Wednesday, 14 August 2019

தமிழ் மணத்திற்கு என்னாச்சு?

வலைப்பதிவுகளை திரட்ட நிறைய திரட்டிகள் வந்து போனாலும் ஓரளவிற்கு களத்தில் நின்று  விளையாடியது "தமிழ்மணம்" என்று சொன்னால் அது மிகையாகாது.
யோவ் தமிழ்மணத்திற்கும் எனக்கும் என்னையா தொடர்பு,

சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை என்று பல சிறப்பு அம்சங்களுடன் திரட்டிகளில் தனித்துவமாக இயங்கிக்கொண்டிருந்தது.

நடுவால த இன்ட்லி, ஈகரை, நியூஸ் பானை, தமிழ் திரட்டி, நம்குரல், பதிவர், தமிழ்களஞ்சியம் என்று எத்துணையோ திரட்டிகள் வந்து சிறிது  காலம் இயங்கி பின்னர் மாண்டு போய்விட்டன.

சமீபகாலமாக நம்முடைய பதிவுகள் சமர்ப்பிக்க தமிழ்மணம் ஒன்றே இருந்து வந்தது, ஜூலை 26ம் தேதிக்கு பிறகு தமிழ்மணம் இயங்குவதாக தெரியவில்லை. இந்த பிரச்சினை எனக்கு மட்டும்தானா இல்லை அகில உலகத்திற்குமா என்று விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தினால் காஷ்மீரில் "தால்" ஏரிக்கரை ஓரம் ஒன்றரை ஏக்கர் நிலமும், ஒரு ஆப்பிள் தோட்டமும் எழுதிக்கொடுக்க தயாராக இருக்கிறேன்.

இந்த சலுகை அம்பானி கடை போடும்வரைதான்.

ஆதலால் சக பதிவர்கள் முந்திக்கொள்ளவும்.

அதுவரை என்னுடைய மொக்கைகள் முகநூலிலும், கீச்சுலகிலும் தொடர்ந்து வந்து தாளிக்கும்.

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

KILLERGEE Devakottai said...

ஆப்பிள் தோட்டம் எனக்கில்லே... எனக்கில்லே... சொக்கா.....

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ஹா... ஹா...

Thulasidharan V Thillaiakathu said...

தமிழ்மணத்துல யாராலயுமே இணைக்க முடியலைன்றது அகிலத்துக்கும்னு சொல்ல மாட்டோமாக்கும். ஹிஹி..முதல்ல எழுதிக் கொடுங்க....கூடவே இத்த சொன்னதுக்கு எங்க டிமாண்டு அம்பானிக்குப் போட்டியா....கொஞ்சம் அந்தாண்டை போய் லைனுக்கு அப்பால இல்லைனா ஒட்டி எழுதித்தாங்க பார்ப்போம்!!!!!!!!! ஆனா அம்பானிக்கும் முன்னாடியே டீக்கடை வரப் போகுதாம்...

கீதா

கும்மாச்சி said...

யாரும் சொல்லமாட்டீங்க, அதானே, உங்களுக்கு காஷ்மீரில் கடைபோட அதிர்ஷ்ட்டம் இல்லை, என்னவோ போடா மாதவா

வேகநரி said...

நான் தமிழ் படிப்பதே தமிழ் மணத்திற்கு வந்து தான்.தற்போது இயக்கம் இல்லாம உள்ளது.
உங்க காஷ்மீரில் ஆப்பிள் தோட்டம் வழங்கும் பரிசு திட்டத்தை பாகிஸ்தானோ, தமிழக போராளிகளோ ஏற்று கொள்வார்களா!

'பரிவை' சே.குமார் said...

ஹா...ஹா...

வெங்கட் நாகராஜ் said...

:))) இருந்த ஒரு திரட்டியும் ஒழுங்காக வேலை செய்வதில்லை இப்போது!

காஷ்மீரில் ஒரு ஆப்பிள் தோட்டம்! ஹாஹா... ஆசை தான்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.