Monday, 5 August 2019

370

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பாக அளிக்கப்பட அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவை இப்பொழுது மத்திய அரசு நீக்கி இருக்கிறது. லால்பகதூர் சாஸ்திரியோ, இல்லை இந்திரா காந்தி அம்மையாரோ இந்தக் காரியத்தை செய்யமுனைந்தும்  அப்பொழுது இருந்த உலக அரசியல் சூழ்நிலை இடமளிக்கவில்லை. தற்பொழுது காலம் கனிந்து வரும்பொழுது மத்திய அரசு அதற்குண்டான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து பின்னர் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறது.

இதுநாள் அரசியல் சாசனம் 370 அதன் கூட 35A இரண்டும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்திருந்தது,

அதன் படி


  • ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்கள் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள், அவர்கள் இந்தியாவிலும் குடியேறலாம், பாகிஸ்தானிலும் குடியேறலாம்.
  • ஜம்மு காஷ்மீருக்கு தனிக்கொடி உள்ளது, அது இந்திய தேசியக்கொடியுடன் ஏற்றப்படவேண்டும், ஆனாலும் இந்திய தேசியக் கோடியை அவமதித்தால் தேசத் துரோக வழக்கு கிடையாது.
  • ஜம்மு காஷ்மீரின் சட்டசபையின் ஆயுட்காலம் ஆறு ஆண்டுகள்.
  • இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் அத்துனை உத்துரவுகளும் ஜம்முகஷ்மீரை கட்டுப்படுத்தாது.
  •  பாராளுமன்றத்தால் அந்த மாநிலத்தில் சில இடங்களுக்கு மட்டுமே சட்ட திருத்தங்களை செய்ய உரிமை உள்ளது.
  • ஜம்மு காஷ்மீரில் உள்ள பெண் மற்ற மாநிலங்களில் உள்ள ஆணை திருமணம் செய்தால் குடியுரிமையை இழப்பார். அதே சமயம் பாகிஸ்தானில் உள்ள ஆணை திருமணம் செய்தால் ஆணிற்கு குடியுரிமை வழங்கப்படும்,
  • ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் அசையா சொத்துக்களை வாங்க முடியாது.
  • காஷ்மீர் மக்களுக்கு வரிச்சலுகை இந்திய அரசாங்கம் அளிக்கவேண்டும்.( இந்த ஓசியை  அனுபவித்துக்கொண்டு நமது தேசியக்கொடியை அவமதிப்பது, நமது ராணுவ வீரர்களை முதுகில் குத்திக் கொலை செய்வது என்பதை ஒரு வித நன்றி உணர்வோடு செய்துகொண்டிருப்பார்கள், நாம் கண்களை மூடி  இருக்க வேண்டும்)
இப்பொழுது இந்திய அரசாங்கம் இதுக்குத்தான் ஆப்பு வைத்திருக்கிறது. 

வழக்கம் போல சுடலை கோஷ்டி இதை எதிர்த்து கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறது.

இதனால் நாட்டுக்கு நன்மையா தீமையா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. சைக்கோ, சுடலை, குருமா இவர்கள் எல்லாம் எதிர்க்கிறார்கள் என்றால் மத்திய அரசின் முடிவு நன்மைக்காகத்தான் இருக்கும்.

 

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

வேகநரி said...

சரியான ஒரு நல்ல பதிவு.
//வழக்கம் போல சுடலை கோஷ்டி இதை எதிர்த்து கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறது.// :)
சுடலை கோஷ்டிகளின் போராளி மசூட் அசார் சொல்கிறார் இந்திய பிரதமர் தனது தோல்வியை ஏற்று கொண்டுவிட்டார், இதற்காகவே சுடலை கோஷ்டிகள் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை ஆதரிப்பது தானே சரியானது!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.