Sunday, 20 May 2018

ஜனநாயகமும், நடுநிலை நக்கிகளும்.

கர்நாடகா தேர்தல் முடிந்து இன்று வரை பரபரப்புகளுக்கு பஞ்சமில்லை. 104 இடங்களை வென்ற பா.ஜ. க வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க, காங்கிரஸ், ம.ஜ.தா வை வளைத்து குமாரசாமியை உசுப்பி விட்டு அவரும் ஆட்சி அமைக்க உரிமை கோர, இரவோடு இரவாக உச்சநீதிமன்றத்தை அணுகி எடியூரப்பாவை முதல்வராகுவதை நிறுத்த சொல்ல........உச்ச நீதிமன்றம் கைவிரித்தது. ஆனால் குதிரை பேரத்தை தடுக்க நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு நேற்று மாலை நான்கு மணி வரை அவகாசம் அளித்தது. அவரோ அமீத்ஷா "வேலை" வேலை செய்யாததால்  அம்பேல் ஆகிவிட்டார். இனி குமாரசாமி ராஜ்ஜியம்.



சரி இந்த சைக்கிள் கேப்பில், மத்திய அரசு CMB  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பையும் வழங்கிவிட்டது. இப்பொழுதுதான் உண்மையான அரசியல் ஆட்டம் துவங்குகிறது. ம.ஜ.தவின் தேர்தல் அறிக்கையில் முக்கியமான ஒன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டோம் என்பதே. அதற்கேற்றாற்போல நமது தமிழ்நாட்டு அரசியல்வியாதிகளின் பேச்சும் மாறிக்கொண்டு இருக்கிறது. ஆக மொத்தத்தில் இவர்களுக்கு காவிரி தண்ணீர் பகிர்வதில் பிரச்சினை இல்லை. இதை வைத்து இன்னும் கொஞ்சகாலம் அதாவது நாடாளுமன்ற தேர்தல் வரை ஜல்லியடிக்க வேண்டும், இது புரியாத இணையப்போராளிகள் வழக்கம் போல சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

வழக்கம் போல முகநூலிலும், ட்விட்டரிலும் நமது இணையப்போராளிகள், நடுநிலை நக்கிகள், கடந்த சிலநாட்களாக பொங்கி எழுந்து போர்க்களமாக்கி விட்டனர்.  அவர்கள் கருத்திற்கு ஒத்து வராதவர்களை படித்தவர்கள், வல்லவரு, நல்லவரு, வெளிநாட்டில் வேலை செய்யம் பெரிய மனிதர்கள் கூட புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்களே என்ற ஆதங்கம் வேறு. விஷயம் இதுதான் இனி

முகநூலில் வந்த பதிவு.

இந்த ஜனநாயகம் குதிரை பேரம் இரண்டுக்கும் என்ன வித்யாசம்னா

பா.ஜ.க காங்கிரஸ் MLAக்களை அமைச்சர் பதவி தரேன்னு கூப்பிட்டா குதிரை பேரம்.
அதே காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவி தரேன்னு JDS  தலைவரை கூப்பிட்டா ஜனநாயகம்.

இந்த பதிவிற்காகத்தான் சோ கால்டு நடுநிலை நக்கிகளின் பொங்கல்கள்.

இன்னும் சில உபீஸ், நடுநிலை நக்கிகளின் பதிவுகளும், விளைவுகளும்

29 இடங்களில் டெபாசிட் இழந்த பா.ஜ. க ஆட்சிக்கு வருவது எந்த விதத்தில் நியாயம் என்று பொங்கப்போக, 147 தொகுதிகளில் டெபாசிட் இழந்த ம.ஜ.த கட்சி தலைவர் குமாரசாமி முதல்வராக்கி ஜனநாயகம் காப்பாற்றப் பட்டுவிட்டது.

தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது வேணுமென்றால் சிறுநீர் தருகிறோம், என்று சொன்ன குமாரசாமியும், இலங்கை தமிழர்களை கொன்றுகுவித்த காங்கிரசும் சேர்ந்த  கூட்டணி ஆட்சியை கொண்டடுபவன்தான் உண்மையான தமிழ் உணர்வாளன்.

தமிழன்டா...........வீரன்டா...........


Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

வருண் said...

Here is a new joker in politics, Kamal Haasan!

****Kamal Haasan
‏Verified account @ikamalhaasan
24h24 hours ago

Welcome to Democracy Sir. I am proud to congratulate the legitimate Chief Minister of Karnataka. Glad I waited.***

He is welcoming Kumaraswamy for Democracy as if he owns democracy. lol

He is so proud to congratulate legitimate CM Kumaraswamy??!!

Why is he SO proud?! He has won minimum # of seats and how did he become SO legitimate?!

Kumaraswamy is NOT going to give a drop of water. NOt even his "piss"! Does he know or NOT?!!!



வேகநரி said...

//ஆக மொத்தத்தில் இவர்களுக்கு காவிரி தண்ணீர் பகிர்வதில் பிரச்சினை இல்லை. இதை வைத்து இன்னும் கொஞ்சகாலம் அதாவது நாடாளுமன்ற தேர்தல் வரை ஜல்லியடிக்க வேண்டும்,//
முற்றிலும் உண்மை.
மக்களை திசைதிருப்ப ஜனநாயகம் வென்றுள்ளது மலர்ந்துள்ளது என்கிறார்கள்.
இலங்கை தீவிரவாத அமைப்பு எல்டிடிஈ மீதான நடவடிக்கைக்கு காங்கிரஸ் அல்லது இந்தியாவை குற்றம் சாட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை காலத்தின் அவசியம்.

Yarlpavanan said...

அருமையான கண்ணோட்டம்
தொடருவோம்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.