்சு  ஜாதி கட்சி தலைவர் பற்றியது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி
திருப்பூர் சாயப்பட்டறைகள் இன்று விடுமுறை!

கண்ணகி கதாபாத்திரத்துல ஷகீலா நடிச்சா மாதிர் ஒரு ஃபீல்.......அனு சுதா 

குணா கமல் குரலில் படிக்கவும்............

பூனை மேல மதில் மேல
யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே
மானே தேனே பொன்மானேன்னு நடுவால் போட்டுக்கோங்க தளபதி
ட்யூப் லைட் ஆலையை மூட வலியுறுத்தி வாழப்பாடி பழனிசாமிக்கு கடுதாசி....................................நைனா



Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 24 May 2018

கலக்கல் காக்டெயில் -185

கூட்டு களவாணிகள் 

ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட இத்தனை நாட்களாக அறவழியில் நடந்த போராட்டம், திசை திரும்பி அல்லது திருப்பப்பட்டு துப்பாக்கி சுடு, பெட்ரோல் குண்டு வீச்சு, பொது சொத்து சேதம் என்று புதிய பேரழிவுகளை சந்தித்துக்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே 14 உயிர்கள் பறிக்கப்பட்டு இருக்கிறது.

வழக்கம் போல பிணங்களின் மீது நடத்தப்படும் அரசியல் வேலைகள் தொடங்கிவிட்டது. தமிழா விழித்தெழு, நெஞ்சை நிமிர்த்து போராடு, உயிரை கொடுக்கவும் தயங்காதே என்று உசுப்பும் சினிமாவில் புறக்கணிக்கப்பட்ட கூத்தாடி கூட்டம் இப்பொழுது யார் பாவாடையில் ஒளிந்திருக்கிறார்களோ? தெரியவில்லை.

இன்று "செயல்" வழக்கம்போல வெளிநடப்பு செய்து, தர்ணா போராட்டம் என்று நாடகமாடிக்கொண்டு இருக்கிறார். முதல்வரோ நிருபர்களின் கேள்விகளுக்கு முழி பிதுங்கி நிற்கிறார். முன்னாள் நிதியோ மத்திய அரசை கை காட்டுகிறார்.

இவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு நேரத்தில், சரியாக "அணில் அகர்வாலால்" நன்றாக கவனிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் முன்னாள் நிதி ஸ்டெர்லைட் ஆலையின் "டைரடக்கரா!!!!" வேற இருந்தாராம். செயலு கட்சி எம்.எல்.ஏ அங்கே லாரி ஓட்டுறாங்களாம். மொத்தத்தில் எல்லோரும் கூட்டு களவாணிகள்.

ஏலே நடத்துங்கலே..........

பிழைத்த ஜனநாயகம் 

கர்நாடகா தேர்தல் முடிந்து யாருக்கும் பெரும்பான்மை இல்லாது, ஒரு இரண்டு நாட்களாக எடியூரப்பா முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து பின்னர் எழுந்து போக, ஜனநாயகத்தை கட்டிக் காத்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் வெறும் 38  உறுப்பினர்களே உள்ள ம.ஜ.த கட்சியின் குமாரசாமியை முதல்வராக்கி இருக்கிறது. இது எவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிக்கும் என்று மக்கள் அனைவருக்குமே சந்தேகம் உள்ளது, இருந்தால் என்ன ஜனநாயகம் பிழைத்திருக்கிறது அல்லவா?

நாம இப்படிக்கா போவோம்..

ரசித்த கவிதை 

நடிகர்களே இப்போது புறப்பட்டுவிடாதீர்கள் 

நடிகர்களே இப்போது
புறப்பட்டுவிடாதீர்கள்
உங்களுக்கு
மூச்சுத் திணறல் ஆகிவிடும்
எல்லாம் அடங்கட்டும்
இன்னும்தான்
தேர்தலுக்கு
நாளிருக்கிறதே

நடிகர்களே! உங்கள் அண்ணன்கள்
நன்றாக பேட்டி
கொடுத்துக்கொண்டு
பாதுகாப்பாக
இருக்கிறார்களா?
இருக்கட்டும்
எங்கள் அண்ணன்கள்தான்
செத்துக்கிடக்கிறார்கள்!

நடிகர்களே உங்கள் மகள்கள்
பாதுகாப்பாக
படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்களா?
பாதுகாப்பாக
நடித்துக்கொன்டிருக்கிரார்களா?
இருக்கட்டும்
எங்கள் மகள்கள்தான்
செத்துக்கிடக்கிறார்கள்!

நடிகர்களே! இவர்கள் அரசியல்
வேறு
உங்கள் அரசியல் வேறா?
இவர்களுக்கு
சுடுகாடு!
உங்களுக்கு
சட்டமன்றமா?
ஓ....
நாடாளு மன்றமுமா?

நல்லது
நடிகர்களே
கிளிசரினோடு தேர்தல்
பிரச்சாரத்திற்கு
புறப்படுமுன்
உங்கள் எசமானர்களிடம்
கேட்டுச் சொல்லுங்கள்

எங்கள் உறவுகளின்
சாவுக்காக
நாங்கள்
கொஞ்சம்
அழுது கொள்ள
அனுமதி
கிடைக்குமா!!!

நன்றி: கவிஞர் அறிவுமதி.





Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 23 May 2018

எய்தவன் எங்கிருக்கிறான்?- ஸ்டெர்லைட் பரிதாபங்கள்

நேற்றைய தினம் தூத்துக்குடியில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. என்னதான் எச்சை ஊடகங்கள் சம்பவத்தை இருட்டடிப்பு செய்தாலும், நவீன தகவல் தொழில் நுட்பத்தில் இந்த மாதிரி சம்பவங்கள் மக்களை சென்றடைவது எளிதாகிவிட்டது.

குறிப்பாக துப்பாக்கி சுடும் அந்த காட்சி தற்பொழுது எல்லோரது அலைபேசியிலும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. கூட்டத்தை கலைக்க சுடப்படவில்லை என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இன்று காலை மற்றுமொரு செய்தி வாட்சப்பில் துப்பாக்கி சுடுபவரின் குடும்ப விவரங்கள், அலைபேசி எண் எல்லாவற்றையும் வெட்ட வெளிச்ச்சமாகியிருக்கிறார்கள். அந்த நபர் வெறும் அம்புதான்.

எய்தவர் அல்லது எய்தவர்கள் யார்?

வழக்கம்போல விசாரணை கமிஷன் அமைத்து குற்றவாளி தண்டிக்கப் படுவார் என்று அரசு தரப்பில் சொல்லப்படும்.

துப்பாக்கியில் சுட்டவர் பலிகடா ஆக்கப்படுவார்.

எய்தவர்கள் " எஸ்" ஆவார்கள். பணம் படுத்தும் பாடு.

இறந்தவர்களின் குடும்ப நிலை பரிதாபத்திற்குரியது.

சரி எய்தவர்கள் யார்? அவர்களை எய்தத்தூண்டியது யார் என்று கேள்வி கேட்டால் அரசு தொடங்கி அன்றாடங்காய்ச்சி வரை  சுட்டு விரல் திரும்பும்.

ஸ்டெர்லைட் ஆலை துவங்க "அகர்வால்" குஜராத்தில் முயல அங்கிருந்து கோவா பக்கம் திரும்பி செல்ல அங்கும் அரசால் நிராகரிக்கப்பட்டு பின்னர் மகாராஷ்ட்ராவில் தொடங்கினார். ஏறக்குறைய இருநூறு கோடி வரை செலவிட்டு காப்பர் உருக்கும் உலை வரை நிறுவ மக்களின் எதிர்ப்பால் "பவார்" இடத்தை காலி பண்ணுப்பா என்று துரத்தி விட நம்ம
'இரும்பு பெண்ணின்" அழைப்பிற்கு!!! இணங்க தூத்துக்குடியில் துவக்கினார்.

இதை எதிர்த்து மக்கள் போராட்டம் துவங்கிய வேளையில், வரலாற்று சிறப்பு மிக்க 1996  தேர்தல் வந்ததால் எல்லா கட்சிகளும் பொத்தினாப்ல இருந்துவிட்டனர். அதற்குப் பிறகு மக்கள் எழுச்சி பெறும்போதெல்லாம் முதலாளித்துவமும், அரசாங்கமும் அதை ஜாதி சண்டையில் மழுங்க அடித்தன.

அதற்குள் தொழிற்சாலை தொடங்கி மாசுகட்டுப்பாட்டு விதிமுறைகள் எல்லாம் காற்றில் பறக்கவிட்டு உற்பத்தியை அமோகமாக பெருக்கிக்கொண்டு இருந்தார்கள். அப்பப்போ குரல் விடும் அரசியால் வாதிகள் நன்றாக கவனிக்கப்பட்டனர்.

இருந்தாலும் விடாப்பிடியாக போராடி உச்சநீதிமன்றம் வரை சென்று ஆலையை இழுத்து மூடினார் வை.கோ.. பின்னர் அடுத்து வந்த ஆட்சி மாசுகட்டுப்பாட்டு வாரிய அமோக ஆதரவுடன் ஆலையின் உற்பத்தியை தொடங்க அனுமதியளித்தது, நடுவில் என்ன நடந்து இருக்குமென்பது அனைவரும் ஊகிக்கக்கூடியதே. ஆனால் அதன் பின்னர் வை.கோ அமைதியானார். இப்பொழுது விரிவாக்கம் என்று ஆலையை விஸ்தரிக்கப் போக போராட்டம் மறுபடியும் தொடங்கியது.

கடந்து 99  நாட்களாக அறவழியில் மக்களால் நடத்தப்பட்ட ஒரு போராட்டம் நூறாவது நாளில் வன்முறைக்கு உள்ளாகிறது, உயிர்ச்சேதம், தீவைப்பு, பொது சொத்துக்கள் சேதம் என்று திசை திரும்பியதா அல்லது திருப்பப்பட்டதா நாம் அறியோம்.

எய்தவன் அல்லது எய்தவர்கள் யார்?  யோசித்துப்பாருங்கள், பணம் பெருக்கும் முதலாளிகள், துணை போகும் அரசியல் வாதிகள், கமிஷன் வாங்கும் அல்லக்கைகள் ஏன் இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் ஒரு திருடனுக்கு மற்றொரு திருடன் மேல் என்று இலவசங்களுக்கும், க்வாட்டருக்கு விலைபோகும் வாக்காளர்களுமே.

சொந்த சகோதர்கள்
துன்பத்தில் சாகக்கண்டும்
சிந்தை இரங்கார்..............
தம் நலம் ஒன்றே அறிவார்.

இனி என்ன எல்லா ஊடகங்களும், சமூக வலை தளங்களிலும் இவ்வளவு நடந்திருக்கிறதே அவன் வாய் திறந்தானா? அந்த ஜாதிக்காரன்  வாய் திறந்தானா? என்று பிணத்தின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியும், ஜாதி வன்மை அரிப்புகளையும் சொரிந்துவிடுவார்கள்.








Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 22 May 2018

தேன்மொழியும் டெக்கீலாவும்.

"கருப்பையா" சார் இன்றைக்கு என்னை அலுவலகத்தில் தொலைபேசியில் அழைத்திருந்தார். இப்பொழுதெல்லாம் அவரை பார்ப்பது  அரிதாகிவிட்டது, காரணம் அவரல்ல அவருடைய மாணவர்கள் நாங்கள் ஓடி ஓடி ஆணிபிடுங்கி கொண்டிருப்பதால் அவரை காண அடிக்கடி செல்ல முடியவில்லை.

ஏன் அவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் "பட்டா" என்கிற ஆர்யாபட்டாவால் கூட முடிவதில்லை. நான், பட்டா, ராஜசேகர், சூரி மற்றும் ஆறுமுகம்தான் அவருடன் இன்னும் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் அரசு மேல்நிலை பள்ளியில் படித்தோம், அரசுப் பள்ளிகளின் அந்தக்கால எழுதப்படாத விதிகளின் படி ஒரே ஆசிரியர் இரண்டு மூன்று வகுப்புகளை எடுப்பார். அந்த வகையில் கருப்பையா சார் எங்கள் வகுப்பிற்கு ஆறாம்  வகுப்பு தொடங்கி பள்ளி படிப்பு முடியும் வரை தமிழ், கணக்கு, ஆங்கில பாடங்களை எங்களுக்கு எடுத்தார். அவரது வகுப்புகள் எங்களுக்கு போரடிக்காது. மேலும் அவர் மற்ற ஆசிரியர்கள் போல் ட்யூஷன் எல்லாம் எடுப்பதில்லை. அவரது வகுப்பை ஒழுங்காக கவனித்தாலே போதும் கோனார், மற்ற இதர உபரி உதவிகள் தேவையில்லை. இப்பொழுது நான் சொல்ல வந்தது அவரது ஆசிரியத்திறமை பற்றி அல்ல.

கருப்பையா சாருக்கும் எங்களுக்கும் இருந்த ஆசிரியர் மாணவர் உறவைத்தாண்டி இருந்த நட்புதான். மதிய இடைவேளையில் இவர் மற்ற ஆசிரியர்கள் போல் ஆசிரியர் ஒய்வு அறையில் ஓய்வெடுக்கமாட்டார்.  எப்பொழுதும் ஏழாம் "சி" வகுப்பறையில் தான் அந்த நாற்பது நிமிடம் ஓய்வெடுப்பார். எங்களையும் மதிய உணவை எடுத்துக்கொண்டு அங்கு வரச்சொல்லுவார். ஒன்றாக உணவு உண்போம். பின்பு எங்களுடம் மதிய ஆரம்ப மணி அடிக்கும் வரை பேசிக்கொண்டிருப்பார். அவர் எங்களிடம் எப்பொழுதும் எங்கள் வயதுக்கு மீறிய பேச்சுகளை பேசியதில்லை. கோடை விடுமுறையில் மாலை வேளைகளில் அவர் வீட்டில் நாங்கள் அனைவரும் சந்திப்போம். அவர் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அதற்கான காரணம் எங்களுக்கு வெகுநாட்கள் வரை தெரியாது.

எங்களது நட்பு பள்ளிப்படிப்பு முடிந்து, கல்லூரி சென்றாலும், ஏன் வேலை வெட்டி கல்யாணம் என்று நாங்கள் வேறு வேறு ஊரில் சிதறினாலும் அவருடனான எங்களது தொடர்பு சுத்தமாக முறிந்துவிடவில்லை.  உள்ளூரில் இருக்கும் பட்டா, ராஜசேகர், சூரி மற்றும் நான் அடிக்கடி அவரை சிந்திப்போம். முக்கியமாக அவருடைய பிறந்த நாளில் நாங்கள் சந்தித்து அவருடன் கொண்டாடுவது வழக்கம். அப்படி ஒரு முறை சந்திக்கும் பொழுதுதான் அவரது காதல் கதை எங்களுக்கு தெரிய வந்தது.  அது ஏதோ காரணத்தினால் நடக்காத போனதால் அவர் தனி ஆளாக இருந்திருக்கிறார். அனால் அதை பற்றி என்றும் அவர் அலட்டிக்கொண்டதில்லை. எப்பொழுதாவது நாங்கள் அவருடன் சோமபானம் அருந்தும் பொழுதுகூட அதைப்பற்றி எல்லாம் பேசமாட்டார். அவர் ஒன்றும் குடிகாரரும் அல்ல.

வெகு வருடங்களுக்குப் பிறகு ஆறுமுகம் விடுமுறையில் வந்திருந்தான். அவன் கருப்பையா சாருக்கு போன் செய்தது அவரை இன்று மாலை காண வருவதாக சொல்லியிருக்கிறான். அதனால் தான் கருப்பையா சார் இன்று என்னை அலுவலகத்தில் அழைத்தார். ஆறுமுகம் வெளிநாடுகளில்!!! பணிபுரிகிறான். கவனிக்க வெளிநாடுகளில்!! ஒவ்வொரு முறை வரும்பொழுதும் வேறு வேறு இடம் சொல்லுவான். கருப்பையா சார் என்னை போலவே மற்றவர்களுக்கும் தொலைபேசியில் அழைத்து,  வர சொல்லியிருந்தார். பழைய படி நாங்கள் ஆறுபேரும் ஒன்றாக சேர்ந்த மிகவும் அற்புதமான தருணம். பேச்சு எங்களது பள்ளி நாட்கள் பற்றி போய்க்கொண்டிருந்தது. பேச்சு வாக்கில் ஆறுமுகம் தான் கொண்டு வந்த பையிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்தான். சார் சாப்பிடலாமா என்றான். அவர் வழக்கம் போல நீங்க சாபிடுங்கப்பா நான் வழக்கம் போல உங்களுடன் கம்பெனி கொடுக்கிறேன் என்றார். அதாவது நாங்கள் முடிக்கும் வரை பேருக்கு கொஞ்சம் வைத்துக்கொண்டு குடிப்பார்.

ஆறுமுகம்  "டெக்கிலா " எடுத்தவுடன் ராஜசேகர் வழக்கம் போல அவர் வீட்டில் இருந்த கிளாஸ்களை கழுவிக்கொண்டு வைத்தான். பட்டா ஏன்டா உனக்கு இந்த கிளாஸ் தான் கெடைச்சுதா?   டெக்கில்லாவிற்கு ஒரு மரியாதை வேண்டாம்? அதற்கெல்லாம் ஷாட் கிளாஸ் வேண்டுமடா? பட்டாவிற்கு எல்லாம் அந்த நியமப்படி செய்யவேண்டும்.

பீர் மோர் போல குடிக்கணும்,
விஸ்கிய விட்டு விட்டு குடிக்கணும்
பிராந்திய பயந்துதான் குடிக்கணும்
ஜின்ன வண்ணமயமா குடிக்கனுமுன்னு

பாட ஆரம்பிச்சிடுவான்.

 சரி உனக்கு என்ன வேணும் பட்டா? இது நான்.

டேய் குமாரு வண்டில போயி கடகடன்னு ஷாட் கிளாஸ் வாங்கிண்டு வா? அப்படியே ஒரு ஆறு எலுமிச்சைப் பழமும்  வாங்கிண்டு வா என்று என்ன விரட்டிவிட்டான்.

எல்லாம் ஆகிருதிகளும் தயாரனாவுடன் எல்லோரயும் வலதுகையை நீட்ட சொல்லி புறங்கையில் எலுமிச்சை சாறினால் கோடுபோட்டு உப்பை தடவிவிட்டான். பின்னர் சரக்கை கிளாசில் ஊற்றி "சியர்ஸ்" என்று தொடங்கி வைத்தான்.  நாங்கள் கல்ப்ப...கருப்பையா சார் வழக்கம் போல சப்பிக்கொண்டு இருந்தார்.

பட்டா அவரிடம் சார் இதெல்லாம் இப்படி அடிக்கக்கூடாது என்று அவர தலையைப் படித்து ஏறக்குறைய முழு கிளாசையும் அவர் வாயில் போட்டி விட்டான். பின்னர் அவரது புறங்கையை அவர் வாயில் ஈஷி விட்டான்.

இனி அடுத்த ரவுண்டு, என்று அவருக்கு பழக்கமில்லாத காரியத்தை அளவுக்கு அதிகமாக செய்துவிட்டான். அவர் வேறு ஒரு உலகத்தில் சஞ்சாரிக்க ஆரம்பித்து விட்டார். வழக்கமாக எங்களுடன் நிதானத்துடன் பேசும் அவர் இன்று வாயை மூடிக்கொண்டு விட்டார். எங்கள் எல்லோருக்கும் அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்த பட்டாவின் மேல் செம கடுப்பு , அவனை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தோம்.

சரிடா எவனாவது போயி சாப்பாடு வாங்கி வாங்க என்றான் ஆறுமுகம்.

விடுங்கப்பா....................தேன்மொழி.........................தேன்மொழி என்று சொல்லிவிட்டு மட்டையாகிவிட்டார் கருப்பையா சார்.

ராஜசேகரிடம் யாருடா தேன்மொழி என்று கேட்டதற்கு யாருக்கு தெரியும் ஒரு வேளை அவரது எக்ஸ் ஆக இருக்குமோ? என்று ஆளாளுக்கு புலம்பிக்கொண்டு இருந்தனர். அதற்குள் பட்டா டேய் தேன்மொழி நம்ம மூன்றாம் வகுப்பு கிளாஸ் டீச்சர்டா என்றான்.

அதற்கு ராஜசேகர் சும்மா பேத்தாத.........அந்த டீச்சருக்கு அப்பவே கல்யாணமாகி இரண்டு குழந்தை இருந்தது, என்று காதல் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டனர்.

அப்பொழுது கதவ தட்டப்படும் சத்தம்............யாரது இந்த நேரத்தில் என்று கதவருகில் சென்று கேட்டதற்கு "தேன்மொழி சார் கதவ திறங்க" என்றது கதவுக்கு அந்தப்புரம்.

கதவை திறந்தவுடன் சார் இருக்காரா? என்றாள்.

இருக்காரு என்னா விஷயம், ஆறுபேருக்கு சாப்பாடு சொல்லியிருந்தார் அதை கொடுக்கலாமுன்னு வந்தேன் சார் இல்லையா? என்றாள்.

இருக்காரு எங்ககிட்ட கொடு என்றதற்கு நான் சாரண்டதான் கொடுப்பேன் என்று விடு விடு வென்று வீட்டுக்குள் நுழைந்து........ஐயோ சாருக்கு என்ன ஆச்சு?

பின்பு நிலைமை உணர்ந்த அவள்...........இன்ன மனுஷன் அவரு அவருக்கு போயி இந்த மாதிரி நண்பர்களா? என்று கதவை மூடிவிட்டு சென்றாள் தேன்மொழி...............










Follow kummachi on Twitter

Post Comment

Sunday, 20 May 2018

ஜனநாயகமும், நடுநிலை நக்கிகளும்.

கர்நாடகா தேர்தல் முடிந்து இன்று வரை பரபரப்புகளுக்கு பஞ்சமில்லை. 104 இடங்களை வென்ற பா.ஜ. க வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க, காங்கிரஸ், ம.ஜ.தா வை வளைத்து குமாரசாமியை உசுப்பி விட்டு அவரும் ஆட்சி அமைக்க உரிமை கோர, இரவோடு இரவாக உச்சநீதிமன்றத்தை அணுகி எடியூரப்பாவை முதல்வராகுவதை நிறுத்த சொல்ல........உச்ச நீதிமன்றம் கைவிரித்தது. ஆனால் குதிரை பேரத்தை தடுக்க நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு நேற்று மாலை நான்கு மணி வரை அவகாசம் அளித்தது. அவரோ அமீத்ஷா "வேலை" வேலை செய்யாததால்  அம்பேல் ஆகிவிட்டார். இனி குமாரசாமி ராஜ்ஜியம்.



சரி இந்த சைக்கிள் கேப்பில், மத்திய அரசு CMB  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பையும் வழங்கிவிட்டது. இப்பொழுதுதான் உண்மையான அரசியல் ஆட்டம் துவங்குகிறது. ம.ஜ.தவின் தேர்தல் அறிக்கையில் முக்கியமான ஒன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டோம் என்பதே. அதற்கேற்றாற்போல நமது தமிழ்நாட்டு அரசியல்வியாதிகளின் பேச்சும் மாறிக்கொண்டு இருக்கிறது. ஆக மொத்தத்தில் இவர்களுக்கு காவிரி தண்ணீர் பகிர்வதில் பிரச்சினை இல்லை. இதை வைத்து இன்னும் கொஞ்சகாலம் அதாவது நாடாளுமன்ற தேர்தல் வரை ஜல்லியடிக்க வேண்டும், இது புரியாத இணையப்போராளிகள் வழக்கம் போல சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

வழக்கம் போல முகநூலிலும், ட்விட்டரிலும் நமது இணையப்போராளிகள், நடுநிலை நக்கிகள், கடந்த சிலநாட்களாக பொங்கி எழுந்து போர்க்களமாக்கி விட்டனர்.  அவர்கள் கருத்திற்கு ஒத்து வராதவர்களை படித்தவர்கள், வல்லவரு, நல்லவரு, வெளிநாட்டில் வேலை செய்யம் பெரிய மனிதர்கள் கூட புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்களே என்ற ஆதங்கம் வேறு. விஷயம் இதுதான் இனி

முகநூலில் வந்த பதிவு.

இந்த ஜனநாயகம் குதிரை பேரம் இரண்டுக்கும் என்ன வித்யாசம்னா

பா.ஜ.க காங்கிரஸ் MLAக்களை அமைச்சர் பதவி தரேன்னு கூப்பிட்டா குதிரை பேரம்.
அதே காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவி தரேன்னு JDS  தலைவரை கூப்பிட்டா ஜனநாயகம்.

இந்த பதிவிற்காகத்தான் சோ கால்டு நடுநிலை நக்கிகளின் பொங்கல்கள்.

இன்னும் சில உபீஸ், நடுநிலை நக்கிகளின் பதிவுகளும், விளைவுகளும்

29 இடங்களில் டெபாசிட் இழந்த பா.ஜ. க ஆட்சிக்கு வருவது எந்த விதத்தில் நியாயம் என்று பொங்கப்போக, 147 தொகுதிகளில் டெபாசிட் இழந்த ம.ஜ.த கட்சி தலைவர் குமாரசாமி முதல்வராக்கி ஜனநாயகம் காப்பாற்றப் பட்டுவிட்டது.

தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது வேணுமென்றால் சிறுநீர் தருகிறோம், என்று சொன்ன குமாரசாமியும், இலங்கை தமிழர்களை கொன்றுகுவித்த காங்கிரசும் சேர்ந்த  கூட்டணி ஆட்சியை கொண்டடுபவன்தான் உண்மையான தமிழ் உணர்வாளன்.

தமிழன்டா...........வீரன்டா...........


Follow kummachi on Twitter

Post Comment

Thursday, 17 May 2018

டீ வித் முனியம்மா-சீசன் 2(2)

மீச இன்னாடா எப்படி கீற...

சுகம் சுகத்தில் சுகம்.

அது இன்னாடா சுகத்துல சோகம்.......மவனே இவனுங்க பாடு..இங்க வந்து ரப்ச்சர் பண்றானுங்க.

சரிடா வடையும் ஒரு சைனா டீயும் போடு............முனிம்மா எங்கே டா.....

அறியில்லே..

வா லிங்கம் சார், வா பாய் எப்படி கீறேங்க.

தோ....டா...........லோகுவும் முனிமாவும் வந்துகினுகீறாங்க.

இன்னா முனிம்மா எங்க ஆளே காணும்..............உன் நூசு இல்லாம டீக்கடியே புளிப்பூத்துது.

டேய் செல்வம் இன்னாடா அஞ்சல பேஜார் பண்ணுதா? எங்கிட்ட வந்து பிலிமு காட்டுற......

இன்னா பாய் கர்நாடகவுல எலிக்சன் முடிவு இன்னா ஆச்சு?.........

ஐய உனுக்கு தெரியாத முனிம்மா........

அது தெரியும்..............இப்ப இன்னா நடக்கும் சொல்லு..........

தெரிஞ்ச விசயம்தான் லிங்கம் சாரு....கவுனரு எடியூரப்பாவதான் மொதோல்ல.......கூப்டுவாறு............அப்பால கூவத்தூரு...........குடி............கூத்தியா கோடின்னு கொணாந்து...........ஆச்சிய பிடிச்சிடுவானுங்க.............அல்லாம் நமக்கு தெரியாதா.........

அதானே முனிம்மா கொமாரசாமி கூட்டத்துல ஒரு பத்து பேரு ரெடியா துண்டு போட்டு வச்சிகிரானுனங்கலாம்.

அது மேட்டரு விடு...........தமிழ் நாட்ல இன்னா நடக்குது சொல்லு முனிம்மா.....

லோகு தமிழ் நாட்ல எதானா நடக்குதா இன்னா?  எடுபிடி...........டீகட ரெண்டு பேரும்........மோடிக்கு சொம்படிச்சிகினு...............தமிழ் நாட்ட ஆட்டையப் போட்டுகினு கீறானுங்க.

முனிம்மா மையமும்...சிஸ்டமும் இன்னா சொல்றானுங்க.........

அடேய் செல்வம் இன்னாடா அறியாப்பையனா கீற. அவனுங்க சொம்மா கொரலு வுட்டுகினு ஆளு சேத்துகினு பிலிமு காட்டிகினு கீறானுங்க...........சினிமாவுல இருந்து வந்து நேரடியா கச்சி தொடங்கி சிஎம் ஆவுறது எம்.ஜி.ஆரு, ஏன்.டி.ஆரு அவுகளோட முடிஞ்சிச்சி........அப்பால வந்த கேப்டன், சிரஞ்சீவி கத கந்தலா போனுதுதான் அல்லாருக்கும் தெரியுமே.

ஆமா முனிமா ஊடால சீமான் வேற கும்மியடிச்சுகிட்டு.........

டேய் அந்தாள பத்தி பேசாத............காண்டாவுது.................

இன்ன முனிம்மா இப்ப தமிழ் நாடு கம்முனு கீது...........ஒரு போராட்டம்.........கடையடைப்பு............உண்ணாவிரதம் ஒன்னியும் காணும்.

ஏண்டா லோகு...........உசுப்பி வுடுற............இப்பதான் கவுனரு........நிர்மலாதேவி.........காவிரி.............செத்தாண்டா சேகருன்னு...கூவி ஓஞ்சு இருக்கானுங்க...................

இன்னா முனிம்மா புது படம் எதானா நல்லா கீதா?

யாருக்கு தெரியும் லிங்கம் சாரு............தொ செல்வத்தாண்ட கேளு கரீட்டா புட்டு புட்டு வைப்பான்......

இன்னடா செல்வம்.............

அப்படி கேளு முனிம்மா..............சார் இருட்டு அறையில் முரட்டு குத்துன்னு ஒரு அஜால் குஜால் படம் வந்துகிது சார்...

அடச்சீ............வாய சோப்பு போட்டு கயுவுடா............படத்துக்கு பேரு வச்சிகிரானுங்க பாரு........


Follow kummachi on Twitter

Post Comment

Wednesday, 16 May 2018

"ஆச்சி"யைப் பிடிப்பது யார் ?

கர்நாடகாவில் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்த முடிவுகள் இப்படித்தான் இருக்குமென்று ஏறக்குறைய எல்லா ஊடகங்களும் "இந்தியா டுடே" வைத்தவிர கூவிக்கொண்டு இருந்தன.

ஆனால் சமூக வலைதளங்களில் உபீசுகள், பாவாடை சித்தர்கள், நடுநிலை நக்கிகள், சங்கீஸ், மங்கீஸ் மற்றும் வீரம் சொரிந்தவர்கள் கணிப்பும் மற்றும் முடிவுகள் அறிவிக்க ஆரம்பித்தவுடன் புலம்பிய புலம்பல்களும் கர்நாடகா முடிவுகளைவிட பரபரப்பாக இருந்தன.

காலையில் ஒரு பாவாடை சித்தரின் கணிப்பு.

ஒன்பது மணி நிலைமை...............காங்கிரஸ் முன்னிலை.
பத்து மணி நிலைமை.....................காங்கிரஸ், பி.ஜே.பி இழுபறி
பன்னிரண்டு மணிக்கு மேல்............பி.ஜே.பி அபார வெற்றிபெற்று ஆச்சியைப்பிடித்தது.   இதுதான் டிசைன். ஏனென்றால் தேர்தல் வாரியம் அமீட்ஷா கையில்.

இதை ஆமோதித்த ஒரு நடுநிலை நக்கி, இப்படியே போனா தமிழ் நாட்டுல தேர்தலில் யாரும் ஒட்டுபோடவில்லை என்றாலும், பி.ஜே. பி அத்தனை தொகுதிகளிலும் வெற்றி என்று அறிவுத்துவிடுவார்கள், உச்சா நீதிமன்றம் போனாலும் அவனுங்க ஆளுக தான்.........நாடு நாசமா போகட்டும் என்று சபித்துவிட்டு அடங்கிவிட்டார்.

இதற்கு பின்னூட்டமாக உபிஸ் வந்து இதை ஆமோதித்து தமிழ் நாட்டுல இவங்க பப்பு வேகாது, முதலில் நோட்டாவை தோற்கடிக்கட்டும், ஏனென்றால் இது வீரம் நெறைஞ்ச மண்ணு........(மண்ணை கொள்ளையடித்துவிட்டார்கள் எனபது வேறு விஷயம்) என்று கொதித்துவிட்டுப்போனார். ஓஹ்ஹோ அப்படி என்றால் பி.ஜே.பி வாக்குப்பதிவு எந்திரத்தில் சூடு வைக்கிறார்கள் என்பதை நம்பவில்லை போலும்.

இது இப்படி இருக்க 56 க்கு மேல் வந்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்றவர் அம்பேல் ஆகிவிட்டார்.

முடிவுகள் வர ஆரம்பித்தவுடனே நமது நிரந்தர அடிமைகள் பிரதமருக்கும்,அமீத் ஷாவிற்கும் தென்னகத்தில் அபாரமாக கால்பதித்தற்கு வாழழ்த்துகள் என்று கடிதம் அனுப்பி மகிழ்ந்த்தார்கள்.

செயலும் அடுத்த தேர்தலுக்கு அச்சாரமாக துண்டு போட தன் பங்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

கர்நாடகா முடிவுகள் சில விஷயங்களை தெளிவாக சொல்லிவிட்டன.

பிரிவினைவாதம் வைத்து பிழைப்பு நடத்தும் வாட்டாள்களை மக்கள் மனிதனாக மதிப்பதில்லை.

என்னதான் ஊடகங்கள் பி.ஜே.பி வெற்றி என்று நடுநிலை வாக்குகளை திசை திருப்ப முயன்றாலும், வேலைக்கு ஆவதில்லை.

ஆளும்கட்சியின் மீது உள்ள அதிருப்தி தெளிவாக தெரிகிறது, முக்கால் வாசி அமைச்சர்கள் தோற்றுவிட்டனர்.

அதே சமயத்தில் பி.ஜே.பிக்கும் பெரும்பான்மை கிடையாது. ம.ஜ.த விற்கு கொஞ்சம் சீட்டுகளை கொடுத்து குதிரை பேரத்திற்கு வழி வகுத்துவிட்டார்கள்.

என்னதான் காங்கிரஸ் லிங்காயத்துகளிடம் பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்தாலும் மக்கள் தெளிவாக உள்ளனர். கிட்டத்தட்ட இது ஜாதி அரசியலுக்கு சமாதி நிலை.

இங்கு தமிழ்நாடு போல் பணநாயகம் விளையாடியதாக தகவல்கள் இல்லை. இருந்திருக்கலாம் ஆனால் ஊடகங்கள் அதை மறைத்தனவா? என்று தெரியாது?

இப்போது இருக்கும் முக்கியமான கேள்வி?

"ஆச்சி"யை பிடிப்பது யார்?




Follow kummachi on Twitter

Post Comment

Tuesday, 1 May 2018

கலக்கல் காக்டெயில் -184

காவிரி போயி கவுனர் வந்தார் டும் டும் டும் 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆரம்பித்த போராட்டம், நித்யா தேவி, கவர்னர், சேகர் என்று கொதித்து அடங்கிவிட்டது. சமீபத்தில் மூன்று நாட்கள் சென்னையில் இருந்த பொழுது எங்கும் கொடியையோ கோஷங்கலையோ காணவில்லை.

அமைதியா இருக்குது, ஒரே அமைதியா இருக்குது (சூர்யா மாடுலேஷனில் ஆயிரம் டெசிபல் சவுண்டில் படிக்கவும்).

என்னது நாங்க இருக்கும் பொழுது அமைதியா? என்று செயலு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை கையிலெடுத்திருக்கிறார்.  போராடுங்க செயல் போராடுங்க, அப்படியே அந்த மூன்றாம் கலைஞரையும் கோதாவில் இஸ்த்து விடுங்க.

ரொம்ப போரடிக்குது.

மணல் மாஃபியாக்கள் 

காவிரிக்கரை கிராம மக்கள் இந்த மணல் கூட்டம் எப்போ நம்ம கிராமத்துக்கு வருவாங்கன்னு தேர்தல் நேர வாக்காளர்கள் போல காத்திருக்காங்களாம். முக்கியமாக கரூர், மோகனூர், கொத்தமங்கலம் கிராமங்கள் பகுதில நல்ல சம்பாத்யமாம். மணல் கொள்ளையர்கள் நூதன வழியில ஆற்று மணல அள்ளிக்கிட்டு இருக்காங்க. காவிரி ஆற்றிலிருந்து கிராம மக்களை அள்ளவிட்டு ஒரு மூட்டைக்கு இரண்டாயிரம் ருபாய் கொடுக்கிறார்களாம்.

செம்மரக்கடத்தலில் வரும் வருவாய் எல்லாம் மணல் முன்பு ஜூஜூபியாம்.

இனி அடுத்த தலைமுறைக்கு தண்ணி, சோறு இல்லாம என்னவெல்லாம் செய்யணுமோ அதை இந்த அரசியல் பின்புலம் உள்ள கூட்டங்கள் சிறப்பாகவே செஞ்சிகிட்டு இருக்காங்க.

ரசித்த கவிதை 

குருவிக்கூடுகள்


நீங்கள் பயன்படுத்தி எஞ்சி
எறிந்த மின்சார ஒயரின்
சிறு துண்டு
ஆடு தின்று முடித்து
மிச்சம் கிடந்த
காய்ந்த சில புற்கள்
மரம் வேண்டாமென
உதிர்த்துவிட்ட
வறண்டுபோன குச்சிகளென
கூட்டு முயற்சியால்
ஆனது என் கூடு
கவலையாய் இருக்கிறது
உங்கள் கண்ணில்படாமல்
இருக்க வேண்டுமென்று
தேவையற்றதென நீங்கள்
கலைத்துவிடவும் கூடும்..

நன்றி: சாமி கிரிஷ்

சினிமா

சினிமா வேலைநிறுத்தம் ஏதோ முடிந்துவிட்டது என்றார்கள்.  நிறையப்படம் வரப்போகிறது என்றார்கள். படங்கள் வந்தமாதிரி தெரியவில்லை (இரண்டு மூன்று வந்ததாக கேள்வி) வந்ததும் சோபித்தமாதிரி தெரியவில்லை. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் போலும்......இனி அடுத்த முதலமைச்சர் சினிமா பின்புலம் இல்லாதவரா?  ஆஹா நினைக்கவே நன்றாக இருக்கிறது.



Follow kummachi on Twitter

Post Comment