இதோ முன்பே சொல்லியிருந்ததுபோல் அடுத்த போராட்டம் ஆரம்பம். சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு. தற்போது சென்னை-சேலம் இடையே உள்ள 340 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க ஆறு மணி நேரம் ஆகிறது. இப்பொழுது வரும் 10000 கோடி மதிப்பில் உருவாகும் புதிய 8 வழி பசுமை வழிச்சாலையால் 66 கிலோமீட்டர் தூரம் மிச்சமாகும் என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில் இதற்கான தொடக்கமாக அரூர் பகுதியில் அளவு கற்கள் அமைக்கப்பட்டன. அதை தொடர்ந்துதான் அந்த ஊர் மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றுள்ளனர். இது தொடக்கம்தான் இந்த போராட்டம் மேலும் வீறுகொண்டு எழும், மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் போகப் போக மேலும் உக்கிரம் அடையும் பொழுது வழக்கம் போல பஸ் எரிப்பு, ஆட்சியர் அலுவலகத்தில் பாஸ்பரஸ் வீச்சு என்று அதகளமாகும். மிச்சமிருக்கும் டம்ளர் பாய்ஸ்க்கு வேலை வந்துவிட்டது.
அணு உலை வந்தால் உயிருக்கு ஆபத்து!!
அனல் மின்சாரம் காற்றை மாசுபடுத்தும்!!
காற்றாலைகள் மேகத்தை விரட்டி மழையைக் தடுக்கிறது!!!!!!!!!!!??
சூரிய ஒளி மின்சார பேனல்கள் கழுவ தண்ணீர் தரமாட்டோம்!!!
ஆனால் எங்களுக்கு தடையில்லா மின்சாரம் வேண்டும்.
விவசாயத்திற்கு தண்ணீர் கிடையாது.
புதிய தொழிற்சாலைகள் தொடங்க விடமாட்டோம்.
எல்லா போராட்டங்களையும் அரசு அடக்கிவிடும்........ஆனால்
டாஸ்மாக் எதிரா போராட்டமுன்னா மட்டும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, அல்லக்கை கட்சிகள் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து பொத்திக்கிட்டு இருப்பானுங்க.
டாஸ்மாக் சரக்கு உற்பத்திக்கு மட்டும் தண்ணீர் எங்கிருந்து வருகின்றது என்றெல்லாம் நாங்க கேட்கமாட்டோமே? ஏன்னா நாங்கள் எல்லாம் வீரம் விளைஞ்ச தமிழ் மண்ணுல இருக்கிறவனுங்க. ஆமா??

5 comments:
யோசிக்க வைத்த கேள்விதான் நண்பரே
கிள்ளர்ஜி வருகைக்கு நன்றி.
எட்டு வழிச்சாலை என்ன?... பதினாறு வழிச்சாலை கூட அமைக்கலாம், என்ன விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் செய்தால் நன்று. ஏனென்றால் அதி விரைவு சாலைகளினால் வேகமா மட்டுமே போக முடியும், உணவை உற்பத்தி செய்ய முடியுமா…?
எமக்கு வேண்டாம் என்கின்ற அடுத்த போராட்டம் ஆரம்பித்து விட்டார்களா :)
தொழிற்சாலைகள் வேண்டாம், அது வேண்டாம்..இப்படி இந்தியாவில் பேசுபவர்களில் பொரும்பான்மையோரை நீங்க கவனித்தா, அவர்கள் மிக விலைமதிப்பான ஐபோன் வரிசை போன்களில் மிகவும் நவினமான, விலைஅதிககமான ஒன்றையே வைத்திருப்பார்கள்.
நல்லதொரு அர்த்தமுள்ள பதிவு.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.