Lion King
லயன் கிங் முதலில் வந்தது 1994ல், அப்பொழுது எனது மகனிற்கு நான்கு வயது, இந்த படத்தின் "ஒளிநாடா" அவனுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தோம். பிறகு ஒவ்வொரு நாளும் நாங்கள் காலையில் முழிப்பதே இந்த படத்தின் முதல் பாட்டு ஒலி கேட்டுத்தான், சுப்ரபாதம் போல் ஒலிக்கும். பள்ளி விடுமுறை நாட்களில் நான்கு முறையும், பள்ளிநாட்களில் இரண்டு முறையும் வீட்டில எல்லோரும் கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும்.
அதற்குப் பிறகு இதனை லைவ் ஆக ஹாங்காங்கிலிலும், லாஸ் ஏஞ்சலிசிலும் நிறைய முறை பார்த்தாகிவிட்டது. இன்று சிக்காகோவில் மறுபடி வேறு வித அனிமேஷனில் உருவாகியிருக்கும் அதே படம் பார்த்தேன், இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு 3D வடிவில் லயன்கிங், ஒரு புது அனுபவம்.
லயன்கிங், ஜங்கிள்புக், டாம்அண்ட் ஜெர்ரி எல்லாம் எப்பொழுது பார்த்தாலும் நம்முள் இருக்கும் "ரெட்டைவால் ரங்குடுவை" உசுப்பி விடுகிறது என்றால் மிகையாகாது.
காப்பீடு முக்கியம்
மருத்துவ காப்பீடு இப்பொழுதெல்லாம் மிகவும் அத்யாவஸ்யமான ஒன்று. அது அம்பாசமுத்திரத்தில் இருந்தாலும் சரி இல்லை அண்டார்டிகாவில் இருந்தாலும் சரி. பணியில் இருந்த பொழுது இந்த பிரச்சினை வந்ததில்லை. கவலை இல்லாமல் இருந்து விட்டேன். ஆனால் இப்பொழுது ஓய்வு பெற்ற பின் மகளுடன் இருக்க சிகாகோ வரும் பொழுதுதான் பிரச்சினை. இந்தியாவிலிருந்தே காப்பீடு எடுத்துக்கொண்டு வரலாம் என்றால், இங்கு அதை சீண்டக்கூட மாட்டார்கள். நீங்கள் அங்கு கட்டும் பிரமீயம் நேரு கணக்கில் (அது என்ன எப்பவும் காந்தி கணக்கு) போய்விடும். ஆதலால் இங்கு வந்தவுடன் எடுக்கலாம் என்று அசால்ட்டாக இருந்துவிட்டேன். ஆனால் பிரச்சினை ப்ளேனில் கொடுத்த சீஸ் மசாலாவில் வந்தது. அதை சாப்பிடும் பொழுது எனது கிரீடத்தை இழந்து விட்டேன். இது ஒன்றும் மனிமுடியல்ல, பெரிய தலைப்பு செய்தியாக வர, கடவாய்ப்பல்லில் ரூட் கெனால் செய்து மேல இட்ட கிரௌன் சீசுடன் ஒட்டிக்கொண்டு வந்து விட்டது. சரி அப்படியே பெவிக்கால் போட்டு ஒட்டிக்கலாம் என்று பல் டாக்டரிடம் போனால், அவர் அது அப்படி ஒன்று சுலபமல்ல, உங்க பல்லுக்கு பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்து வேலை செய்யணும், ஆதலால் இவ்வளவு ஆகும் என்று ஒரு பில்லைக் கொடுத்தார். அந்த பில்லில் நம்ம வூருல 32 பல்லையும் தங்கத்திலேயே செய்து கொடுப்பார்கள்.
என்ன செய்ய அடுத்த முறை வரும் பொழுது "சீஸ்" பக்கம் போகக்கூடாது, இல்லை அலிக்கோவில் முறைவாசல் செய்துவிட்டுதான் கிளம்பவேண்டும்.
ரசித்த கவிதை
தாமரைப்பூவில் வண்டு வந்து
தேனருந்த மலர் மூடிக்கொள்ள
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
என் உள்ளத்திலே நீ நின்று ஆடுகிறாய்
நன்றி: ??????
தமிழ் திரை உலகம்
"உலக்கை நாயகன்" பெரிய முதலாளியில் (BIG BOSS) எத்தனையோ பேரை கொண்டு வந்து கல்லா கட்டுகிறார், அனால் இன்று வரை சின்னையா புகைவிடும் ரேஞ்சுக்கு இன்னும் ஒருத்தரை கொண்டு வரவில்ல என்பது ஒரு பெரிய குறையே..................

2 comments:
வழக்கம் போல் காக்டெயில் சிறப்பு. லயன் கிங் ஹிந்தியில் ஷாருக் கான் பேசுகிறார் சிங்கத்தின் குரலை... அதற்காகவே பார்க்கத் தோன்றவில்லை.
மருத்துவ காப்பீடு உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொண்டேன்.
தனது சொந்த குடிமக்களுக்கு நல்ல மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கும் நாடுகளுக்கு கூட வெளிநாட்டவர் செல்வதனால், அவர் எந்த வயதை கொண்டவராயினும் மருத்துவ காப்பீடு எடுத்து செல்வதே தேவையானது.
எந்தவொரு நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் வெளிநாடு செல்லும் போது //மருத்துவ காப்பீடு இப்பொழுதெல்லாம் மிகவும் அத்யாவஸ்யமான ஒன்று.// உண்மை.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.