Thursday, 4 July 2019

உலகக்கோப்பையும், லாஸ்லியாவும் மற்றும் இத்துப்போன ஈழமும்

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி அரை இறுதி இடத்தை பங்களாதேஷ் அணியை வென்று உறுதி செய்துவிட்டது. இதுவரையில் நமது பலவீனங்களை உணர்ந்து எல்லா அணிகளிடனும் நன்றகாவே ஆடினார்கள், இங்கிலாந்து நீங்கலாக. வழக்கம் போல் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா ரசிகர்கள் புகைவிட ஆரம்பித்து விட்டனர். இதில் பாகிஸ்தானும், பங்களாதேஷ் அணிகள் இந்த போட்டிகளில் பிரமாதமாக ஆடினார்கள், அனால் இலங்கை அணி சொதப்பிய சொதப்பல்கள் கிரிக்கட் உலகம் அறிந்தது. இங்கிலாந்தை  வென்றது அவர்களின் ஆட்டம் அன்று சிறப்பாக இருந்தது. பங்களாதேஷ் ரசிகர்களும், பாக் ரசிகர்களும் சற்று அடங்கிவிட்டார்கள், ஸ்ரீலங்கா ரசிகர்கள்?.

இப்பொழுது வழக்கம்போல இந்தியா, ஸ்ரீலங்கா ஆட்டத்தை பார்க்க இந்திய ரசிகர்கள் ஆவலாக உள்ளார்களோ இல்லையோ, ஸ்ரீலங்கா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். சமீபத்திய இந்திய ஸ்ரீலங்கா போட்டிகளின் முடிவுகள் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கு சாதகமாக இல்லை. இருந்தாலும் முகநூலில் பொங்கல் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எது எப்படியோ ஓவியா "பெரிய முதலாளி" வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு மையத்தாரின் ஆஸ்தான ஷோவிற்கு பார்வையாளர்கள் குறைந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இப்பொழுது நடக்கும் பெரிய முதலாளியில் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாச்லியா பங்குபெறுகிறார். இலங்கை கிரிக்கட்டில் சோர்ந்து போயிருக்கும் ரசிகர்களுக்கு, இலங்கை தோல்விமுகம் காணும் பொழுது சிறிது லாஸ்லியாக்கும் "ஜொள்ளுகிறார்கள்".

"பேண்டவர்" ஆறாம் தேதி வரை லாஸ்லியா வெளியேறாமல் பார்த்துக்கொள்வது அவருக்கும் இலங்கை கிரிக்கட்டுக்கும் நல்லது.

அது சரி அது என்ன இத்துப்போன ஈழம்?, அதற்கு நம் தொம்பிகளை தான் கேட்கவேண்டும். ஆமைக்கறியார் தலைவர் எப்படி சம்பாதித்தார் என்று சமீபத்திய செய்திகள் எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டது.


Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாங்க தல... ரொம்ப நாள் காணோம்...?

கும்மாச்சி said...

நன்றி தனபாலன், இனி அடிக்கடி பார்க்கலாம்.பணி ஓய்வு பெற்றாகிவிட்டது.

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா...ஸ்ரீலங்கா வென்றால் செமி போவதுபோல் பேசுகிறார்கள்.
லாஸ்லியா அடுத்த ஓவியா.. :)

KILLERGEE Devakottai said...

"பெரிய முதலாளி"
ஹா.. ஹா.. ஸூப்பர்

கும்மாச்சி said...

கிள்ளர்ஜி, பரிவை வருகைக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

பணி ஓய்வா! ஓ அம்புட்டு வயசாகிடுச்சா உங்களுக்கு..

பெரிய முதலாளி ஹா ஹா ஹா ஆனால் அவரை எல்லாம் பார்ப்பதில்லையெ...

கீதா

வேகநரி said...

ஸ்ரீலங்கா உலகக்கோப்பை ரசிகர்களாக இலங்கை தமிழர்கள் இருந்து ஆரவாரம் செய்வதை நான் நேரிலேயே கண்டுள்ளேன். தாம் வாழ்கின்ற நாட்டின் வெற்றிக்காக அவர்கள் அதை செய்வதை நான் பாராட்டுகிறேன். இங்குள்ள சிலர் போல் பாக்கிஸ்தான் ரசிகர்களாக தான் இருக்கவே கூடாது.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.